
துளசி செடி இந்து மதத்தில் புனிதமான தாவரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்து மத நம்பிக்கையின் படி, செல்வத்தின் தெய்வமான லட்சுமி, துளசி செடியில் வசிப்பதாக நம்பப்படுகிறது. துளசி செடியை சரியாக வழிபட்டால் அல்லது சரியாக கவனித்துக்கொண்டால், அந்த நபருக்கு வீட்டில் எந்த நிதி பிரச்னையும் இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
இந்து மத நம்பிக்கைகளின்படி, கார்த்திகை மாதத்தில் வியாழக்கிழமை தினத்தில் துளசிச் செடியை வைக்க வேண்டும். துளசி செடியை வீட்டில் வைக்குபோது, வாஸ்து பரிந்துரைக்கப்பட்ட திசையில் மட்டுமே வைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது வடக்கு அல்லது வடகிழக்கு திசையாகும். கிழக்கு திசையிலும் வைக்கலாம். வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, துளசி செடியை தென்கிழக்கு திசையில் வைக்கக்கூடாது ஏனென்றால், இது நெருப்பு கடவுள் அல்லது அக்னியின் திசையாகும்.

துளசி செடிக்கு பிரத்யேக இடம் தேவை. துளசி செடியை வைக்கும் பகுதி சுத்தமாக இருப்பதை உறுதி செய்வது நல்லது. கள்ளி போன்ற கடினமான அல்லது முட்கள் நிறைந்த தாவரங்களுக்கு அருகில் துளசி செடியை வைக்க வேண்டாம். வீடுகளில் துளசியை தரையில் நடவு செய்வது நல்லதல்ல. வீட்டில் துளசி செடியை வைக்கும்போது, வீட்டின் அடித்தளத்தை விட உயர்ந்த மேடையில் வைக்க வேண்டும். அதாவது, துளசிச் செடியின் முழுப் பயனைப்பெற துளசி மாடம் அல்லது தொட்டியில் நடவு செய்ய வேண்டும்.
எத்தனை துளசி செடிகளை வைக்க வேண்டும்? என்ற கணக்கும் உள்ளது. வாஸ்து வழிமுறைப்படி ஒன்று, மூன்று, ஐந்து போன்ற ஒற்றைப்படை எண்களில்தான் வீடுகளில் துளசியை நடவு செய்து வளர்க்க வேண்டும். துளசி செடிக்கு தண்ணீர் ஊற்ற எந்த உலோகம் மங்களகரமானதாக கருதப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டாமா?

இந்து மதத்தில், துளசி செடிக்கு தண்ணீர் கொடுப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. பொதுவாக ஏதாவதொரு உலோகத்தைப் பயன்படுத்தி துளசி செடிக்கு தண்ணீர் விட வேண்டும். சரியான உலோகத்தைப் பயன்படுத்தி துளசி செடிக்கு தண்ணீர் வழங்குவது பலனளிக்கும். மத நம்பிக்கைகளின்படி, செப்பு பாத்திரங்களைப் பயன்படுத்தி துளசி செடிக்கு தண்ணீர் வழங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், துளசிக்கு செம்பு பாத்திரம் மூலம் தண்ணீர் ஊற்றினால், அந்த நபரின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறுகிறது. ஒவ்வொரு நாளும் செப்பு பாத்திரத்தில் இருந்து துளசிக்கு தண்ணீர் வழங்கினால், அவர் எப்போதும் செல்வத்தின் தெய்வமான லட்சுமியின் ஆசீர்வாதத்தைப் பெறுகிறார். மத நம்பிக்கைகளின்படி, துளசி செடி பணத்தை ஈர்க்க உதவுகிறது. இது லக்ஷ்மி தேவிக்கு பிரியமானதாகவும் கருதப்படுகிறது. இதனால்தான் துளசிக்கு செம்பு பாத்திரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றுவதால் செல்வம் சேரும் என்று நம்பப்படுகிறது.
Also Read : வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி! இந்த ஒரு நம்பர உங்க ஃபோன்ல சேவ் பண்ணாலே போதும்..!
வீட்டில் துளசி வளர்த்து அதற்கு செப்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றுவதால் எப்போதும் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும். வீட்டில் உள்ள துளசி செடி அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். அறிவியல்படி பார்த்தோமேயானால், வீட்டில் துளசி இருப்பது மன அழுத்தத்தை குறைக்கும் என்று ஆயுர்வேதம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ இதழ் உறுதிபடுத்தியுள்ளது. துளசி, ஒரு இயற்கை பூச்சி விரட்டியாக செயல்படும். ஜர்னல் ஆஃப் மலேரியா படி, துளசிச் செடி பூச்சிகள் மற்றும் கொசுக்களை தடுக்கிறது. இதனால்தான் துளசியை வீட்டிற்குள் வைத்திருப்பது முக்கியம், குறிப்பாக மழைக்காலத்தில்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry