சட்டவிரோத மணல் கொள்ளை! 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்! நெருக்கடியில் ஆட்சியாளர்கள்!

0
147
Allegations of serious irregularities and malpractices in the mining and sale of river sand in Tamil Nadu, the Directorate of Enforcement (ED) has now summoned as many as 10 district collectors for interrogation.

சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை(Enforcement Directorate – ED) சோதனை நடைபெற்றது. இதில் ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருங்கிய நபர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தப்பட்ட குவாரிகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் 2 பேர் என 10 பேர் கொண்ட குழுவினர், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர்.

கொள்ளிடம் ஆற்றின் நடுவே எவ்வளவு ஆழத்துக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் உதவியுடன், ரப்பர் படகில், ஆழம் கண்டறியும் கருவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த ஆய்வின்போது, 3 அடி ஆழத்துக்கு மட்டுமே மண் அள்ளவேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், 15 அடிக்கும் மேல் மணல் எடுத்து இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

Also Read : மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கொலை வெறித்தாக்குதல்! தலைவிரித்தாடும் இயற்கை வளக் கொள்ளையைத் தடுக்க பாமக வலியுறுத்தல்!

இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 மணல் குவாரிகள் குறித்த விவரங்களை ஒப்பந்ததாரர்களை வரவழைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதேநேரம், சட்டவிரோதமாக அள்ளப்பட்ட மணல் விற்பனை குறித்த விவரங்களை சேகரித்துத் தருமாறு நீர்வளத்துறை பொறியாளர்களிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையின்போது அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

ஆனால், அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களை கைகாட்டியதாக கூறப்படுகிறது. மணல் அள்ளுவதைப் பொருத்தவரை, மாவட்ட ஆட்சியர்கள்தான் மாவட்டங்களில் அதிக அதிகாரம் கொண்டவர்கள். இதையடுத்து விசாரணைக்காக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விரைவில் விசாரணை அதிகாரிகள் முன் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி பல்வேறு மணல் குவாரிகளில் அமலாக்கத் துறை திடீர் சோதனைகளை நடத்தியது. சிசிடிவி ஹார்ட் டிஸ்க்குகள், கணினி ஹார்ட் டிஸ்க்குகள், போலி ரசீதுகள் மற்றும் போலி கியூஆர் குறியீடுகள் உள்ளிட்ட ஆவணங்களை ED பறிமுதல் செய்தது. மணல் அள்ளுதல் மற்றும் விற்பனையை கண்காணித்து வரும் நீர்வளத்துறைக்கு, விபரங்களை கேட்டு அமலாக்கத்துறை ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read : தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் கொள்ளை! துணைபோகும் பொதுப்பணித்துறை? கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்!

இதனிடையே, சென்னை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரையில் உள்ள செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்களுக்கு தமிழக நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் ஜெனரல் ஏ.முத்தையா கடந்த மாதம் 12-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நமது நிறுவனத்தில் உள்ள உள் குழப்பத்தை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது. சட்டவிரோத மணல் கொள்ளை மற்றும் அது தொடர்பான பணமோசடி குற்றத்தை விசாரிக்கும் அமலாக்கத் துறைக்கு தெரியப்படுத்த  வேண்டிய அவசர நேரம் இது. மேலும் மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வருமான வரிக் கணக்குகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான சொத்து பட்டியல்,  அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு ஆகிய விவரங்களை சேகரித்து வெள்ளிக்கிழமைக்குள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்தக் கடிதம் எழுதிய சில நாட்களுக்குப் பிறகு அவர் விடுப்பில் சென்றுவிட்டார். அவருக்கு பதில் வேறு அதிகாரியும் நியமிக்கப்பட்டுள்ளது.

மணல் குவாரியில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாகவே வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் எ.வ. வேலுவிற்கு சொந்தமான இடங்களிலும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களையும் குறிவைத்து சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமாக மணல் அள்ளி விற்பனை செய்ததில் சுமார் 7 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry