வெயிட் குறைக்கனுமா..? இதை டிரை பண்ணுங்க, கைமேல ரிசல்ட்..! மரணத்தையே தள்ளிப்போடும் கருஞ்சீரகம்…!

0
94
Black Cumin is flavorful, boasts medicinal properties, and can even be consumed while pregnant. Supplements may benefit your health, but more research is needed | Getty Image.

கருஞ்சீரகம்… இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் `கிருஷ்ண ஜீரகா’, `குஞ்சிகா’, `உபகுஞ்சிகா’, `உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் `Black cumin’, `Small Fennel’ என்றும், இந்தியில் `காலாஜீரா’, `கலோன்ஜி’ என்றும் சொல்வார்கள். பல மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும்.

இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது’ என்று நபிகள் நாயகம் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். யுனானி மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இதை உணவில் சேர்த்துப் பயன்படுத்துகிறார்கள். பைபிளிலும் கருஞ்சீரகத்தைப் பற்றியக் குறிப்பு இருக்கிறது.

மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள `தைமோகுயினன்’ (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை. இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். மேலும், அமினோ அமிலங்கள்,  வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்றவையும் இதில் உள்ளன.

Black cumin oil

சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் ஆகச் செயல்படும் கருஞ்சீரகம், வீக்கம் தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாசப் பிரச்னைகள் நெருங்காமல் உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தரும். இதயநோய், புற்றுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதபடி பாதுகாக்கும். குறிப்பாக, கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மிகச் சாதாரணமாகப் பலரையும் பாடாய்ப்படுத்தி வரும் மூக்கடைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை 50 மி.லி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு விலகும். ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரகக் கற்களும் பித்தப்பைக் கற்களும் கரையும். இதை காலை, மாலை இரண்டுவேளையும் சாப்பிட்டு வரவேண்டியது அவசியம்.

தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை, அரை டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம். இது நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும். தோல் நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து. கரப்பான், சொரியாசிஸ் உள்ளவர்கள் கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளிக்கலாம். இதனால் நோயின் தீவிரம் குறையும்; அதனால் ஏற்பட்ட புண்களும் தழும்புகளும் மறையும். குளியல் பொடிகளில் இதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

Also Read : ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும் வெட்டுக்கிளி டெக்னிக்! மருந்து, மாத்திரை வேண்டாம்..! The Science Behind Cricket Feet!

மாதவிடாய்க் கோளாறுகளின்போது அடிவயிறு கனமாகி, சிறுநீர் கழிக்கச் சிரமப்படும் பெண்களுக்கு இது நல்ல மருந்து. வறுத்துப் பொடித்த கருஞ்சீரகத்துடன் தேன் அல்லது கருப்பட்டி கலந்து, மாதவிடாய் தேதிக்கு 10 நாள்கள் முன்பிருந்தே ஒரு டேபிள்ஸ்பூன் சாப்பிடலாம். இது வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும்; வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும். பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து காலை, மாலை என ஐந்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

இதேபோல் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் சேர்த்து தயாரிக்கப்படும் கருஞ்சீரக டீ மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, காலை மற்றும் இரவு நேரத்தில் நீரில் கொதிக்கவைத்து வடிக்கட்டி தேவையான இனிப்பு சேர்த்து குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்டதும் வேறு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. இப்படித் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்களும் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேறும்; தேவையற்ற கொழுப்பு நீங்கும்; ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும். (நந்தி ஃபுட்ஸ் கருஞ்சீரகம் டீ நேரடியாக ஆர்டர் செய்ய வாட்ஸ் அப் – 9444086655)

Amazon : https://www.amazon.in/Antioxidant-Cancer-Fighting-Properties-Bacteria-Fenugreek/dp/B0CSPJQJ4X

இந்த டீயில் கருஞ்சீரகத்துடன் வெந்தயம், ஓமம் கலந்திருப்பதால், வயிறு பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உடல் சூடு குறையும். நீரிழிவு நோய்க்கு வெந்தயம் சிறந்த நிவாரணம் தருவதுடன், வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு தீர்வு தரும். உடல் பருமனைக் குறைக்க கருஞ்சீரகம் டீ அருமருந்தாகும். மேலும் உடல் வீக்கத்துக்கு இது சிறந்த நிவாரணியாக உள்ளது. கல்லீரலைப் பாதுகாக்கவும் உதவும். இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும். குடல்புண்களுக்கு நிவாரணம் தரும். அஜீரணம், வாயுக்கோளாறுக்கு தீர்வு கிடைக்கும்.

தற்போதைய வாழ்க்கைச் சூழலில் உடல் பருமன் மனித குலத்தை அச்சுறுத்துகிற விஷயமாக இருக்கிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்த உடல் பருமன் பிரச்சினை தான். இதய நோயால் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள். அந்த இதய நோய்க்கு மிக அடிப்படையான ஆதாரமாக இருப்பதே இந்த உடல் பருமன் தான். இதற்கு மருத்துவ சிகிச்சைகள் பல இருந்தாலும், அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் இயற்கையாக கருஞ்சீரக டீ போன்றவற்றை அருந்துவதுடன், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைப்பது நல்லது.

சரியான உடல் எடையுடன் இருப்பவர்கள் கருஞ்சீரகம் டீ குடித்தால் இளைத்துவிடுவார்களா என்றால் இல்லை. உடல் பருமன் உள்ளவர்களுக்கு கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கருஞ்சீரகத்துக்கு இருப்பதால், அவர்களது உடல் எடை குறைகிறது. சாதாராண உடல் எடையுடன் இருப்பவர்களுக்கு மற்ற நன்மைகள் ஒருங்கே கிடைக்கப்பெறும்.

Also Read : கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள 10 வெஜ் உணவுகள்! யார் யாருக்கு எவ்வளவு இரும்புச்சத்து தேவை?

உணவுக் கட்டுப்பாடு எனும் டயட் என்றால் நாம் ஏதோ பெரிய கஷ்டமான விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் டயட் என்பதன் பொருள் என்னவென்றால் உணவுக் கட்டுப்பாட்டு முறை என்பது தான். இன்றைய காலகட்டத்தில் டயட்டுக்கா பஞ்சம். எக்கச்சக்க டயட்டுகள் இருக்கின்றன. அதிலும் எடையைக் குறைப்பதற்கென்று மிலிட்டரி டயட், பேலியோ டயட், கீட்டோ டயட் என எக்கச்சக்க டயட்டுகள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனாலும் அவ்வளவு பெரிய ரிசல்ட் நிரந்தரமாகக் கிடைப்பதில்லை.

சிலர் எல்லா டயட்டையும் ஃபாலோ பண்ணிட்டேன், ஆனா என் தொப்பை என்னை ஃபாலோ பண்ணிக்கிட்டே தான் இருக்கு என்று புலம்புவார்கள். அவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகவாகவும், அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு மேஜிக்கல் மாற்றத்தை கருஞ்சீரக டீ ஏற்படுத்தும். உங்களுக்குப் பிடித்த எல்லாவற்றையும் சாப்பிடலாம். ஆனா இந்த டீயை ஒரு நாளைக்கு 2 முறை குடித்தால் போதும். இரத்த உறைவுக்கு நீங்கள் மருந்து எடுத்துக் கொண்டால், கருஞ்சீரகம் டீ அல்லது கருஞ்சீரம் தொடர்பான பொருட்கள் எடுத்துக்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry