ஐபிஎல் 2025 – சிஎஸ்கே அணியில் நீடிக்கும் தோனி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
22
Legendary Chennai Super Kings (CSK) wicketkeeper batter MS Dhoni will return to play IPL 2025 as an uncapped player after being retained by his team for next season.

18-வது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான மெகா ஏலம் டிசம்பரில் நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியல்.

சென்னை சூப்பர் கிங்ஸ் : ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), மதீஷா பதிரானா (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ.4 கோடி).

மும்பை இந்தியன்ஸ்: பும்ரா (ரூ.18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), ரோகித் சர்மா (ரூ.16.30 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி).

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி (ரூ.21 கோடி), ரஜத் படிதார் (ரூ.11 கோடி), யஷ் தயாள் (ரூ.5 கோடி).

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: பாட் கம்மின்ஸ் (ரூ. 18 கோடி), அபிஷேக் சர்மா (ரூ. 14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி (ரூ. 6 கோடி) ஹென்ரிச் கிளாசென் (ரூ.23 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி).

குஜராத் டைட்டன்ஸ்: ரஷித் கான் (ரூ.18 கோடி), ஷுப்மன் கில் (ரூ.16.5 கோடி) சாய் சுதர்சன் (ரூ. 8.5 கோடி) ராகுல் டெவாடியா (ரூ. 4 கோ) ஷாருக்கான் (ரூ.4 கோடி).

பஞ்சாப் கிங்ஸ்: ஷஷாங்க் சிங் (ரூ.5.5 கோடி), பிரப்சிம்ரன் சிங் (ரூ. 4 கோடி).

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (ரூ.18 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), ரியான் பராக் (ரூ. 14 கோடி), துருவ் ஜூரல் ( ரூ.14 கோடி), ஹெட்மயர் (ரூ. 11 கோடி), சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரிங்கு சிங் (ரூ. 13 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ. 12 கோடி), சுனில் நரைன் (ரூ. 12 கோடி), ஆண்ட்ரே ரஸ்ஸல் (ரூ. 12 கோடி), ஹர்ஷித் ராணா (ரூ. 4 கோடி), ரமன்தீப் சிங் (ரூ. 4 கோடி)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன் (ரூ. 21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மொஹ்சின் கான் (ரூ. 4 கோடி), ஆயுஷ் படோனி (ரூ.4 கோடி).

டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்சர் படேல் (ரூ.16.5 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி) அபிஷேக் போரல் (ரூ.4 கோடி).

மேலும் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் ஆகிய் மூவரும் கடந்த சீசனில் அவர்கள் விளையாடிய அணியிலிருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry