
ரிலையன்ஸ் நிறுவனத்தின் `ஜியோ சினிமா’ ஓ.டி.டி தளமும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளமும் தற்போது இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு ஓ.டி.டி தளங்களில் இருக்கும் கன்டென்ட்கள் அனைத்தும் இனி `ஜியோ ஹாட்ஸ்டார்’ என்ற ஒரே தளத்திற்கு கீழ் வந்துவிடும்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் `ஜியோ சினிமா’ ஓ.டி.டி தளமும், ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளமும் ஒன்றிணையவிருக்கிறது என கடந்தாண்டே பேசப்பட்டு வந்தது. இந்த இரண்டு ஓ.டி.டி தளங்களும் அதிகாரப்பூர்வமாக தற்போது இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஓ.டி.டி தளத்திற்கு `ஜியோ ஹாட்ஸ்டார்’ என பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்த இரண்டு ஓ.டி.டி தளங்களில் இருக்கும் கன்டென்ட்கள் அனைத்தும் இனி `ஜியோ ஹாட்ஸ்டார்’ என்ற ஒரே தளத்திற்கு கீழ் வந்துவிடும். ஐ.பி.எல், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், சர்வதேச பிற விளையாட்டுப் போட்டிகள் என அனைத்தும் இனி இந்த ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பபடும். இதுமட்டுமல்ல, டிஸ்னி, வார்னர் ப்ரோஸ், எச்.பி.ஒ, என்.பி. சி யுனிவர்சல் பீக்காக், பாரமவுண்ட் பிக்சர்ஸ் என உலகின் டாப் தயாரிப்பு நிறுவனங்களின் கன்டென்ட்கள் அனைத்தும் இனி இந்த ஒரே தளத்தில் வந்துவிடும்.
ஐ.பி.எல் உள்பட பல பிரபலமடைந்த விளையாட்டுப் போட்டிகளை ரசிகர்கள் இதுவரை இலவசமாக பார்த்து வந்திருப்பார்கள். ஆனால், இனி அந்த வசதி கிடையாது. இந்த ஓ.டி.டி தளத்திற்கு சந்தா செலுத்திதான் அந்தப் பிரபலமான விளையாட்டுப் போட்டிகளை பார்க்க முடியும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
Also Read : விரைவில் ஸ்மார்ட்போனுக்கு மூடுவிழா..! புரட்சி செய்ய வருகிறது ஏ.ஐ. தொழில்நுட்பத்திலான புதிய சாதனம்!
அதே சமயம் மற்றொரு பக்கம் ஹைப்ரிட் மாடல் ஒன்றையும் அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதன் வழியாக ஒரு கன்டென்ட்டின் சில நிமிடங்களை பார்வையாளர்களால் இலவசமாக பார்க்க முடியும். பிறகு, அந்தக் கன்டென்ட்டை அவர்கள் முழுமையாக பார்க்க விரும்பினால் சந்தா செலுத்தி அந்த கன்டெட்டை முழுமையாக பார்த்துக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறார்கள். மேலும், சந்தா கட்டணங்களையும் தற்போது மாற்றியிருக்கிறார்கள்.
Viacom18 மற்றும் ஸ்டார் இந்தியா இணைப்பிற்குப் பிறகு கடந்த நவம்பர் மாதம் ஜியோஸ்டார் உருவாக்கப்பட்ட நிலையில், இப்போது அதற்கான செயலி லான்ச் செய்யப்பட்டுள்ளது. இரு ஓடிடி தளங்களின் இணைப்பிற்குப் பிறகு மொத்த பயனர் எண்ணிக்கை 50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலி தான் ஜியோ ஹாட்ஸ்டார் என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அப்டேட் இன்று வெளியானது. அதன்படி ஹாட்ஸ்டார் வைத்திருக்கும் நபர்கள் அதை அப்டேட் செய்தால் ஜியோ ஹாட்ஸ்டார் என மாறும். ஜியோ சினிமாஸ் அல்லது ஹாட்ஸ்டார் சந்தா வைத்திருப்போர் தானாக ஜியோ ஹாட்ஸ்டாருக்கு எடுத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் தங்கள் சந்தா காலம் முடியும் வரை கூடுதல் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
இந்தியாவில் விளையாடப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர் ஆகியவற்றை இனி ஜியோ ஹாட்ஸ்டாரில் தான் பார்க்க முடியும். இனி ஐபிஎல் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் இல் பார்க்க வேண்டும் என்றால் 144 ரூபாய்க்கு புதிதாக கட்டணம் செலுத்தி சேர வேண்டும்.ஏற்கனவே ஒருவர் ஹாட்ஸ்டாரில் சந்தாதாரராக இருந்தால் அவர் நேரடியாக பணம் ஏதும் கொடுக்காமல் இதில் இணைந்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் புதிதாக வரக்கூடியவர்கள் இனி இந்த தொகைக்கு சந்தா கட்டினால் மட்டுமே ஐபிஎல் தொடரை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry