தற்போது நாகரீகமாக மாறி வரும் கருங்காலி மாலை, எதிர்மறை ஆற்றல்களில் இருந்து நம்மை பாதுகாத்து நேர்மறை ஆற்றலை மேம்படுத்துகிறது. கருங்காலி ஒரு சக்திவாய்ந்த பக்தி, மருத்துவம் மற்றும் அதிசயங்கள் செய்யக்கூடிய ஒரு அற்புதமான மரம். கருங்காலியின் பல்வேறு பண்புகள் மகத்தானவை. கருங்காலி மரம் மின்காந்த கதிர்வீச்சு மற்றும் அலைகளை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. கோவில் கோபுரங்கள், கோவில் விக்ரஹங்கள், சிலைகள், குச்சிகள் மற்றும் வீட்டில் உள்ள பழைய பொருட்கள் என பல இடங்களில் கருங்காலி மரம் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக கருங்காலி இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி அதிகமாகவே இருக்கும். எனவே பணம், செல்வம் பெருக கருங்காலி மாலையை அணியலாம். அல்லது கருங்காலி குச்சிகளை பூஜை அறையில் வைத்து வழிபடலாம். இதன் மூலம் குலத்தெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும். அனைத்து நட்சத்திரகாரர்களுக்கும் உகந்த மரங்களில் ஒன்று தான் கருங்காலி. மிருகசீரிஷம் மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தின் மரம் கருங்காலி மரம்.
கருங்காலி மரம் முருகனுக்கு உகந்த மரமாகும். அதாவது செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. உறுதியான, வலுவான அனைத்து பொருள்களுக்கும் காரகர் நமது செவ்வாய் பகவான் தான். செவ்வாய் என்றால் சொத்து, சகோதரம், ரத்தம், வீரம், தைரியம், வீரியம், கடன், இனம் புரியாத நோய் போன்றவற்றை குறிக்கும்.
கருங்காலி மாலை அணிவதால் குலதெய்வ வழிபாடு தடை, பித்ரு தோஷம், செவ்வாய் கிரக தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சொத்து பிரச்சினை, சகோதரர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு நீங்கும். ஜோதிட சாஸ்திரப்படி ஜனன கால ஜாதகத்தில் செவ்வாய் சுப வலிமை பெற்றவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் நல்ல கதிர் வீச்சுக்கள் நன்மையை தருகிறது.கருங்காலிப் பொருட்களை அணிந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் தோஷம் குறைவதைக் காணலாம். கருங்காலியில் செவ்வாய் கிரகம் அதிக உஷ்ணமும் ஆற்றலும் கொண்டிருப்பதால் செவ்வாயின் கடவுளால் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் போக்க உதவுகிறது.
Also Read : குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் சக்தி வாய்ந்த முறை! குலதெய்வம் வீட்டில் தங்க சிம்ப்பிள் பரிகாரம்!
மேஷம், விருச்சிகம், மிதுன ராசிகளில் உள்ள சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கருங்காலி மாலையை அணியலாம். மிருகசீரிஷம், திருவாதிரை, அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் கருங்காலி மாலையை அணிவது நன்மை தரும் என கூறப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செங்கருங்காலி மாலை அணிவது கூடுதல் நன்மை தரும். மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை, 9, 18, 27-ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கும் கருங்காலி மிகவும் உகந்தது.
நீங்கள் அணியப்போகும் கருங்காலி மாலையோ அல்லது பிரேஸ்லெட்டையோ வாங்கிய பிறகு அதை பன்னீர் அல்லது பாலில் ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் கருங்காலியை சுப நாளில், நல்ல நேரத்தில் அணிந்து கொள்ளலாம். இருப்பினும், செவ்வாய் கிழமை, முருகன் அல்லது வாராஹி அம்மன் கோவிலில் கொடுத்து விக்ரகத்தின் திருவடியில் வைத்தோ அல்லது வீட்டில் உள்ள தெய்வங்களின் புகைப்படங்களுக்கு அருகில் வைத்த பிறகோ அணிவது சிறப்பு. செவ்வாய் கிரகத்திற்கு கருங்காலி மரம் என்பதால் செவ்வாய் கிழமை பரிந்துரைக்கப்படுகிறது.
போலியான கருங்காலி மாலைகள், ருத்ராட்ச மாலைளை ஒரிஜினல் என நம்பி மக்கள் அணிந்து கொள்கிறார்கள். நாம் வாங்கும் கருங்காலி மாலை போலியா உண்மையா என கண்டுபிடிப்பது எப்படி என்பதையும் பார்ப்போம். கருங்காலி மாலையை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அந்த தண்ணீர் பழுப்பு நிறமாக மாறி, கருங்காலி மரத்தில் உள்ள சாறுகள் தண்ணீரின் மேல் எண்ணெய் படலம் போல் உருவாக வேண்டும். அப்படி ஆகாவிட்டால் அது போலி என்பதை தெரிந்து கொள்ளலாம். சிலர் கருங்காலி மாலையில் உள்ள ஒரு உருளையை பிளந்து காட்டுவர். அதை வைத்தும் போலியா உண்மையானதா என்பதை அணிந்து கொள்ளலாம்.
Summary :
கருங்காலியை யார் அணியலாம்?
- கருங்காலியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அணிந்து பயன் பெறலாம்.
- ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கருங்காலி மாலை அணிந்து பலன் பெறலாம். கருங்காலியின் சக்தி ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் தோஷங்களை குறைக்கும்.
- கருங்காலி பொருட்களை மாணவர்கள் தங்கள் நினைவாற்றல் மற்றும் அறிவுத்திறன்களை மேம்படுத்தவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பயன்படுத்தலாம்.
- கருங்காலியை தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் பயன்படுத்தி வியாபாரத்தில் பெரும் முன்னேற்றம் காணவும், நல்ல லாபம் பெறவும் முடியும்.
- வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை வைத்திருப்பவர்கள் ஒரு நல்ல வேலை அல்லது கேரியரில் உயர் பதவிகளைப் பெற கருங்காலியைப் பயன்படுத்தலாம்.
- கண் திருஷ்டி, மாந்திரீகம் போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் அணியலாம்.
- கருங்காலி பொருட்கள் அனைத்து எதிர்மறை விஷயங்களையும் அகற்றும்.
- கருங்காலி மாலைக்கென தனித்துவமான விதிகள் என்று எதுவுமில்லை. அதனால் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் அணியலாம்.
கருங்காலியை யார் அணியக்கூடாது?
- கருங்காலி மாலை அல்லது பிரேஸ்லெட் அணிவதை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும்.
- 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கருங்காலி பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
- அசைவ உணவு உட்கொள்ளும் போது கருங்காலியை ஒதுக்கி வைக்க வேண்டும் அல்லது அகற்ற வேண்டும்.
நன்மைகள் என்ன?
- இது ஒரு பக்தி நல்வாழ்வை உருவாக்க உதவுகிறது மற்றும் ஆன்மீக பாதையில் வாழ ஊக்குவிக்கிறது.
- கருங்காலி ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தின் தோஷங்களை குறைக்கும்.
- அனைத்து தெய்வங்களும் கருங்காலியில் வசிப்பதாகவும், கருங்காலியை வணங்கி அணிந்தால் தெய்வங்களின் ஆசிகளைப் பெறலாம்.
- கருங்காலி நவகிரகங்களின் தாக்கங்களைக் கட்டுப்படுத்தி எதிர்மறையான விளைவுகளை உள்வாங்கும்.
- குலதெய்வத்தை கருங்காலி பொருட்களைப் பயன்படுத்தி அர்ச்சனை செய்து வழிபடலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry