கருப்பு கவுனி அரிசியில் இவ்வளவு சத்துக்களா? மருத்துவ பண்புகள் மற்றும் சமைக்கும் முறை!

0
186
Karuppu kavuni rice is high in antioxidants, particularly anthocyanins, which help protect against chronic diseases. Antioxidants help neutralize harmful free radicals in the body. Getty Image.

கருப்பு கவுனி அரிசி, இந்தியாவில் தமிழ்நாட்டின் செட்டிநாடு பகுதியைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய அரிசி வகை. சமைத்தவுடன் ஊதா நிறமாக மாறிவிடுவது இதன் தனிச்சிறப்பு. பல்வேறு ஊட்டச்சத்துகள் அதிகமாக இருப்பதன் காரணமாகவே கருப்பு கவுனி அரிசியை அரிசிகளின் ராஜா என்கிறார்கள்.

சீன மன்னர்கள், அரச குடும்பத்தினர், மந்திரிகள், பெரு வணிகர்கள் மட்டும் இந்த கருப்பு கவுனி அரிசியை பயன்படுத்தி வந்ததாகவும், பொதுமக்கள் பயன்படுத்தத்  தடை விதிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. அப்படி என்னதான் இந்த அரிசியில் உள்ளது?

100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் :

  • கலோரிகள் : 350 kcal
  • கார்போஹைட்ரேட்டுகள் : 75g
  • புரதம் : 8g
  • கொழுப்பு : 2g
  • நார்ச்சத்து : 4g
  • இரும்புச்சத்து : 2.4 mg (தினசரி தேவையில் இது 13%)
  • மெக்னீசியம் : 60 mg (தினசரி தேவையில் இது 15%)
  • வைட்டமின் E : 1.2 mg (தினசரி தேவையில் இது 6%)
  • ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் : அதிக அளவு அந்தோசயினின் என்கிற சேர்மம் உள்ளது.

Also Read : தினமும் ஒன்று – இரண்டு கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

நிறம் மற்றும் தோற்றம்

மற்ற அரிசிகளைப் போல இல்லாமல் கருப்பு கவுனி அரிசி, கருப்பு அல்லது அடர் ஊதா நிறத்தைக் கொண்டிருக்கும். இது சமைக்கும்போது ஊதா நிறமாக மாறும். வழக்கமான வெள்ளை அரிசியானது பாலிஷ் செய்யப்பட்டு, அதன் வெளிப்புற அடுக்கு நீக்கப்படுகிறது. அதேபோல, பிரவுன் அரிசி பாலிஷ் செய்யப்படாத காரணத்தினால், பழுப்பு நிறத்தில் காணப்பாடுகிறது.  சிவப்பு அரிசியானது அந்தோசயினின்கள் இருப்பதன் காரணமாக அந்த செந்நிற-பிரவுன் நிறத்தைப் பெறுகிறது.

ஊட்டச்சத்து அளவு

மற்ற அரிசிகளைக் காட்டிலும் கருப்பு கவுனி அரிசியில் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன. கருப்பு கவுனி அரிசியில் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக அந்தோசயினின் என்கிற சேர்மம் அதற்கே உரிய தனித்துவமான அடர் நிறத்தை அளிக்கிறது. பாலிஷ் செய்த வெள்ளை அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் குறைவாகவே உள்ளன. வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது பிரவுன் அரிசியில் நார்ச்சத்து அதிகம் மற்றும் அதிக வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் விட அதிக ஊட்டச்சத்துக்கள் கருப்பு கவுனி அரிசியில் தான் உள்ளது.

Getty Image

கருப்பு கவுனி அரிசியின் மாறுபட்ட சுவை

சத்தான சுவை மற்றும் தோற்ற அமைப்பு போன்றவை மற்ற வகை அரிசியில் இருந்து கருப்பு கவுனி அரிசியை வேறுபடுத்திக் காட்டுகிறது.  சற்று நன்கு மென்று உண்ண வேண்டியதாகவும், தனித்துவமான சுவை கொண்டதாகவும் இது அறியப்படுகிறது. வெள்ளை அரிசி இலகுவான சுவையுடன் சாப்பிடுவதற்கு மென்மையாகவும் இருக்கும். பிரவுன் அரிசியும் கிட்டத்தட்ட கருப்பு கவுனி அரிசி போன்ற சுவையையும், மென்று சாப்பிடும் தேவையையும் கொண்டிருக்கும். இருப்பினும் இது கருப்பு கவுனி அரிசியை விட சற்று எளிதாக மெல்லக் கூடியதாக இருக்கும். சிவப்பு அரிசியானது வெள்ளை அரிசியை விட திடமானதாக விவரிக்கப்படுகிறது.

ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன :

கருப்பு கவுனி அரிசியில் சக்திவாய்ந்த ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன; குறிப்பாக அந்தோசயினின்கள் இருப்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அவை ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகளையும் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு குணநலன்களையும் கொண்டுள்ளன.

இதன் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை செயலிழக்கச் செய்வதன் மூலம், ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைப்பதிலும், நமது உயிரணுக்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அரிசியை உணவில் சேர்ப்பதன் மூலம், நாள்பட்ட நோய்களால் ஏற்படும் ஆபத்துக்களை  குறைத்து, ஒட்டுமொத்த உயிரணுக்களின் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

Picture : Pixabay

அதிக நார்ச்சத்துள்ள அரிசி :

கருப்பு கவுனி அரிசியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து செரிமானத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், மலச்சிக்கலைத் தடுப்பதற்கும் உதவுகிறது. மேலும், ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரி சூழலையும் ஊக்குவிக்கிறது. கூடுதலாக, இது இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் மெதுவாக வெளியிடப்படுவதில் உதவுகிறது; அதனால் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதிலும், நீரிழிவு நோயைத் தடுப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. செரிமான ஆரோக்கியத்தை இயற்கையாகவே ஆதரிக்க கருப்பு கவுனி அரிசி ஒரு சிறந்த வழியாகும்.

இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது :

கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவற்றின் கலவையானது இதய ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது. கரையக்கூடிய நார்ச்சத்தானது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது; அதே நேரத்தில் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் LDL கொழுப்பின் ஆக்ஸிடேஷனைத் தடுக்கின்றது. இதனால் இதய நோய் ஏற்படும் அபாயத்தையும் கருப்பு கவுனி அரிசி குறைக்கின்றது. இந்த அரிசியை அன்றாட உணவில் சேர்ப்பது இதயம் தொடர்பான பிரச்சினைகளை சற்று தூரமாக வைக்கின்றன.

Also Read : பூசணி விதைகளில் மூழ்கிக் கிடக்கும் மருத்துவ மகிமை! ஆச்சரியம்… ஆனால் உண்மை..! வயாகரால்லாம் பக்கத்துலயே நிக்காது..!

எடையை நிர்வகிக்க உதவுகிறது :

உடல் எடையை சரியாக பராமரிக்க விரும்பும் நபர்களுக்கு, கருப்பு கவுனி அரிசி ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதில் அதிக நார்ச்சத்தும், குறைவான கிளைசெமிக் குறியீடும் உள்ளதால் ஒட்டுமொத்த கலோரி அளவை கருப்பு கவுனி அரிசி குறைக்கிறது. இதன் நார்ச்சத்து ஜீரணிக்க அதிக நேரம் எடுப்பதால், பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது; மேலும், அதிகப்படியாக சாப்பிடுவதையும் தடுக்கிறது.

சத்தான உணவை சாப்பிடும் அதே வேளையில், உடல் எடையை சீராக பராமரிப்பதைக் கருப்பு கவுனி அரிசி எளிதாக்குகிறது. அதுமட்டுமில்லாமல் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் கல்லீரலை சுத்திகரிக்கும் சேர்மங்கள் கூட இதில் உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் உடலின் வளர்சிதை மாற்றம் சிறப்பாக நிகழவும் எடையை ஆரோக்கியமாகக் குறைக்கவும் இந்த கருப்பு கவுனி அரிசி உதவுகிறது.

க்ளூட்டன் இல்லாத அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் :

கருப்பு கவுனி அரிசியில் இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் E உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகம் உள்ளன. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பேணுவதற்கு இந்த ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாதவையாகும். மேலும், இந்த அரிசியில் பசையம் எனப்படும் க்ளூட்டன் கிடையாது. எனவே Gluten அலர்ஜி உள்ளவர்கள், அல்லது செலியாக் (celiac) நோய் உள்ளவர்கள் சாப்பிட இந்த அரிசி மிகவும் பாதுகாப்பானது.

சேலத்தில் பிரபலமான மதர்ஸ் மார்ட்டில், ரசாயன மருந்து தெளிக்காமல் விளைவிக்கப்படும் கருப்பு கவுனி அரிசி கிடைக்கிறது. கருப்பு கவுனி அரிசி மட்டுமல்லாமல், கஞ்சி மிக்ஸ், புட்டு மிக்ஸ், அவல் – பொங்கல் மிக்ஸ், உப்புமா மிக்ஸ், தோசை மற்றும் சப்பாத்தி மிக்ஸ் என கருப்பு கவுனியில் மதிப்புகூட்டப்பட்ட பொருட்களும் கிடைக்கின்றன. மேலும் அனைத்து வகையான சிறுதானிய அவல்கள், புட்டுகள், பிஸ்கட்டுகள், நூடுல்ஸுகள் கிடைக்கின்றன. தேவைப்படுவோர் 9942994059 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தெரியப்படுத்தலாம்.

Shri Mothers Mart Karuppu Kavuni Kanji

கருப்பு கவுனி அரிசியை சமைக்கும் முறை :

கருப்பு கவுனி அரிசி சாப்பிட கடினமாக இருக்கும் என்று பலர் அதனைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் அதனை சமைக்கும் முறை தெரிந்தால் இந்த சிக்கல் இருக்காது. கருப்பு கவுனி அரிசி நன்கு வேக வேக சுவையும் கூடும். எனவே கஞ்சி வடிவில் சாப்பிடுவது சிறந்தது. வழக்கமான சாதம் போல வடிக்கவும் செய்யலாம். ஆனால் எல்லாவற்றிக்கும் முன் ஒரே ஒரு செயல்முறை மட்டும் தான் உள்ளது.

கருப்பு கவுனி அரிசியை நன்கு கழுவிய பின்பு குறைந்தது 8 மணிநேரம் முதல் 12 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். பின்பு வழக்கமான அரிசியைப் போல சமைக்கலாம். ஆனால் தண்ணீர் சற்று அதிகமாக தேவைப்படும். 1 கப் கருப்பு கவுனி அரிசியை தேவையான நேரத்திற்கு ஊறவைத்த பின்னர் – ஆறு மடங்கு அதாவது 6 கப் தண்ணீரில் வேகவைக்க வேண்டும். கஞ்சி அல்லது சாதம் என எப்படி வேண்டுமோ அதற்கேற்ப வேகவைக்கும் நேரத்தை கூட்டியோ, குறைக்கவோ செய்யலாம். சமைத்த கருப்பு கவுனி அரிசியை மாவாக அரைத்து வடகம் கூட தயார் செய்யலாம்.

Also Read : இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் 6 ஜுஸ்! இரத்த ஓட்டம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!

கருப்பு கவுனி அரிசி குறித்து யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ?

கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும் கூட எரிச்சலுடன் கூடிய குடல் இயக்க நோய் (IBS), க்ரோன்ஸ் நோய் அல்லது கோலைட்டிஸ் (பெருங்குடல் அழற்சி) போன்ற சில செரிமானக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு கருப்பு கவுனி அரிசி பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். இத்தகையோருக்கு வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் அசௌகரியம் போன்ற உபாதைகளை ஏற்படலாம்.

கருப்பு கவுனி அரிசியில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால், நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்கள் இதனை குறைவாகவே சாப்பிட வேண்டும், இல்லையெனில் தவிர்ப்பது நல்லது. கருப்பு கவுனி அரிசியில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, உடலில் அதிக இரும்புச்சத்து உள்ளவர்கள் – அதிக இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது.கருப்பு கவுனி அரிசியில் என்னதான் நார்ச்சத்து இருந்தாலும், அதில் மாவுச்சத்தும் அதிகளவில் உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் மற்ற அரிசியோடு ஒப்பிடுகையில் இதனை சாப்பிடலாம். ஆனால் சாப்பிடும் அளவு மிதமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry