கொண்டைக்கடலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

0
50
Kondakadalai (chickpeas) is a superfood packed with protein, fiber, vitamins, and minerals. Explore its top health benefits and why you should add it to your diet.

நமது ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் நம் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கிறது. சர்க்கரை நோய் இரத்த அழுத்தப் பிரச்சனைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள். உணவுப் பழக்கம் என்பது இதுபோன்ற நோய் பரவலுக்கு பிரதான காரணமாக இருக்கிறது. இரத்த அழுத்தம் என்பது ஒரு நபருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

எலும்புகளுக்கு உறுதி தருவது முதல் மார்பக புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் போராடக்கூடியது வரை அனைத்து முதன்மையான பணிகளையும் செய்யக்கூடியதுதான் கொண்டைக்கடலை. கொண்டை கடலையில், புரோட்டீன், மாவுச்சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து, தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், செலினியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் அடங்கியிருக்கின்றன.

Also Read : ஆட்டோவுக்கு மூன்று சக்கரம் இருக்க இதுதான் காரணமாம்! பொறியாளர்கள் சொல்வது என்ன?

பொட்டாசியம் ஒரு முக்கியமான கனிமமாகும், இது இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடலில் சோடியத்தின் விளைவுகளை சமப்படுத்த உதவுகிறது. சோடியம் காரணமாக உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஒரு கப் சமைத்த கொண்டைக்கடலையில் இருந்து சுமார் 477 மி.கி பொட்டாசியம் கிடைக்கும்.

கொண்டைக்கடலையை நார்ச்சத்துக்களின் சங்கமம் என்றே சொல்லலாம். ஏனென்றால், 1 கிண்ணம் கொண்டை கடலையில் 12.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. உயர் நார்ச்சத்து உணவு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து காரணமாக உடல் பருமன் வேகமாக குறைகிறது. மேலும், இது நரம்புகளில் படிந்திருக்கும் பிளேக்கைக் குறைக்க உதவுகிறது. இது நரம்புகளில் உள்ள அடைப்பைத் திறந்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

From weight management to heart health, Kondakadalai offers numerous health benefits. Find out how this nutritious legume can transform your well-being.

சோடியம் உயர் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அதே நேரத்தில், கொண்டைக்கடலையில் சோடியத்தின் அளவு குறைவாக உள்ளது, இது உடலில் சோடியம் அளவைக் குறைக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக கருதப்படலாம்.

மெக்னீசியம் உடலுக்கு இன்றியமையாத மூலமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த நாளங்களை (நரம்புகள்) தளர்த்த உதவுகிறது. இதன் காரணமாக இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு கப் கொண்டைக்கடலையில் சுமார் 48 மில்லி கிராம் மெக்னீசியம் உள்ளது.

கொண்டைக்கடலை இரத்த அழுத்தத்திற்கு மட்டுமின்றி இதய ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாததாக கருதப்படுகிறது. இதில் வைட்டமின்கள் சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கம் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.

Learn how Kondakadalai (chickpeas) can boost your health, improve digestion, support weight loss, and strengthen immunity with essential nutrients.

முளைக்கட்டிய கொண்டைக்கடலை

ஜிம்முக்கு போகிறவர்கள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், கொண்டைக்கடலையை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்கிறார்கள். கருப்பு, வெள்ளை என இரு வகையான கடலைகளும் நல்லதுதான் என்றாலும், சிறிய அளவிலான கறுப்பு கொண்டைக் கடலையில், ஏராளமான நார்ச்சத்து உள்ளதாம்.

எனவே, இந்த கொண்டைக்கடலையை முளைக்கட்டி சாப்பிட்டால், கொழுப்பு விரைந்து கரைகிறது. இந்த கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக உள்ளது.

மலச்சிக்கலை போக்கும் கடலை

கருப்பு கொண்டைக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை போக்க முடியும். கொண்டைக்கடலை நாள்பட்ட நோய்களை விரட்டவும் உதவுகிறது. சருமம் வயதாகுவதையும் முன்கூட்டியே தடுக்கிறது. ஏனென்றால், இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகின்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry