பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது. இதன் மூலம் புதிய பிரதமராக கியர் ஸ்டாமர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கீர் ஸ்டார்மர், நாம் சாதித்துவிட்டோம், மாற்றம் இப்போது தொடங்குகிறது என்று கூறினார். தோல்வியை ஒப்புக் கொண்டு அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சூனக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி அறிவித்தார். ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பிரதமராக முடியும் என்பதால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக கட்சியின் நாடாளுமன்றக் குழு ரிஷி சுனக்கை அதே மாதம் 22-ம் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து அதே ஆண்டு 25-ம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்றார்.
Also Read : மலையில் பயணிக்கும்போது காரில் ஏ.சி. போடலாமா? கூடாதா? மைலேஜை முன்னிலைப்படுத்தும் அறிவியல் விளக்கம்!
கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி காலம் முடிந்த நிலையில், இங்கிலாந்தின் 650 உறுப்பினர்களை கொண்ட மக்களவை தேர்தலில் 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேடிவ் கட்சின் சார்பில் ரிஷி சுனக்கும், Centre-left Labour கட்சியின் சார்பில் கெய்ர் ஸ்டார்மரும் போட்டியிட்டனர். இதில் Centre-left Labour கட்சி 410 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் எனத் தகவல்கள் தெரிவித்தன. பாதிக்கும் மேலான இடங்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், Centre-left Labour கட்சி 343 இடங்களை வென்றிருக்கிறது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 76 இடங்களில் மட்டுமே வென்றிருக்கிறது.
கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியை இழப்பதற்குக் காரணம் நாட்டின் பொருளாதர நெருக்கடி, உறுதியற்ற ஆட்சித் தன்மை, உள்கட்சி சண்டையில் கடந்த 14 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில், டேவிட் கேமரூன், தெரெசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக் என ஐந்து வெவ்வேறு பிரதமர்கள் என தொடர் சறுக்கல்களை கண்டதுதான்.
பெரும்பாலான தொகுதிகளில் தொழிலாளர் கட்சி வென்றாலும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் தொழிலாளர் கட்சிக்கு அதிக ஆதரவு இல்லை. அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட இடங்களில் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு குறைவாக இருப்பது இதுவரையிலான முடிவுகளில் தெரியவந்திருக்கிறது.
இங்கிலாந்து பிரதமராக இருந்த ரிஷி சுனக், தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நல்லெண்ணத்துடன் அதிகாரம் சுமுகமாகவும் அமைதியாகவும் மாறும். இந்த இழப்புக்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். பிரிட்டிஷ் மக்களால் தெரிவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க செய்தியைப் புரிந்துகொள்கிறேன். உள்வாங்குவதற்கும் சிந்திக்கவும் நிறைய இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இங்கிலாந்து தேர்தலில் வெற்றிபெற்ற Centre-left Labour கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர், நாம் எதைக் கூறினோமோ அதை செய்தோம்! இந்த வெற்றிக்காக பிரசாரம் செய்தீர்கள், போராடினீர்கள், ஓட்டு போட்டீர்கள், இப்போது அந்த வெற்றி வந்துவிட்டது. மாற்றம் இப்போது தொடங்குகிறது. அது மிக சிறப்பாக இருக்கும். நான் நேர்மையாக இருப்பேன். தொழிலாளர் கட்சி, நம் நாட்டுக்கு சேவை செய்யத் தயாராக இருக்கிறது. உழைக்கும் மக்களின் சேவைக்காக, பிரிட்டனை மீட்டெடுக்கத் தயாராக இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக, ஏப்ரல் 2020 இல், தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக கியர் ஸ்டாமர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்டார்மருக்கு 61 வயது. வழக்கறிஞரான கியர் ஸ்டாமர், 2015ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி.யானார். தொழிலாளர் கட்சியின் தலைவருக்கான தேர்தலின்போது, முதல் சுற்றிலேயே கியர் ஸ்டாமர் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். கட்சியின் தலைவரான பிறகு, “இந்த மாபெரும் கட்சியை புதிய நம்பிக்கையுடன் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கி அழைத்துச் செல்வதே தனது நோக்கம்” என்று கூறினார். கியர் ஸ்டாமர் அடிக்கடி தன்னை, “உழைப்பாளி வர்க்கப் பின்னணி” கொண்டவர் என்று கூறிக் கொள்பவர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry