
ஒவ்வொரு சீசனிலும் நாம் பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை, அவை கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப உணவில் சேர்த்து கொள்கிறோம். குறிப்பிட்ட சீசனில் மட்டுமே அதிகம் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை நம் உணவுப் பட்டியலில் கண்டிப்பாக சேர்க்க ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
எனினும் சில பருவங்களில், ஒரு சில பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவே கூடாது. குறிப்பாக வெப்பம் தகிக்கும் கோடையில், உடல் வெப்பத்தை அதிகரிக்க செய்யும் உணவுகளை தவிர்க்க வேண்டும். இந்தப் பட்டியலில் எந்தெந்த காய்கறிகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது. உருளைக்கிழங்கில் அதிக மாவுச்சத்து உள்ளது, இது செரிமான பிரச்சினைகள் மற்றும் வெப்பத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். அதே போல உருளைக்கிழங்கு சூடான வெப்பநிலையில் விரைவாக கெட்டு, உணவு நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
வெங்காயம் மற்றும் பூண்டு
பொதுவாக வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாமல் பல உணவுகளின் சுவை முழுமை பெறாது. நம்முடைய உணவுகளுக்கு ஒரு சிறப்பு சுவையை இவை சேர்க்கின்றன. இவை இரண்டுமே நம் உடலில் வெப்பத்தை உருவாக்க கூடியவை. எனவே வெயில் உச்சத்தில் இருக்கும் கோடை மாதங்களில் உணவுகளில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்ப்பதை தவிர்த்து கொள்ளலாம். இல்லை என்றால் சமையலில் இவற்றை மிக குறைவாகப் பயன்படுத்தி கொள்ளலாம்.
கீரை
கீரை என்பது ஊட்டச்சத்து நிறைந்த பச்சை இல்லை காய்கறியாகும். கோடையில் கீரை விரைவாக வாடி, சுவையில் கசப்பாக மாறும். உலர்ந்த கீரையை உட்கொள்வது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
இஞ்சி
நம் சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள் இஞ்சி. குறிப்பாக குளிர்காலத்தில் இஞ்சி டீ மிகவும் பிரபலமானது. ஆனால் கோடையில் இஞ்சி அதிகம் சேர்ப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சேர்மங்கள் உள்ளன.
பட்டாணி
பட்டாணி ஒரு சுவையான மற்றும் சத்தான காய்கறி. ஆனால் கோடை மாதங்களில் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. பட்டாணி வெப்பமான காலநிலைகளில் அதன் இனிப்பு மற்றும் மென்மையை இழக்கக்கூடும், இதனால் அவை உங்களுக்கு குறைவான பசியை ஏற்படுத்தும். அதே போல பட்டாணி கோடை வெப்பநிலையில் கெட்டுப்போகவும் வாய்ப்புள்ளது.
காளான்
மஷ்ரும்கள் எனப்படும் காளான்கள் பொதுவாக சூப்பர்ஃபுட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. காளான்களில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. ஆனால் இவை உடலில் வெப்பத்தை உருவாக்க கூடிய தன்மை கொண்டவை. எனவே கோடையில் இவற்றை தவிர்க்கலாம் அல்லது மிக குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும். கோடையில் விரைவாக கெட்டுபோகக்கூடிய தன்மை காளான்களுக்கு உண்டு. கெட்டுப்போனது தெரியாமல் காளான்களை உட்கொள்வது உணவு நச்சுத்தன்மை மற்றும் பிற சுகாதார பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பூசணிக்காய்
வெயில் காலங்களில் பூசணிக்காயை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். பூசணிக்காய்கள் உடல் வெப்பத்தையும் அதிகரிக்க கூடியவை. இவற்றை குளிர்கால டயட்டில் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ், காலார்ட் கீரைகள் போன்ற Cruciferous காய்கறிகள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது. இவை கேன்சரை தடுக்க உதவும். எனினும் இந்த காய்கறிகள் அனைவருக்கும் ஏற்றவை அல்ல. இவை வயிற்று உப்புசம் மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே டிஹைட்ரேஷன் ஆகும் ஆபத்து அதிகமாக இருக்கும் கோடையில் முட்டைக்கோஸ் மற்றும் காலார்ட் கீரைகளை தவிர்ப்பது நல்லது.
பீட்ரூட்
பீட்ரூட் பெரும்பாலும் குளிர்காலத்தில் கிடைக்கும். இவை குளிர் காலத்தில் நமது உடலுக்கு போதுமான வெப்பத்தை அளிக்கும். ஆனால் இவற்றில் உள்ள சேர்மங்கள் காரணமாக, கோடையில் இது வெப்பமடைகிறது. கோடையில் அதிகமாக பீட்ரூட் சாப்பிடுவது உடலில் நீரிழப்பு (டிஹைட்ரேஷன்) ஏற்பட வழிவகுக்கும்.
கத்திரிக்காய்
கத்தரிக்காய் ஒரு ஆன்டி-கூலிங் காய்கறியாகும். இவற்றை அதிகமாகச் சாப்பிட்டால் கோடையில் உஷ்ணம் அதிகரிக்கும்.
வெப்பம் அதிகமாக இருக்கும் கோடை மாதங்களில், வெள்ளரி, தக்காளி, கேரட், சுரைக்காய் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளை சாப்பிட வேண்டும். மேலும், தர்பூசணி, சிட்ரஸ் பழங்கள், கிவி, புதினா போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். மேற்கண்ட அனைத்தும் உடலை குளிர்ச்சியடையச் செய்கின்றன.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry