சனிப்பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரர்கள் கொழிக்கப்போறாங்க! தொழில் முன்னேற்றத்துடன், அதிக லாபமும் கிடைக்கும்!

0
128
Discover which three zodiac signs are expected to experience significant progress in business and profits after the Saturn transit. Learn more about the astrological predictions and how they may impact your financial success.

ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் பாரபட்சம் பாராமல் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களைத் தருவார். இப்படிப்பட்ட சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியை மாற்றுவதற்கு 2 1/2 ஆண்டுகள் ஆகும். இதனால் சனி பகவானின் ராசி மாற்றத்தின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் நீண்ட காலம் இருக்கும்.

தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லவுள்ளார். மீன ராசியின் அதிபதி குரு பகவான். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் குரு பகவானின் மீன ராசிக்கு செல்லவுள்ளார்.

Also Read : சனிக்கிழமைகளில் கண்டிப்பாக இந்த 10 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க!

சனிபகவானின் ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக சனிப்பெயர்ச்சிக்கு பின் சில ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபட்டு, வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளைப் பெறவுள்ளனர். முக்கியமாக அந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆசீர்வாதங்களைப் பெறவுள்ளனர்.

இதன் விளைவாக ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைப் பெறுவதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறவுள்ளனர். இப்போது 2025 சனிப்பெயர்ச்சிக்கு பின் எந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சிக்கு பின் சனிபகவானின் ஆசியால் பல சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் எதிர்பாராத சில நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வேலை மற்றும் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தினால் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.

Getty Image.

மேலும் நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய முதலீடுகளை செய்ய நினைத்து முயற்சித்தால், நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இதுவரை சந்தித்து வந்த மன அழுத்தம் குறைவதுடன், உடல் நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெறவுள்ளனர். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வருவதோடு, கைக்கு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு ஒவ்வொரு வேலையிலும் கிடைக்கும்.

அதே சமயம் தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாயப்புக்கள் உள்ளன. சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டிற்கு சனி பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.

Getty Image.

நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகள் நடந்து வந்தால், அதில் வெற்றி பெறுவீர்கள். ஏழரை சனி நடப்பதால், ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry