
“சண்டை இருக்கா? ஆபத்து இருக்கா? யாராவது கதறுறாங்களா?” – இதெல்லாம் பார்த்தாலே நம் மனம் ஈர்க்கப்படுவது பொதுவான அனுபவம். ஆனால் இது மனிதர்களுக்கே உரியது என்று நினைத்தால் தவறு. சமீபத்திய ஒரு அறிவியல் ஆய்வு, நம்முடன் நெருக்கமான பரிணாம உறவுடைய குரங்குகளும், சண்டை, வன்முறை, நட்பு நாடகங்கள் போன்றவற்றின் மீது அதே அளவு ஈர்ப்பு கொண்டுள்ளன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறது.
இந்த ஆய்வை நெதர்லாந்தின் உட்ரெக்ட் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தியுள்ளன. மக்காக் இன குரங்குகளுக்கு பலவகை வீடியோக்கள் காட்டப்பட்டன. இதில் சண்டை, ஓடல், நட்பு, மற்றும் எதுவும் நடக்காத சும்மா காட்சிகள் இருந்தன.
Also Read : கடல் பிளாஸ்டிக் நெருக்கடி நாம் நினைத்ததை விட ஆழமானது! உங்கள் தட்டு வரை வந்துவிட்ட மைக்ரோ பிளாஸ்டிக்!
அசராமல் அவை பார்த்த வீடியோக்கள் என்ன தெரியுமா? சண்டை, வன்முறை நிறைந்த காட்சிகள்! அதேபோல், ஓடும் காட்சிகளும் பிறகு நட்பு காட்சிகளும் கவனத்தை ஈர்த்தன. ஆனால் வெறுமனே ஒருவர் அமர்ந்திருக்கும் வீடியோவைக் காணும் போது, அவை விரைவில் முகத்தை திருப்பிவிட்டன.
இதில் விஷயம் என்னவென்றால், இந்தக் குரங்குகள் காணொளிகளை திரையிலிருந்து நேரடியாக பார்ப்பதில்லை. அந்த வீடியோக்களின் மீது பார்வை செலுத்தும் நேரத்தை வைத்து ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர். இதில் வன்முறை காட்சிகள் அதிக நேரம் பார்ப்பதைக் காட்டியுள்ளன.
இது மனிதர்களின் தன்மையோடு ஒத்துப்போகிறது. நம்மில் பலர் சண்டை, வாக்குவாதம் அல்லது அதிர்ச்சி தரும் வீடியோக்களை YouTube, Facebook, Instagram போன்ற சமூக ஊடகங்களில் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகிறோம். அதே மாதிரி, குரங்குகளும் திரைக்கும், கதைக்கும் ஈர்க்கப்படுகிறார்கள்.

பரிணாம ரீதியாக பார்த்தால், இது சமூகத்தில் வாழ்வதற்கான முக்கிய உத்தியாக இருக்கலாம். “தனிமையாக வாழ்வதைவிட, குழுவாக வாழ்வது விலங்குகளுக்கும் அவசியமானது,” என்கிறார் பேராசிரியர் Brad Bushman. இதனால் தான், யார் நட்பாக இருக்கிறார்கள், யார் எதிரியாக இருக்கிறார்கள், யாரால் ஆபத்து ஏற்படலாம் என்பதை விளங்கிக் கொள்ள, நாடகங்கள், சண்டைகள் போன்றவற்றை கவனிக்கின்றன.
முக்கியமாக, தெரிந்த முகங்களை அவை தொடர்ந்து கவனிக்கின்றன. அதாவது, பழகிய முகங்களே மனதில் பதிந்து விடுகின்றன. இது நம் மனித சமூகத்திலும் காணப்படும் மனப்பாங்கு. அத்துடன், எல்லா குரங்குகளும் ஒரே மாதிரி செயல்படவில்லை. குழுவில் முக்கியத்துவம் வாய்ந்த குரங்குகள், சண்டைகளில் அதிக ஈடுபாடு காட்டவில்லை.
அவைகளுக்கு தன்னம்பிக்கை அதிகம். ஆனால் ‘low-rank’ குரங்குகள், மிகவும் தீவிரமாக இந்த நாடகங்களை கவனித்தன. காரணம், அவை குழுவை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்பதே. இது அவைகளுக்கு தேவையான சமூக நுட்பங்களை வளர்க்க உதவுகிறது.
Also Read : 10 நிமிடத்தில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஒளி சிகிச்சை! மருத்துவத்துறையில் மாபெரும் புரட்சி!
இந்த Animal Cognition ஆய்வின் முடிவுகள் தெளிவாகச் சொல்கின்றன – மனிதர்களும் குரங்குகளும் திரைக்கும், வன்முறைக்கும், நாடகத் தன்மைக்கும் ஒரே மாதிரியான மனவியல் ஈர்ப்பை கொண்டுள்ளனர். இன்று நம்மில் பலர் கிளிக் செய்யும் வீடியோக்கள், reels-கள் எல்லாமே சண்டை, கருத்துவாதம் அல்லது பரபரப்பான விஷயங்களே. இது ஆழத்தில் நம் பரிணாம ஞானத்தோடு நேரடியாக இணைந்திருக்கும்.
இந்த உண்மைகள் எளிமையாக புரியச் சொல்வதானால் – நாம் சினிமா பார்க்கிறோம், குரங்குகள் சமூகத்தைப் பார்க்கிறது. நம்முடைய திரை வாழ்க்கையும், அவைகளின் குழு வாழ்க்கையும் ஒத்த மனப்பாங்கைக் கொண்டவை என்பதுதான் அறிவியல் சொல்வது!
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry