மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட் ஃபோனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இந்த ஃபோன் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒஎல்இடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளதால் இந்த மோட்டோரோலா ஃபோன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50 Specifications):
6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் ஒஎல்இடி ( curved OLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் சப்போர்ட், 1900 நிட்ஸ் ப்ரைட்னஸ், டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : பட்ஜெட்டுக்கு ஏற்ற, அதிக மைலேஜ் தரும் 7 பைக்குகள்! மாதத்துக்கு ஒரு தடவை பெட்ரோல் போட்டாலே போதும்..!
50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் (Sony LYT-700C primary sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமராக்களை மோட்டோரோலா எட்ஜ் 50 கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்ஃபோன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோக்கால் அழைப்புகளுக்கும் என்றே 32MP கேமரா உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இதில் உள்ளன.
MIL-810H இராணுவ சான்றிதழ் உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 போன் அறிமுகமாகிறது. இந்த ஃபோன் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனைப் பொறுத்தவரை ஃபிளிப்கார்ட்டில் இந்த போன் அறிமுகமாகிறது.
#MotorolaEdge50 is engineered to endure beyond limits. 📱💪
Unstoppable performance with every drop & shock. MIL-810H certified, ensuring shock resistance that faces toughest challenges.
Launching on 1st Aug @Flipkart, https://t.co/azcEfy2uaW & leading stores.#CraftedForTheBold— Motorola India (@motorolaindia) July 27, 2024
இந்த ஃபோன் தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் வசதியை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறனை வழங்கும். ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ள இந்த போனுக்கு, ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. Forest Blue – PMMA, Hot Pink – Vegan Suede, Marshmallow Blue – Vegan Leather ஆகிய கலர்களில் இந்த ஃபோன் சந்தைகளில் கிடைக்கும்.
இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளதால், இந்த ஃபோனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஃபோன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது.
5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி வசதியுடன் இந்த புதிய ஃபோன் வெளிவரும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, மோட்டோரோலா எட்ஜ் 50 போன் ரூ.23000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் ஸ்லிம்மான MIL-700H-சான்றளிக்கப்பட்ட ஃபோன் என்பதால் இந்தியாவில் இது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry