சர்ச்சைக்குள்ளான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு! உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம், தேர்வு மையம் வாரியாக ரிசல்ட் வெளியானது!

0
57
The National Testing Agency (NTA) today (July 20) released the National Eligibility Cum Entrance Test Undergraduate (NEET UG) 2024 results for all the students city and centre-wise.

சர்ச்சைக்குள்ளான நீட் இளநிலை மருத்துவத் தேர்வுக்கான முடிவுகளை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம் மற்றும் தேர்வு மையம் வாரியாக தேசிய தேர்வு முகமை இன்று (ஜூலை 20) வெளியிட்டுள்ளது.

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ந்தேதி நடந்தது. 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய இந்தத் தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளை எழுப்பியது. தேசிய தேர்வு முகமை நடத்திய இந்தத் தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு எனப் பல்வேறு புகார்கள், தேர்வு நடந்தபோதே எழுந்தன. அது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பு இருந்த நிலையில், கடந்த ஜூன் 4ம்தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்போது மேலும் பல முறைகேடுகள் அம்பலமாகின.

குறிப்பாக, எப்போதும் இல்லாத அளவாக 67 மாணவ-மாணவிகள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றிருந்தனர். இதில் அரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் அடங்குவர். இதைப்போல தேர்வின் போது பல்வேறு வகையில் ஏற்பட்ட நேர இழப்புக்காக 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Also Read : நீங்கள் அதிக நேரம் செல்போன், லேப்டாப் உபயோகிப்பவரா? இந்த அறிகுறிகள் இருந்தால் ‘டெக் நெக் சிண்ட்ரோம்’ உறுதி! கடும் பாதிப்பு ஏற்படலாம், எச்சரிக்கை..!

இவ்வாறு மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் அம்பலமானதால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் இந்த மோசடிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அதே சமயம் நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களும் போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த 50க்கு மேற்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வாறு நீட் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள 30-க்கு மேற்பட்ட வழக்குகள் கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

Also Read : நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்துள்ளது! மறு தேர்வு நடத்த உத்தரவிடுவது சரியாக இருக்காது! உச்ச நீதிமன்றம் கருத்து!

அப்போது நீட் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை தரப்பிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் கடந்த 18ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தினால் போதும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘முழு தேர்வுமே தனது புனிதத்தை இழந்துவிட்டது என்றால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களின் அடையாளங்களை மறைத்து நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக வரும் 20ம் தேதி மதியம் 2 மணிக்குள் தேர்வு முடிவுகளை (அதாவது இன்று) வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry