
தொலைபேசிகள் உலகத் தகவல் தொடர்பு முறையையே புரட்டிப் போட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். டெலிபோனில் ஆரம்பித்த இந்த பயணம், பட்டன் போன்கள், ஸ்மார்ட் போன்கள் என இன்று நம் கைகளில் உலகத்தையே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
கம்ப்யூட்டரில் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் ஸ்மார்ட் போன்களில் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆனால், இந்த ஸ்மார்ட் போன்களுக்கு முடிவு கட்டும் வகையில், புதிய தொழில்நுட்பம் ஒன்று வெகுவிரைவில் வரப்போகிறது என்ற செய்தி தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய சாதனம் மற்றும் அதன் சிறப்பம்சங்கள்:
ChapGPT-ன் CEO சாம் ஆல்ட்மேன், ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் வடிவமைப்பாளர் ஜானுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு(AI – Artificial Intelligence) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய சாதனம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இந்த சாதனம் பயன்பாட்டுக்கு வந்தால், இன்றைய ஸ்மார்ட் போன்களின் தேவை இருக்காது என்று கூறப்படுகிறது.


இது ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு கருவியாக இருக்கும் என்றும், குரல் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த சாதனத்தை இயக்க டைப் செய்யவோ அல்லது திரையை தொடவோ தேவையில்லை, வெறும் குரல் கட்டளை மூலம் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கலாம்.
படித்தவர்கள் மட்டுமே செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்தும் நிலை உள்ளது. ஆனால், இந்த புதிய சாதனம் படிப்பறிவு இல்லாதவர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால், நவீன தொழில்நுட்பத்தை கோடிக்கணக்கான மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க முடியும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, கல்வி அறிவு இல்லாதவர்கள் கூட இந்த சாதனத்தை சுலபமாக பயன்படுத்தி பயன் பெற முடியும் என்பது இதன் சிறப்பு.

எப்போது அறிமுகமாகும்?
இந்த புதிய கருவியை வடிவமைக்கும் பணி சில வருடங்களாக நடைபெற்று வருவதாகவும், தற்போது பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரின் பாவெல் ஜாப்ஸிடம் நிதி திரட்டியுள்ளனர். இந்த ஆண்டுக்குள் ஒரு பில்லியன் டாலர் திரட்ட அவர்கள் முடிவு செய்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்த கருவியின் மாதிரி வடிவம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் போன்களே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் வந்துவிட்ட இந்த காலத்தில், அவற்றை மிஞ்சும் ஒரு புதிய கருவி வரப்போகிறது என்ற செய்தி ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய சாதனம் தகவல் தொடர்பு துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, இது உலக மக்கள் அனைவரையும் தொழில்நுட்பத்துடன் இன்னும் நெருக்கமாக இணைக்கும் ஒரு பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது
இதனிடையே, வரும் மே மாதம் முதல் சில போன்களில் வாட்ஸப் செயல்படாது என்று மெட்டா தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 5, 2025ல் இருந்து குறிப்பிட்ட மொபைல் போன்களில் WhatsApp செயல்படாது. பயனர்களுடைய வசதிக்காக வாட்ஸ் அப்பில் சில அப்டேட்கள் செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் பழைய மொபைல் மாடல்களில் இந்த புதிய அப்டேட்டுகள் மற்றும் WhatsApp முழுவதுமாக செயல்படாது.
அதாவது IOSன் பழைய பதிப்புகளில் WhatsApp வேலை செய்யாது. 2015 ஜனவரி 15க்கு முந்தைய IOS பதிப்புகளுக்கும் வேலை செய்யாது. ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 5S போன்ற பழைய ஐபோன்களை பயன்படுத்துபவர்களுக்கும் WhatsApp வேலை செய்யாது. ஏனெனில் இந்த மொபைல் போன்களை IOS 15 க்கு மேம்படுத்த முடியாது” என்று மெட்டா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கூகுள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் தொலைபேசி வரிசைகளில் ஜெனரேட்டிவ் ஏஐ திறன்களைச் சேர்த்து வருகின்றன. கடந்த வாரம், ஆப்பிளின் புதிய ஐபோன் 16 சாதனங்கள் விற்பனைக்கு வந்தன, ஆப்பிள் நுண்ணறிவு அம்சங்கள் வரவிருக்கும் வாரங்கள் மற்றும் மாதங்களில் வரத் தொடங்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry