
சிலருக்கு 30 வயதை நெருங்கினாலே மூட்டு வலி பிரச்சனை ஆரம்பமாகி விடும். சினோவியல் திரவம் மற்றும் கொலாஜன் குறைபாட்டினால் 30 வயதிற்குப் பிறகு மூட்டு வலி ஏற்படுகிறது. இதனுடன் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதாலும் மூட்டுகள் இறுக்கமடைந்து வலி ஏற்படலாம்.
உடல் பருமன், உடலில் ஊட்டச்சத்து குறைபாடு, மோசமான வாழ்க்கை முறை, அதிக யூரிக் அமிலம் மற்றும் மூட்டு தேய்மானம் போன்றவற்றாலும் மூட்டு வலி வரும். இது உங்கள் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும்.
Also Read : குடிப்பழக்கம் உங்கள் மூளையை எவ்வாறு பாதிக்கிறது தெரியுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்..!
படுக்கையில் இருந்து எழுந்திருப்பது அல்லது படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற எளிமையான செயல்கள் கூட கடினமானதாக தோன்றலாம். சில சமயங்களில் மூட்டுவலி மிகவும் அதிகமாகும் போது, பாதிக்கப்பட்ட நபர் வலி நிவாரணிகளின் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் வலி நிவாரணி மருந்துகளின் அதிகப்படியான நுகர்வு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற மூலிகைகளைப் பயன்படுத்தலாம். இந்த மூலிகைகள் உடலில் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம், எலும்புகள் வலுவடைவதோடு, மூட்டு வலியிலிருந்தும் விடுபடலாம்.
Also Read : படுக்கையறை வாஸ்து..! படுக்கையறையில் வைக்க உகந்த செடிகள், வண்ணங்கள்!
இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை பலருக்கும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அவ்வாறு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மூட்டு வலி அமைகிறது. நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவை மூட்டு வலிக்கு வழிவகுக்கிறது.

இது அன்றாட வாழ்க்கையை சவாலானதாக மாற்றக்கூடிய நிலையாகும். எளிய இயக்கங்களைக்கூட சவாலானதாக உணர வைக்கும். இதனால், படுக்கையில் இருந்து எழுந்திருப்பது அல்லது படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற எளிமையான செயல்கள் கூட கடினமானதாக தோன்றலாம். மூட்டு வலியைக் குறைக்க உதவும் மூலிகை வைத்தியங்களை தெரிந்துகொள்வோம்.
மஞ்சள் பால்
இது இயற்கையாகவே அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கொண்டதாகும். மஞ்சளில் குர்குமின் என்ற கலவை நிறைந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். மஞ்சள் பால் அருந்துவது மூட்டு வீக்கம், வலி மற்றும் மூட்டு விறைப்பைக் குறைக்க உதவுகிறது. இது மூட்டுவலிக்கு நீண்டகால நிவாரணம் தரும் அதேநேரம், மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பாலுடன் மஞ்சள், கருஞ்ஜீர- மிளகு பொடி சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் வடிக்கட்டி அருந்த வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன் இந்த பானத்தை குடிக்க வேண்டும்.
ஓமம்
ஓமம் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவருக்கு தெரியும். மூட்டு வலிக்கும் ஓமம் நிவாரணம் தரும். இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மூட்டு வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. ஓமத்தை உட்கொள்வதைத் தவிர, நீங்கள் ஓமம் போட்டு காய்ச்சிய எண்ணெயைத் தயாரித்து மூட்டுகளில் தடவலாம். விரைவான வலி நிவாரணியாக இது செயல்படுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மூட்டுகளைச் சுற்றியுள்ள தசை விறைப்பைப் போக்கவும் உதவுகிறது. 2 – 3 ஸ்பூன் ஓம விதைகளை வறுத்து, அதை பருத்தித் துணியில் மூட்டை போன்று கட்ட வேண்டும். இதை சூடாக்கி சூடாக்கி வலி இருக்கும் மூட்டில் ஒத்தடம் கொடுக்கலாம். அல்லது எண்ணெய் காய்ச்சியும் தடவலாம்.
அஸ்வகந்தா (அ) அமுக்கரா
இது மூட்டுகள் மற்றும் தசைகளை பலப்படுத்த உதவும் சிறந்த தேர்வாகும். அஸ்வகந்தா ஒரு சக்திவாய்ந்த அடாப்டோஜெனாக செயல்படுகிறது. இது வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் வயதானதால் ஏற்படும் மூட்டு சிதைவைக் குறைக்கவும், ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தையும் இயக்கத்தையும் ஆதரிக்கவும் வழிவகுக்கிறது. ½ தேக்கரண்டி அளவிலான அஸ்வகந்தா (அ) அமுக்கரா சூரணத்தை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கலாம்.
நொச்சி இலை
நொச்சி இலை ஆயுர்வேதத்தில் சக்தி வாய்ந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் ஆர்கானிக் கொழுப்பு அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது, அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விரைவான நிவாரணம் அளிக்கும். மசாஜ் செய்ய நொச்சி இலை போட்டு காய்ச்சிய எண்ணெயை பயன்படுத்தலாம்.
குங்குலு
குங்குலு, குக்குலு என அழைப்படும் இந்த மூலிகை மிகவும் சக்தி வாய்ந்தது. உடலின் பல பிரச்சனைகளை நீக்க ஆயுர்வேதத்தில் குங்குலு பயன்படுத்தப்படுகிறது. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற இதைப் பயன்படுத்தலாம். அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் காணப்படுகின்றன. இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற, குங்குலுவை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
இஞ்சி
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிப்பதில் இஞ்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதில் காணப்படுகின்றன. இது எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இஞ்சி டீ குடிக்கலாம் அல்லது இஞ்சி போட்டு காய்ச்சிய எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry