வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி! இந்த ஒரு நம்பர உங்க ஃபோன்ல சேவ் பண்ணாலே போதும்..!

0
144
TANGEDCO ensures a secure and efficient payment method for high-usage electricity consumers. Those who consume more than 500 units can now pay electricity bill on WhatsApp.

தமிழ்நாட்டில் உள்ள மின்சார பயனாளிகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது TANGEDCO இணையதளம் மூலம் ஆன்லைனில் மின் கட்டணம் வசதி நடைமுறையில் உள்ள நிலையில், கட்டணம் செலுத்துவதை மேலும் எளிமையாக்கும் வகையில், வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக கட்டணம் செலுத்தும் புதிய சேவையை டான்ஜெட்கோ அறிமுகப்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு மின்சார கணக்கு எண்ணிற்கும் (EB Consumer Number) பிரத்யேகமாக கஸ்டமர் ஐடி (ID) வழங்கப்பட்டுள்ளது. டான்ஜெட்கோ இணையதளத்தில் மின்கட்டணம் செலுத்தும் பக்கத்தில் சென்று பயனாளியின் பெயர், பாஸ்வேர்டு செலுத்தி உள்ளே சென்று மின் நுகர்வோர் எண்ணை உள்ளீடு செய்தால், மின்சார கட்டணம் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள முடிவதுடன், கட்டணத்தையும் செலுத்த முடியும். மட்டுமின்றி, அட்வான்ஸாக குறிப்பிட்டதொரு தொகையையும் செலுத்தும் வசதி உள்ளது. இது தற்போது நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் வசதியாகும்.

இதைத்தாண்டி மின்சார கட்டணத்தை செலுத்த இன்னமும் எளிமையான சேவையை TANGEDCO அறிமுகம் செய்துள்ளது. இனி மின் நுகர்வோர் அவர்களுடைய வாட்ஸ்அப் கணக்கு (WhatsApp Account) வழியாக பணம் செலுத்த முடியும். இந்த அம்சத்தை பயன்படுத்த மக்கள் அவர்களுடைய செல்ஃபோனில் ‘94987 94987’ என்ற எண்ணை பதிவு செய்துகொள்ள வேண்டும். (மின் இணைப்பு தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்).

இந்த எண்ணை செல்ஃபோனில் பதிவு செய்த பிறகு, வாட்ஸ்அப்-ஐ ஓபன் செய்யவும். இப்போது உங்கள் காண்டாக்ட் (Contact) பட்டியலில், TANGEDCO லோகோவுடன் கூடிய பச்சை டிக் மார்க் கொண்ட வாட்ஸ்அப் கணக்கு காண்பிக்கப்படும். பச்சை நிற டிக் (Green tick mark) உள்ள வாட்ஸ்அப் கணக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட உண்மையான கணக்கு ஆகும். இந்த எண்ணிற்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினால் போதும்.

Also Read : பள்ளிக் கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? திராவிட மாடல் அரசு என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிந்து வைத்துள்ளாரா? என ஐபெட்டோ கேள்வி?

அதில் பல மின் சேவை விருப்பங்கள் காண்பிக்கப்படும். இதில் பே பில் (Pay Bill) என்பதை கிளிக் செய்து, மின்சாரக் கட்டணங்களை செலுத்தலாம். அதேபோல், வியூ பில் (View Bill) என்பதை கிளிக் செய்து, உங்கள் மின்சார கட்டண தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மின் கட்டணத்தை செலுத்த முற்படும்போது, பல நிறுவனங்களின் UPI செயலிகள் பட்டியலிட்டு காண்பிக்கப்படும். கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) என உங்கள் ஃபோனில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அணைத்து விதமான யுபிஐ ஆப்ஸ்களும் காண்பிக்கும். அதிலிருந்து ஒன்றை தேர்வு செய்து, உங்கள் பின் நம்பரை (PIN Number) பதிவிட்டு, மின்சார கட்டணத்தை செலுத்தலாம் என்று TANGEDCO தெரிவித்துள்ளது.

மின் இணைப்பு தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நுகர்வு கட்டணம் எவ்வளவு என்ற தகவலை டான்ஜெட்கோ உங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கும். இதிலொரு நிபந்தனை என்னவென்றால் 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர் மட்டும் இந்த வசதியை பயன்படுத்த முடியும். வருங்காலத்தில் இந்த வசதி அனைவருக்குமானதாக விரிவாக்கம் செய்யப்படலாம். இந்த புதிய வசதி ஒருமாதத்துக்கு முன்பாகவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், நுகர்வோரிடம் இன்னமும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. மேலதிக தகவல்களை TNEB இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry