
தஞ்சாவூர் : நெல் கொள்முதல் விவகாரத்தில் தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. அவர்களுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் போனது என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாி குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் கனமழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா பருவ நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். கொள்முதல் நிலையங்களில் லாரிகள் முறையாக இயக்கம் செய்யப்படாததால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் ஆயிரக்கணக்கில் தேங்கியுள்ளது.
Also Read : திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெக-வை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது – ஆர்.பி.உதயகுமார்!
மாவட்டத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை கொட்டி வைத்து, விவசாயிகள் பல நாட்களாக காத்து கிடக்கின்றனர். மழையில், நனைந்த மூட்டைகளில் இருந்து, நெல்மணிகள் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நெல்லை உடனடியாக கொள்முதல் செய்யாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் 22 சதவீதம் அளவுக்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூர் அருகே காட்டூர், மூர்த்தியம்பாள்புரம் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை இன்று நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவரிடம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளின் துயர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசுக்கு வலியுறுத்துவேன். உடனுக்குடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். நானும் ஒரு விவசாயி தான். அதனால் விவசாயிகள் படும் கஷ்டங்கள் அனைத்தும் எனக்கு தெரியும். விவசாயிகளின் கண்ணீர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
டெல்டாவில் கொள்முதல் நிலையங்கள், நீர் தேங்கியுள்ள விளை நிலங்களில் எடப்பாடியார் ஆய்வு. நெல் கொள்முதலில் தவறான தகவல் கூறி தமிழக அரசு ஏமாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு. @AIADMKOfficial @AIADMKITWINGOFL pic.twitter.com/ozHLrmxSKy
— VELS MEDIA (@VelsMedia) October 22, 2025
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அரசு அறிவித்து இருந்தது. ஆனால், நேரடியாக விவசாயிகளிடம் கேட்டபோது வெறும் 800 நெல் மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கின்றனர். தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது, எனவே, விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது” என்றார். காட்டூரைத் தொடர்ந்து, மூர்த்தியம்மாள்புரம், திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் இபிஎஸ் ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை நடவு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆன இளம் சம்பா பயிர்களில் பெரும்பாலான நெற்பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. வடுவூர், செருமங்கலம், தேவங்குடி, ரிஷியூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry