4.00 Mins Read : உலகளவில் லட்சக்கணக்கான பெண்களை பாதிக்கும் ஒரு பிரச்சனை தான் PCOS என அழைக்கப்படும் சினைப்பை நோய்க்குறி. குண்டாக இருக்கும் பெண்களிடம் இப்பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. பிசிஓஎஸ்(பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்) பிரச்சனையைக் கொண்ட பெண்கள் கருத்தரிப்பது என்பது சற்று சவாலாகவே இருக்கும்.
PCOS (Polycystic Ovarian Syndrome) என்பது வாழ்வியல் முறை மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்ணின் உடம்பில் ஏற்படக்கூடிய ஒரு பாதிப்பு. பிசிஓஎஸ் பிரச்சனையானது ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை பலவாறு பாதிக்கும். PCOD(Polycystic Ovarian Disease) ஓவரியில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும். பெரும்பாலான பெண்கள் மத்தியில் பிசிஓஎஸ் பிரச்சனை பரவலாக அறியப்படாத ஒன்றாகவே உள்ளது. இருப்பினும், இதனால் ஏற்படும் தீவிரமான விளைவுகளின் காரணமாக இதுகுறித்து சரியான புரிதல் அவசியமாகிறது.
PCOS என்றால் என்ன?
சினைப்பை நோய்க்குறி அல்லது PCOS என்பது, கருத்தரிக்கும் வயதுள்ள பெண்களிடம் காணப்படுகின்ற ஹார்மோன் சுரப்பு சார்ந்த ஒரு கோளாறு ஆகும். வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய இப்பாதிப்பு பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தும். அதில் சீரற்ற மாதவிடாய், உடல் எடை அதிகரிப்பு, அளவுக்கதிகமான முடி வளர்ச்சி, முகப்பரு / கொழுப்புக்கட்டிகள், கழுத்தில் கருப்பு நிறம் படர்தல் மற்றும் உச்சந்தலைமுடி மெலிதல் ஆகியவை அறிகுறிகளுள் குறிப்பிடத்தக்கவை.
PCOS பாதிப்புள்ள பெண்கள் பெரும்பாலும் இன்சுலின் எதிர்ப்புத்திறனை வெளிப்படுத்துகின்றனர். அதாவது இது டைப்-2 நீரிழிவு என்னும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த உடல் சிரமப்படுகிற ஒரு பாதிப்பை ஏற்பத்தக்கூடும். ஆன்ட்ரோஜென்கள் அல்லது ஆண் ஹார்மோன்களின் அளவுகளில் உயர்வு ஏற்பட்டால், அது கருமுட்டை வெளியீட்டில் இடையூறை ஏற்படுத்தி, சீரற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கும்.
அதாவது, மாதவிலக்கு சுழற்சி 28 நாட்களுக்கு முறை இருக்க வேண்டும். சிலருக்கு ஒரு வாரம் கூடக் குறைய இருக்கலாம். ஆனால், பிசிஓஎஸ் பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு 45 நாட்களுக்கு முறை, சிலருக்கு 60 நாட்களுக்கு ஒரு முறை, சிலருக்கு 3 மாதங்கள் வரை கூட மாதவிலக்கு வராமல் இருக்கலாம். ஆனால் சில பெண்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு வந்துவிடும். சிலருக்கு மாதவிலக்கு வரும் போது உதிரப்போக்கு 10 நாள் முதல் 1 மாதம் வரை கூட நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
Also Read : மத்திய அரசின் மெடிக்கல் இன்ஷுரன்ஸ்! ஆண்டுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?
ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதவிலக்கு முடிந்த 14 முதல் 18 நாளில் கருமுட்டை வெளியே வரும். இது இயற்கை. ஆனால் PCOS இருக்கும் போது Hyper Insulin பிரச்சனை ஏற்படும். நம்முடைய உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு இன்சுலின் சுரப்பு சரியாக இருக்க வேண்டும். ஆனால் PCOS இருக்கும் போது Insulin, Estrogen, Androgen அதிக அளவில் சுரக்க தொடங்கும். ஆனால் FSH (Follicle-Stimulating Hormone / LH Luteinizing Hormone சுரப்பது மாறுபடும் போது முறையற்ற மாதவிலக்கு ஏற்படும். சினைப்பை சுவர்கள் மிகவும் தடிமனாகி அதை சுற்றி சின்ன சின்ன Follicules அதாவது நீர்கட்டிகள் தோன்றுவதால் கருமுட்டைகள் வெளிவராது, இதனால் கர்ப்பம் அடைவதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதைத்தான் பிசிஓஎஸ் என்று அழைக்கிறோம்.
PCOS-ன் அறிகுறிகள் பரவலாக மாறுபடுகின்றன. PCOS பாதிப்பை உறுதி செய்வதற்கு, சீரற்ற மாதவிடாய்கள், அதிகரித்திருக்கும் ஆன்ட்ரோஜென் அளவுகள் மற்றும் சினைப்பைகளில் அதிக எண்ணிக்கையில் சிறிய நீர்க்கட்டிகள் என்ற மூன்று முக்கிய அறிகுறிகளுள், குறைந்தது இரண்டாவது இருக்க வேண்டும். முக்கியமாக ஒரு PCOS பாதிப்பு நிலையை உறுதிசெய்வதற்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பது மட்டும் போதுமானது அல்ல; ஏனெனில் PCOS பாதிப்பு இல்லாத பல பெண்களுக்கும் இத்தகைய சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கின்றன.
PCOS ஏன் வருகிறது?
கருவுறும் வயதில் உள்ள 5 பெண்களில் 2 பெண்களுக்கு PCOS பிரச்சனை இருக்கிறது. 18 வயதுகளில் உள்ள பெண்களை எடுத்துக் கொண்டால் 5 பேரில் ஒருவருக்கு இந்த பிரச்னை இருக்கிறது. நம் உணவுமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், அதாவது Balanced Diet ஆக உணவை எடுத்துக் கொள்ளாதது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது, தொடர்ச்சியாக Carbonated Drinks அதிக அளவில் உட்கொள்வது, ஜங்க் ஃபுட்ஸ் அதிகம் சாப்பிடுவது, உணவுக்கு ஏற்ற உடலுழைப்பு இல்லாதது பெரும்பான்மையான காரணங்களாக இருந்தாலும், மரபணு காரணமாகவும் PCOS பாதிப்பு ஏற்படுகிறது. இளம் வயதில் PCOS பாதிப்பு ஏற்பட்டால் 40 வயதிற்கு பிறகு டைப் 2 டயாபடீஸ் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எப்படியெல்லாம் பாதிக்கிறது?
இன்சுலின் எதிர்ப்பால் உருவாகும் PCOS(Polycystic Ovarian Syndrome)ஐ Mild, Moderate, Severe என 3 கிரேடுகளாக மருத்துவர்கள் பிரிக்கிறார்கள்.Mild எனும் கட்டத்தில் – மாதவிலக்கு தொடர்ந்து சரியாக வரும். இயல்பாக கருத்தரிப்பு நடக்கும். வேறு ஏதாவது பிரச்சனைக்கு ஸ்கேன் செய்யும் போது Polycystic Ovarian Syndrome இருப்பது தெரியும். இந்த நிலையில் ஹார்மோன் மாற்றங்கள் இருக்காது.
Moderate எனும் கட்டத்தில் 45 நாட்களுக்கு முறை மாதவிலக்கு வரும். ஹார்மோன் இம்பேலன்ஸ் 20 முதல் 30 சதவீதம் வரைக்கும் இருக்கும். Severe எனும் கட்டத்தில் 3 மாதம் ஆனாலும் மாதவிலக்கு வராது. ஹார்மோன் இம்பேலன்ஸ் 50 முதல் 60 சதவீதம் வரை இருக்கும். இவர்களுக்கு மாத்திரை போட்டால் மட்டுமே மாதவிலக்கு வரும். அதே போல பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் பிசிஓஎஸ் வரும் என்பதில்லை. ஒல்லியாக இருப்பவர்களுக்கும் THIN PCOS குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
PCOS பாதிப்புடன் அதிக உடல் எடை கொண்ட பெண்களுக்கு இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். அதுவும் கர்ப்ப கால நீரிழிவு, இதய நோய், உயர்இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் அளவுகள், தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் பக்கவாதம் போன்ற தீவிர உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம்.
எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன?
கர்ப்பப்பைக்கு வெளியேயும் சின்னச் சின்ன எண்டோமெட்ரியல் தசைகள் உருவாவதை எண்டோமெட்ரியாயோசிஸ் என்று அழைக்கிறார்கள். பாதிப்பு உள்ளவர்களுக்கு இது சினைப்பை, சாக்லேட் சிஸ்ட் ஆக (Chocolate Cist) வளரும். இதனால் கருமுட்டைகள் உருவாவது அல்லது வெளியே வருவது தடுக்கப்பட்டு கருவுறுதல் நிகழாமல் இருக்கலாம். முதலில் ஸ்பாட் என்று சொல்லக்கூடிய சின்ன சின்ன துகள்கள் சினைப்பையில் சேரும். பின்னர் அது சிஸ்டாக உருவெடுக்கும். இந்த பிரச்சனையால் பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு.
எண்டோமெட்ரியாசிஸ் வருவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?
சிலருக்கு மாதவிலக்கு நாட்களில் அடிவயிறு வலி இருக்கும். சிலருக்கு அறிகுறிகளே இருக்காது. கருவுறுதலில் ஏதாவது பிரச்சனை இருப்பின் லேப்ரோஸ்கோபி வழியாக பார்க்கும் போது தான் எண்டோமெட்ரியாசிஸ் இருப்பது தெரியவரும். அடிப்படையில் மாதவிலக்கு வரும் பொழுது வஜினா வழியாக ரத்தம் கீழ் நோக்கி வரும். ஆனால் இந்த பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு டியூப் வழியாக கருப்பை சுற்றி இருக்கும் சுவர் மற்றும் தசைகளில் ரத்தம் செல்லும். இதனால் சினைப்பையில் உருவாகும் கருமுட்டையின் தரம் குறைவாக இருக்கக்கூடும்.
PCOS இருந்தால் கருவுற முடியாதா? இதற்கு தீர்வு என்ன?
நம்முடைய வாழ்க்கை மற்றும் உணவு முறைகளில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு தினமும் உற்பயிற்சிகளை செய்யத் தொடங்க வேண்டும். யோகா, நடைபயிற்சி, போன்றவற்றை மேற்கொள்ளலாம். இரவு அதிக நேரம் கண்விழிப்பதைத் தவிர்க்க வேண்டும். நல்ல உணவு முறையும் மருத்துவரின் சிகிச்சையும் இந்தப் பிரச்சனையை சரிசெய்து கருவுறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். முதல் மற்றும் 2 ஆம் கட்ட நிலையில் இருப்பவர்களுக்கு மருந்துகள் மூலமே சரிசெய்யலாம். 3 மற்றும் 4 ஆம் நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும். நீர்க்கட்டிகள் 5 சென்டீமீட்டருக்கு மேல் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அகற்ற முடியும்.
PCOS-க்கான சிகிச்சை
சீரற்ற மாதவிடாய்கள், கருத்தரிக்க இயலாமை பிரச்சனைகள் அல்லது அதோடு தொடர்புடைய அறிகுறிகளின் காரணமாக PCOS இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால். மருத்துவரை உடனே கலந்தாலோசியுங்கள். தொடக்கத்திலேயே பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறிந்து, உடனே சிகிச்சை மேற்கொள்வது மிகவும் முக்கியம்.
அதோடு உடல் எடையை குறைப்பது, உடலுழைப்பை அதிகரிப்பது மற்றும் மனஅழுத்த அளவுகளை குறைப்பது, போதுமான நேரம் உறங்குவது, உரிய காலஅளவுகளில் உணவு உண்ணும் பழக்கம் ஆகியவை வகை 2 நீரிழிவுக்கான இடர்வாய்ப்பை குறைக்கும் மற்றும் PCOS அறிகுறிகளை நீக்கும் என்பதால், இப்படியான வாழ்க்கைமுறை மாற்றங்களை செய்ய வேண்டும்.
ஒவுலேசனை தூண்டிவிடுவதற்கும் மற்றும் அளவுக்கு அதிகமாக உடலில் முடி வளர்வது மற்றும் முகப்பருக்கள் தோன்றுவது போன்ற அறிகுறிகளுக்கு தீர்வு காண்பதற்கும் மருந்துகள் கிடைக்கின்றன. எனவே உங்களுக்கு உங்களுக்கு PCOS இருக்கிறது என்று நீங்கள் சந்தேகித்தால், அதை உறுதி செய்ய உடனே மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையையும், வழிகாட்டலையும் பெறுவது அவசியம்.
Disclaimer : The information presented here is intended for general educational purposes only. It is not designed to diagnose or treat any specific medical condition. Please consult with a healthcare professional for personalised advice.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry