அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீஸர் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகி டீசர் ரசிகர்களை பிரமிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.
விக்ரம், ஐஷ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன்,ஜெயராம், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே டீஸர் இன்று வெளியிடப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இப்படத்தின் டீஸரை அமிதாப் பச்சன், மகேஷ் பாபு, சூர்யா, மோகன்லால் மற்றும் ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் டிஜிட்டல் முறையில் வெளியிட்டனர்.
ரஹ்மானின் பின்னணி இசையுடன், சோழப் பேரரசின் போர்க்கள கதைக்களத்துடன் டீஸர் ஆரம்பமாகிறது. “கல்லும், பாட்டும், ரத்தமும், போர்க்களமும் எல்லாத்தையும் மறக்கத்தான், அவளை மறக்கத்தான், என்னை மறக்கத்தான்” என்று ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம் கர்ஜிக்கும் காட்சி அசத்துகிறது.
பொன்னியின் செல்வன் டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உச்ச நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ள இப்படம் நூற்றாண்டின் தவிர்க்க முடியாத படமாக இருக்கும் என்று ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். கடந்த 5 நாட்களாக படத்தில் இடம்பெற்றுள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய் ஆகியோரின் கேரக்டர்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry