பொட்டுக்கடலையை சாதாரணமா நினைச்சுட்டீங்களா..? ஒரே கைப்பிடி..! கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!

0
85
Roasted Bengal gram or Pottukadalai is an excellent source of protein, fibre, and essential nutrients. Learn how it helps with weight loss, digestion, and overall health.

கடலை, பொட்டுக்கடலை, பொரிகடலை, வறுகடலை என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பொட்டுக்கடலையில் வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம், பொட்டாசியம் நிறைந்துள்ளன. பெண்கள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினருக்குமே பொட்டுக்கடலை ஏராளமான நன்மைகளைத் தருகிறது.

மிக மிகக் குறைந்த கலோரிகளை கொண்டது பொட்டுக்கடலை. ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் கொட்டிக்கிடக்கும் இதில், பெண்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சீரான உணவாக அமைகிறது. அதற்கு காரணம், இதில் நிறைந்திருக்கும் புரோட்டீன்கள்தான்.

Also Read : ஆரோக்கியத்தில் அற்புதம் செய்யும் வாழைத்தண்டு! அல்சர், தொப்பை, ரத்த விருத்தி, எடை குறைப்பு, சிறுநீரக பிரச்னைகளுக்கு தீர்வு!

100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18.64 கிராம் புரோட்டீன், 16.8 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளன. அதனால்தான், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகச்சிறந்த சாய்ஸ் இந்த பொட்டுக்கடலை. என்சிபிஐ(National Center for Biotechnology Information) ஆய்வு அறிக்கையில் இது நிரூபணமாகி உள்ளது. ஒரு கைப்பிடி சாப்பிட்டாலே, வயிறு நிரம்பிய உணர்வு தரும், பசி எடுக்காது.

செரிமான பிரச்சனைகளையும் பொட்டுக்கடலை சரி செய்கிறது. இதனால் குடல் பாதுகாப்பும் பராமரிக்கப்படுகிறது. கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்படுகின்றன. உயரதிற்கு ஏற்ற உடல் எடையை பெற உதவுகிறது. குறைந்த கலோரியில் நிறைந்த புரோட்டீன் உணவாக உள்ளது.

சர்க்கரை நோயாளிகள், எதைச் சாப்பிடுவது என்ற சிக்கல் உள்ளபோது, இந்த பொட்டுக்கடலை அதற்கு உதவுகிறது. பொட்டுக்கடலையில் ஒப்பீட்டளவில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை இந்த கடலை சீராக்குகிறது. இதிலுள்ள வைட்டமின் சத்துகள், எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தர உதவுகின்றன.

Looking for a healthy snack? Roasted Bengal gram is packed with fiber, protein, and minerals that improve digestion, control hunger, and promote heart health.

பொட்டுக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. அத்துடன், எலும்பு பலவீனம், மூட்டு வலிகள் போன்ற குறைபாடுகளை தடுக்கவும் இது தூண்டுகோலாகிறது. இதயத்தை ஆரோக்கிமாக வைத்து கொள்ள உதவுகிறது. கெட்ட கொழுப்பையும் இந்த கடலை தடுத்துவிடுவதால், இதய நோய்கள் அபாயமும் குறைகிறது.

பல ஊட்டச்சத்து உள்ளதால்தான், குழந்தைகளுக்கு தயாராகும் சத்துமாவில் பொட்டுக்கடலை தவறாமல் இடம்பெற்று வருகிறது. பொட்டுக்கடலையில் வெல்லம் சேர்த்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்தால், அவர்களுக்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும்.

மாதவிடாய் நேரத்தில், அதிக ரத்தப்போக்கு இருந்தால், ஒரு கைப்பிடி அளவு பொட்டுக்கடலை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாலே ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும் என்பார்கள். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.

கர்ப்பிணி பெண்கள், சிறிதளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வயிற்று பிரச்சனைகளும் நெருங்காது. ஒரு பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதன் மூலம் மாதவிடாய் கால அதிக இரத்தப் போக்கை கட்டுப்படுத்தலாம்.

Also Read : சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பீங்களா? உடனே நிறுத்துங்க! இல்லைன்னா, இந்த பாதிப்புகள் எல்லாம் வரும்..!

முகத்திற்கு அழகும் பொலிவும் தருகிறது இந்த பொட்டுக்கடலை. சருமத்திற்கு பாதுகாப்பு கவசம் போலவும் செயல்படுகிறது. இதனால், படை, சொறி, அரிப்பு போன்ற பிரச்சனைகளும் தடுக்கப்பட்டுவிடுகின்றன. அதேபோல, தலைமுடி வலுவாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமானால், பொட்டுக்கடலை அதற்கும் தூண்டுகோலாகின்றன. அத்துடன், இளநரை பிரச்சனையும் நீங்கிவிடுகிறது. உடல் மெலிந்து உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளவர்கள் பொட்டுக்கடலை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

பொட்டுக்கடலையில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. இதனால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry