ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது சோறு சாப்பிடாவிட்டால், சாப்பிட்ட திருப்தியே நம்மில் பலருக்கு இருக்காது. அரிசியில் உடலுக்கு நன்மை செய்யும் பல சத்துக்கள் உள்ளன. ஆனால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சாதம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஏனென்றால், அரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள்.
சாதம் சாப்பிட்டால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். இதனால், பலரும் அரிசியை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். சாப்பிட்ட உணவிற்கு தகுந்தாற்போல் வேலை செய்யாமல், நாள்முழுவதும் உட்கார்ந்தபடியே இருந்துவிட்டு பழியை அரிசி மீது போட்டுவிடுகிறோம். அரிசி உணவை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது தெரியுமா?
பொதுவாக முழு அரிசியானது தவிடு, சத்து நிறைந்த நுண்ணுயிர் ஆகிய்வற்றை கொண்டுள்ளது. அரிசியில் உள்ள தவிட்டில் அதிக நார்சத்து உள்ளது. அதோடு விட்டமின் பி’யும் உள்ளது. ஜெர்ம் எனப்படும் நுண்ணுயிர் அரிசியில் உள்ளது. அது அதிகப்படியான விட்டமின் ஈ, பி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டை கொண்டுள்ளது. இது முழு அரிசியில் உள்ளது. இதனை சிவப்பு அரிசி என்று நாம் கூறுகிறோம்.
முழு அல்லது சிவப்பு அரிசியை பாலிஷ் செய்யும்போது அரிசியிலுள்ள ஜெர்ம் மற்றும் தவிடு முழுமையாக நீக்கப்படுவதால் அதில் வெறும் மாவுச் சத்து மட்டுமே இருக்கிறது. போதுமான உடல் உழைப்பு இல்லாதபோது இவையே உடல் பருமனுக்கு காரணாகிறது. 12 வருடகால ஆராய்ச்சியில் சிவப்பு அரிசியை மட்டுமே சாப்பிட்டவர்களுக்கு உடல் எடை கூடாமல் ஒரே அளவில் இருந்தது. அதில் உள்ள மிக முக்கிய சத்துக்கள் உடலுக்கு கிடைத்ததால் சீராக கலோரி எரிக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் காக்கப்படுகிறது. வெள்ளை அரிசியை தவிர்த்து சிவப்பு அரிசியை உண்டால் உடல் எடை குறையும். நோய்களும் குறையும்.
நிபுணர்களின் கூற்றுப்படி, குறைந்த அளவு வெள்ளை அரிசி சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்காது. இதனால், உடலில் கொழுப்பின் அளவும் அதிகரிக்காது. உண்மையில், கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர, இதில் ஃபைபர் உள்ளது. இது ஒரு தனித்துவமான ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது. அரிசியிலும் ஸ்டார்ச் உள்ளது. இது ஒரு தனி புரோபயாடிக் ஆகும். புரோபயாடிக்குகள் உணவின் கலோரிகளைக் குறைக்க உதவுகின்றன. இதன் காரணமாக, அதிக கலோரிகள் உடலில் சேமிக்கப்படுவதில்லை, எடை அதிகரிக்காது. இருப்பினும், அதை அதிக அளவில் உட்கொள்வது, போதிய உடற்பயிற்சி செய்யாதது ஆகியவை சில நேரங்களில் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
உண்மையில், அரிசி என்பது தனியே உண்ணப்படாத ஒரு உணவுப் பொருள். நீங்கள் பருப்பு, கொண்டைக்கடலை, கறி, கோழி மற்றும் காய்கறிகள் போன்றவற்றுடன் சேர்த்து தான் நாம் பெரும்பாலும் சாதத்தை சாப்பிடுவோம். எனவே, அதன் அதிகரித்த கிளைசெமிக் குறியீட்டையும் குறைக்கிறது மற்றும் உடலுக்கு மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் பெறுகிறது. இப்படிச் சாப்பிடுவதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது அல்லது உடலில் கொழுப்பை உண்டாக்காது.
100 கிராம், அதாவது அரை கிண்ணம் அரிசி சாதத்தில் சுமார் 140 கலோரிகள் மட்டுமே உள்ளன. நீங்கள் பருப்புடன் அரை கிண்ணம் அரிசி சாப்பிட்டால், உங்கள் கலோரி உட்கொள்ளல் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இதில், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் புரதமும் அரிசியில் நல்ல அளவில் காணப்படுகின்றன.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 50 முதல் 100 கிராம் அரிசி மட்டுமே உட்கொள்ள வேண்டும். ரொட்டியுடன் ஒப்பிடும் போது அரிசியின் சிறப்பு என்னவென்றால், அது எளிதாகவும் விரைவாகவும் ஜீரணமாகும். இரவு தூங்கும் முன் அரிசி சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால், இது ஜீரணிக்க நேரம் எடுக்கும் மற்றும் எடையை அதிகரிக்கும்.
புளிக்கவைக்கப்பட்ட மொனாஸ்கஸ் பர்ப்யூரியஸ் அச்சில் இருந்து தயாரிக்கப்படும் சிவப்பு ஈஸ்ட் அரிசியில் ஸ்டார்ச் மற்றும் புரதம் அதிகம் உள்ளது. மேலும், இது கொழுப்பைக் குறைக்க உதவும். அரிசியில் உள்ள அந்தோசயினின்கள் அதன் நிறத்தைக் கொடுக்கின்றன மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. அவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவும்.
வெள்ளை அரிசியை விட பிரவுன் ரைஸ்-ல் அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது. மேலும், அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பழுப்பு மற்றும் சிவப்பு அரிசி இரண்டும் உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவும். அரிசியை முறையாக உண்பதால் உடல் எடை குறைவதோடு, செரிமான அமைப்பும் மேம்படும். அரிசி சாப்பிடுவது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இருதய அமைப்பிலும் நல்ல விளைவை ஏற்படுத்துகிறது. மேலும், அரிசி சாப்பிடுவது எலும்புகளுக்கு நன்மை பயக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry