
வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், மக்கள் தங்கள் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், வெப்பத்தால் ஏற்படும் தாகத்தைத் தணிக்கவும் பல்வேறு பானங்களைக் குடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பலரின் விருப்பமான பானமாக இருக்கிறது மோர். புரோட்டீன், கால்சியம் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பல ஊட்டச்சத்துக்களை மோர் வழங்குகிறது.
எலும்பு ஆரோக்கியம், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் மோர் குடிப்பதால் நமக்கு கிடைக்கின்றன. மோரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. கூடுதலாக Full-Fat மோர் குறிப்பிடத்தக்க அளவு வைட்டமின் கே2-வைக் கொண்டுள்ளது. இதனால்தான் மோர் பல பிரச்சனைகளுக்கு ஒரு அருமருந்தாக அமைகிறது. சாதாரண மோர் அல்லது மசாலா மோர் இரண்டையும் வீட்டிலேயே நம்மால் தயாரிக்க முடியும். கடைகளிலும் கிடைக்கின்றன. அதேநேரம், உப்பு கலந்து மோர் உட்கொள்வது அனைவருக்கும் நன்மை பயக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா?
Also Read : இந்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வெச்சு சாப்பிடாதீங்க..! ஃபுட் பாய்சன் ஆகலாம்.. ஜாக்கிரதை!
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பு கலந்த மோர் குடிக்கக் கூடாது. உப்பு சேர்ப்பதால் மோரில் சோடியத்தின் அளவு அதிகரிக்கிறது. அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தப் பிரச்சினையை அதிகரிக்கும். மோர் குடிப்பதால் சோடியத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் அதிக நீர் தங்குகிறது. இதன் காரணமாக இதயம் மற்றும் இரத்த நாளங்களில் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் மோரில் உப்பு சேர்த்துக் கொள்ளக்கூடாது.
சிறுநீரகப் பிரச்சனை
சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், உப்பு கலந்த மோர் குடிக்கக்கூடாது. சிறுநீரகப் பிரச்சனைகள் ஏற்பட்டால், சோடியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். இந்த தாதுக்கள் எளிதில் ஜீரணிக்க முடியாதவை, இது எலக்ட்ரோலைட் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உங்களுக்குச் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், மோரில் உப்பு கலந்து சாப்பிடக்கூடாது.

அமில ரிஃப்ளக்ஸ் அல்லது GERD
மோர் பொதுவாக வயிற்றுக்கு நன்மை பயக்கும் என்பது தெரியும். ஆனால், அமில ரிஃப்ளக்ஸ் அல்லது இரைப்பை உணவுக் குழாய் ரிஃப்ளக்ஸ் நோயால் (GERD) பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நல்லதல்ல. பால் பொருட்கள் சில நேரங்களில் ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளைத் தூண்டும், உப்பு சேர்ப்பது வயிறு அல்லது உணவுக்குழாயை எரிச்சலடையச் செய்யும். மேலும், மோரில் உப்பு சேர்த்து குடிப்பதால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் பாதிக்கப்படலாம்.
உப்பு உணர்திறன்
சிலர் உப்பின் விளைவுகளுக்கு அதிக உணர்திறன்(Sensitivity) உடையவர்கள். நீங்கள் சோடியத்திற்கு உணர்திறன் உடையவராக இருந்தால், எந்த வடிவத்திலும் அதிக உப்பு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மோரில் உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாது. இது வாய்வு, வீக்கம் அல்லது அதிகரித்தத் தாகம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
குறைந்த சோடியம் உணவுகளை உண்பவர்கள்
இதய நோய் அல்லது பக்கவாத பாதிப்பு இருப்பவர்கள் உப்பு கலந்து மோர் குடிக்க வேண்டாம். குறைந்த சோடியம் உணவுகளைச் சாப்பிட்டால், உப்பு நிறைந்த உணவுகள் மற்றும் பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மோரில் சிறிதளவு உப்பு அதிகரித்தால் கூட உங்கள் தினசரி சோடியம் வரம்பை மீறச் செய்யலாம். இதன் காரணமாக பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.
Also Read : கருத்தரித்தல் தள்ளிப்போகிறதா? இந்த உணவுகள் கண்டிப்பாக பலன் தரும்! Fertility Foods!
Summary : மோரில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ப்ரோபயாடிக்ஸ் உள்ளது. தயிரைப் போலவே தயிரில் இருந்து தயாரிக்கப்படும் மோர் மற்றும் லஸ்ஸி உள்ளிட்டவை வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு நன்மை செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளன. ஆனால் சுவைக்காக மோரில் உப்பு சேர்ப்பது ப்ரோபயாடிக்ஸ்களின் செயல்பாடு மற்றும் செயல்திறனைக் குறைக்கிறது. இது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அழிவிற்கு வழிவகுக்கிறது.
பால் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் மோர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாலுக்கு அலர்ஜி உள்ளவர்கள் மோர் குடித்தால் ஸ்டொமக் அப்சட், வாந்தி, மூச்சுத்திணறல் மற்றும் கடும் சந்தர்ப்பங்களில் அனாபிலாக்ஸிஸ் போன்ற பல அறிகுறிகளைச் சந்திக்க நேரிடலாம் என ஹெல்த்லைன் குறிப்பிட்டுள்ளது.
பாலில் காணப்படும் இயற்கைச் சர்க்கரையான லாக்டோஸ், மோரிலும் உள்ளது. எனவே தான் பால் குடித்தால் அலர்ஜியை சந்திக்கும் நபர்கள், மோரையும் தவிர்க்கப் பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத சில நபர்களுக்கு மோர் எளிதில் ஜீரணமாகலாம். ஆனால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத பெரும்பாலானோருக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாயு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும் என்பதால் மோர் குடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
Disclaimer : These tips are general. Always seek advice from a healthcare professional for your specific needs.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry