டீ வடிகட்டியை சுத்தப்படுத்த 5 எளிய வழிகள்! Best Way to Clean Tea Strainer!

0
161
Keeping your tea strainer clean is essential for enjoying a flavorful cup of tea every time. By using household ingredients like baking soda, vinegar, lemon juice, and dish soap, you can effectively remove residue and keep your strainer in top condition. 

பெரும்பாலானோர் விரும்பி அருந்தும் பானம் டீ. தற்போது துளசி டீ, செம்பருத்தி டீ, கெமோமைல் டீ, க்ரீன் டீ, ஊலாங் டீ, மசாலா டீ, ஹெர்பல் டீ என பல வகைகளில் பெருகி மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளன.

கிச்சனில் உள்ள சமையலறை சாதனங்களில் டீ வடிகட்டி முக்கியமான இடத்தை பிடித்துவிட்டது. ஃபில்டரில் உள்ள துளைகள் அடிக்கடி டீ இலைத் துகள்களால் அடைபட்டு டீயை ஃபில்டர் பண்ணுவதில் சிரமம் உண்டாக்கும். டீ வடிகட்டியை சுத்தப்படுத்த உதவும் எளிய வழிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Also Read : தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பலன்கள்! Health Benefits of Peanuts!

  1. ஒரு பௌலில் பேக்கிங் சோடாவையும் வினிகரையும் சம பங்கு எடுத்துக்கொள்ளவும். அதில் அடைப்பும் கறையும் உள்ள வடிகட்டியை போட்டு ஒரு மணி நேரம் ஊற விடவும். பின் வெளியில் எடுத்து மெல்லிய பிரஷ்ஷால் மெதுவாகத் தேய்த்து கழுவி விடவும். ஃபில்டர் புது வடிவம் பெற்று அடைப்பு ஏதுமின்றி பள பளக்கும்.
  2. வடிகட்டியை கையில் பிடித்துக்கொண்டு அதன் மீது கொதிக்கும் நீரை ஊற்றவும். பின் ஒரு பிரஷ்ஷால் மெல்ல, துவாரங்களில் ஒட்டியிருக்கும் இலைகளை நீக்கவும். நல்ல பலன் தரும் முறை இது.
  3. ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி, அதன் ஒரு பகுதியை வடிகட்டியின் முழு பாகத்தின் மீதும் நன்கு தேய்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின் தண்ணீரில் நன்கு கழுவி விட, மந்திரம் போட்டது போல் ஃபில்டர் புது வடிவம் பெற்று மின்னும்.
  4. பாத்திரம் தேய்க்க உபயோகிக்கும் சோப்பை கொஞ்சம் எடுத்து ஒரு பௌலில் போடவும். பின் அதன் மீது வெது வெதுப்பான நீரை, வடிகட்டி முழுகும் அளவுக்கு ஊற்றி கரைத்துக் கொள்ளவும். அந்த கரைசலில் வடிகட்டியை சிறிது நேரம் ஊறப்போடவும். பின் வெளியில் எடுத்து பழைய டூத் பிரஷ்ஷால் மெதுவாகத் தேய்த்துக் கழுவி விடவும். இப்போது வடிகட்டியின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்கு மற்றும் அடைப்புகள் அனைத்தும் நீங்கி ஃபில்டர் புதிது போன்ற தோற்றம் பெறும்.
  5. ஒரு பௌலில் டெஞ்சர் டேப்லெட் (Denture Tablet) ஒன்றைப் போட்டு அதன் மீது வெது வெதுப்பான நீரை ஊற்றவும். அது கரைந்ததும் அந்த கரைசலின் உள்ளே வடிகட்டியைப் போட்டு பதினைந்து நிமிடம் ஊறவிடவும். இந்த மாத்திரை ஃபில்டரில் ஒட்டியிருக்கும் அனைத்து கறைகளையும் அடைப்புகளையும் நீக்கிவிடும். பின் ஃபில்டரை தண்ணீரில் கழுவி துடைத்து விட வடிகட்டி மீண்டும் உபயோகிக்க தயாராகி விடும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry