பல ஆண்டுகளாக ரெய்னா சிஎஸ்கே அணிக்கு மேட்ச் வின்னராக இருந்தவர். அவர் 205 ஐபிஎல் போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ரன்கள் குவித்துள்ளார். 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பிறகு, உள்நாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த ரெய்னா, தற்போது அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுவரை தனக்கு ஆதரவு அளித்த பிசிசிஐ, உத்திரபிரதேச கிரிக்கெட் சங்கம், ஐபிஎல் நிர்வாகம், ராஜீவ் சுக்லா மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் ரெய்னா நன்றி தெரிவித்துள்ளார்.
It has been an absolute honour to represent my country & state UP. I would like to announce my retirement from all formats of Cricket. I would like to thank @BCCI, @UPCACricket, @ChennaiIPL, @ShuklaRajiv sir & all my fans for their support and unwavering faith in my abilities 🇮🇳
— Suresh Raina🇮🇳 (@ImRaina) September 6, 2022
2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் ரெய்னா இடம்பெற்றிருந்தார். 226 ஒருநாள் போட்டிகளில் 5,615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1,605 ரன்களும் எடுத்ததன் மூலம் அவர் அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ஒருவரான ரெய்னாவை, 2022 மெகா ஏலத்தில் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry