
தமிழகத்தில் இன்று (அக் 21) 8 மாவட்டங்களுக்கு அதிக கன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் இன்று காலை 5:30 மணிக்கு உருவான காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, நாளை, அக்டோபர் 22, 2025 பிற்பகலில் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளையொட்டி, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அது மேற்கு-வடமேற்காக, வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரைகளை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பின்னர், இந்த புயல் சின்னம் தமிழகம் நோக்கி நகரக்கூடும். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இன்று அக்டோபர் 21ம் தேதி, அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- விழுப்புரம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- நாகை
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
இன்று அக்டோபர் 21ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- சென்னை
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- பெரம்பலூர்
- அரியலூர்
- தூத்துக்குடி,
- திருநெல்வேலி
- கன்னியாகுமரி
இன்று அக்டோபர் 21ம் தேதி கனமழை ( மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
தென்காசி
- விருதுநகர்
- மதுரை
- சிவகங்கை
- திருச்சி
- திருவண்ணாமலை
- ராணிப்பேட்டை
அக்டோபர் 22ம் தேதி, அதி கனமழை (ரெட் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- மயிலாடுதுறை
- கடலூர்
- விழுப்புரம்
- செங்கல்பட்டு
நாளை அக்டோபர் 22ம் தேதி, மிக கனமழை (ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- நாகை
- திருவாரூர்
- புதுக்கோட்டை
- அரியலூர்
- பெரம்பலூர்
- கள்ளக்குறிச்சி
- திருவண்ணாமலை
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- சென்னை
- திருவள்ளூர்
நாளை அக்டோபர் 22ம் தேதி, கனமழை ( மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- புதுக்கோட்டை
- திருச்சி
- சேலம்
- தர்மபுரி
- திருப்பத்தூர்
- வேலூர்
நாளை மறுநாள் அக்டோபர் 23ம் தேதி, மிக கனமழை ( ஆரஞ்சு அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- திருவள்ளூர்
- சென்னை
- ராணிப்பேட்டை
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
நாளை மறுநாள் அக்டோபர் 23ம் தேதி, கனமழை ( மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- வேலூர்
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
அக்டோபர் 24ம் தேதி, கனமழை ( மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
- கோவை
- நீலகிரி
- ஈரோடு
- சேலம்
- தர்மபுரி
- கிருஷ்ணகிரி
இவ்வாறு சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry