தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது! பொறி வைத்துப் பிடித்தது கேரள போலீஸ்! தப்பியது தனுஷின் ராயன்!

0
123
Kochi City Cyber ​​Police has arrested one of the admin Jeb Stephen Raj of the infamous Tamil Rockers group for filming movies from the theatre and then sending them through social media groups.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என எந்த மொழி படங்களாக இருந்தாலும், ரிலீஸான முதல் நாளே இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தது. இதை எப்படியாவது ஒடுக்க வேண்டும் என திரைத்துறையினர் போராடி வந்தனர். ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும் தயாரிப்பு நிறுவனங்கள் நீதிமன்றங்களை நாடி இணையத்தில் வெளியிட ஸ்டே வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன.

ஆனாலும் படம் எப்படியாவது இணையத்தில் வெளியாகிவிடும். அந்த வகையில் எந்த படமாக இருந்தாலும் திரைக்கு வந்த முதல் நாளே அந்த படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தது தமிழ் ராக்கர்ஸ். புதிய படங்கள் வெளியான அன்றைய தினமோ அல்லது மறுநாளோ தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் முறைகேடாக படங்கள் வெளியிடப்படும். தமிழ் ராக்கர்ஸின் அட்மினாக இருப்பவர் மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்.

இந்த இணையதளத்தின் உரிமையாளர் தேடப்பட்டு வரும் நிலையில், தற்போது அதன் முக்கிய அட்மின் கைது செய்யப்பட்டிருக்கிறார். ‘ராயன்’ படத்தை திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது மதுரையைச் சேர்ந்த 33 வயதான ஜெப் ஸ்டீபன் ராஜ் என்பவரை கொச்சி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

Jeb Stephen Raj

நடிகர் பிரித்விராஜ் நடித்த ‘குருவாயூர் அம்பலநடையில்’ என்ற மலையாளத் திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இந்தப் படம் வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுப்ரியா மேனன் கொச்சி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் படத்தை பதிவு செய்து வெளியிட்டோரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜை கொச்சி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்திருக்கின்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஏரிஸ் பிளக்ஸ் என்ற பிரபல திரையரங்கில் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்தைப் பதிவு செய்து கொண்டிருந்தபோது ஸ்டீபன் ராஜை போலீஸார் பொறிவைத்து பிடித்துள்ளனர். ஸ்டீபன் ராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திரையரங்குகளின் சீட் இருக்கைகளில் கப் ஹோல்டரை வைத்து, அதில் செல்போனை நிறுத்தி, யாருக்கும் தெரியாமல் படங்களை திருட்டுத்தனமாக ஸ்டீபன் பதிவு செய்திருக்கிறார்.

Also Read : மழைக்காலத்தில் Heart Attack வர இந்த 10 உணவுகள்தான் காரணம்! இறைச்சி, மீன் சாப்பிட உகந்ததா?

சிறிய அளவிலான கேமராவை வைத்து முழு படத்தையும் ரெக்கார்டு செய்து, இணையதளத்தில் படங்களை முதல் நாளிலேயே பதிவேற்றம் செய்ய 5000 ரூபாய் கமிஷனாகப் பெற்றது தெரிய வந்திருக்கிறது. அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பதிவேற்றம் செய்து வந்ததும் தெரிய வந்திருக்கிறது. இது குறித்துத் தொடர்ந்து போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் காட்சிக்கான டிக்கெட்டை முன்னமே பதிவு செய்து கொள்ளும் ஸ்டீபன், படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்து, வாட்ஸ் அப் மூலமாக அந்த கும்பலுக்கு அனுப்பி இருக்கிறார். ஸ்டீபன் வைத்திருந்த போன் 1 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என்று போலீசார் கூறினர். விசிடி இருந்த காலகட்டத்தில் நடிகர் விஷால் கூட இது போல் திருட்டு விசிடி தயாரிக்கும் கடைகள் இருக்கும் இடம் தெரிந்துவிட்டால் உடனே அந்த கடைக்கு சென்று சம்பந்தப்பட்ட நபரை சரமாரியாக கேள்வி கேட்டு போலீஸில் ஒப்படைத்துவிடுவார். ஆயினும் இது போன்ற திருட்டுத்தனங்கள் நடந்து கொண்டுதான் இருந்தது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry