எள்ளின் பயன்களும், மருத்துவ குணங்களும்! கருப்பு vs வெள்ளை எள்: எது சிறந்தது?

0
83
Sesame seeds are a small but mighty food packed with nutrients and health benefits. They are a good source of protein, fibre, vitamins, and minerals. Sesame seeds are also a good source of antioxidants, which can help protect your cells from damage.

ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எள்ளில் அதிக காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, இரும்புச் சத்து, ஜிங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது. எள் சாப்பிடுவது எலும்புக்கு வலு சேர்க்கிறது. ரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

எள்ளில் கால்சியச் சத்து நிறைந்துள்ளதால் மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு பலத்தை கொடுக்கிறது. இவை எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும், எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகின்றன. வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு தேய்மானப் பிரச்சனைகளுக்கு எள் ஒரு இயற்கையான தீர்வாக அமையும். எள் அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளில் செம்பு அதிகம் உள்ளது, இது ரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் கிரகிக்க செய்து, உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்கள் சென்றடைவதை உறுதி செய்கிறது.

Also Read : மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனி தேர்ச்சி சதவிகிதம்! அறிவுத்திறன் குறைந்த மாணவர்களுக்கு தனி மதிப்பீட்டு முறை! மனநல மருத்துவர்கள் ஆலோசனை!

100 கிராம் எள் 573 கலோரி கொண்டுள்ளது. 100 கிராம் எள்ளில் 18 கிராம் புரதச்சத்து உள்ளது. இவை குழந்தையின் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. எள்ளில் பைட்டோஸ்டெரால் என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்கிறது.

சருமத்தைப் பொலிவுடனும் இளமையுடனும் வைத்துக்கொள்ள எள் பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் சரும செல்களின் பாதிப்பைக் குறைத்து, வயோதிக அறிகுறிகள் தோன்றுவதைத் தாமதப்படுத்துகின்றன. மேலும், சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தை அளித்து, பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்கவும் எள் உதவுகிறது. தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும்.

Sesame seeds are packed with nutrients that boost heart health, improve digestion, and support strong bones. Explore their amazing benefits today!

தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எள் ஒரு வரப்பிரசாதம். இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் பி வைட்டமின்கள் இதில் அதிக அளவில் உள்ளன. இவை முடி உதிர்வதைக் குறைத்து, இளநரை தோன்றுவதைத் தடுக்கின்றன. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் எள் உதவுகிறது.

இதய நலனுக்கும் எள் மிகவும் நல்லது. இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன. இதன் மூலம் இரத்த அழுத்தம் சீராகப் பராமரிக்கப்பட்டு, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.

நீரிழிவு நோயாளிகளுக்கும் எள் ஒரு பயனுள்ள உணவுப் பொருளாகும். இதில் உள்ள நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இன்சுலின் சுரப்பின் திறனையும் மேம்படுத்தி, நீரிழிவு நோயை முறையாக நிர்வகிக்கவும் எள் உதவுகிறது.

Also Read : இரவில் பல் துலக்கும் பழக்கம் இல்லையா..? இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்!

செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். எள்ளில் இந்த நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுத்து, குடல் இயக்கத்தை சீராக்குகிறது. ஆரோக்கியமான குடல் செரிமான மண்டலத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் முக்கியமானது.

ஒரு கப் பாலில் உள்ள கால்சியச்சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும். சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிப்பதுடன் கொழுப்பின் அளவை குறைப்பதால், ரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் மேம்படும். எள்ளில் நிறைந்துள்ள சீசமின் என்ற மூலக்கூறு புற்றுநோய் வராமல் தடுக்கிறது, மற்ற தாதுக்களை காட்டிலும் இந்த வேதி பொருள், எதிர்ப்பு சக்தியை துாண்டி, நேரடியாக புற்றுநோய் செல்களை தடை செய்கிறது. பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

Tiny but powerful! Sesame seeds offer incredible health benefits, including better heart health, improved digestion, and anti-aging properties.

போதைப் பழக்கத்தில் விடுபட நினைப்பவர்கள் தினந்தோறும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் ஏறியிருக்கும் போதை இறங்கி, உடல்  தூய்மையடையும். தினமும் சிறிதளவு எள் சாப்பிட்டு வந்தால் அவர்கள் உடலில் மூளை மற்றும் நரம்புகளில் இறுக்கம் தளர்ந்து, உடல் மற்றும் மனம் அமைதியடையும் படபடப்பு  தன்மை மறையும். சிலருக்கு முதுமையின் காரணமாகவும், சரிவர நீர் அருந்தாமல் இருப்பதாலும் சிறுநீர் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இவர்கள் தினமும் சிறிதளவு எள்  சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகளவு வெளியேறும். சிறுநீரகங்களின் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.

மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது. மாதவிடாய் வந்து 15 நாட்களுக்கு பின் எள் சாப்பிட்டால் அடுத்த முறை மாதவிடாய்யின் போது இப்பிரச்சனைகள் இருக்காது. எள்ளை அதிகளவு எடுத்துக் கொண்டால் கருக்கலையும் வாய்ப்புள்ளது, எனவே பெண்கள் கர்ப்ப காலத்தில் எள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

Also Read : வெள்ளரியுடன் சேர்த்து சாப்பிடவே கூடாத உணவுகள்! பட்டியல் இதோ..!

  • எள் ஊறவைத்த தண்ணீரை பெண்கள் குடித்து வந்தால்(தினமும் கால் டம்ளர்) மாதவிடாய் சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைக்கும் நல்ல பலன் கிடைக்கும்.
  • எள் விழுதை, 1 சுண்டைக்காய் அளவு வெண்ணெயில் கலந்து சாப்பிட்டு வந்தால், குருதி மூலம் குணமாகும், மலம் சிக்கல் இல்லாமல் வெளியேறும்.
  • எள்ளை அரைத்து கொதிக்க வைத்து, உடலில் ஏற்படும் கட்டிகளில் கட்டி வந்தால், கட்டி பழுத்து உடையும்.
  • எள்ளின் கஷாயத்தால் இடுப்பு, அடி வயிறுகளில் ஒத்தடம் கொடுக்க, அடிவயிற்று வலி, இடுப்பு வலி போன்றவை நீங்கும்.
  • எள் கலந்த உணவை சாப்பிட்டால் பிரசுவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
  • எள்ளை அதிகமாக உணவில் சேர்த்து கொண்டால் சிறுநீர் வெளியேறுவது அதிகமாகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் எள் கலந்த உணவைச் சாப்பிட்டால் உடலின் சர்க்கரை அளவு குறையும்.
  • எள்ளின் விதையை வெல்லப்பாகில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எள்ளை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோயில் இருந்து நிவாரணம் பெறலாம்.
  • எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்து இடித்து வாயில் சிறிது நேரம் வைத்திருந்து பின்பு துப்பினால் வாய்ப்புண் ஆறும்.
  • எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வரும் சாரை எடுத்து முகம் கழுவினால் முகம் பொலிவோடும், கண்கள் ஒளி பெறவும்.
  • எள்ளுப் பொடி சேர்த்துப் பிசைந்த சாதம் சாப்பிட, வயிற்றில் ஏற்படும் கொதிப்பு, வயிற்று வலி இவற்றைப் போக்கும்.
Looking for a natural way to improve your health? Sesame seeds are rich in antioxidants, healthy fats, and essential minerals.

கறுப்பு எள் நன்மைகள்:

  • கால்சியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க உதவுகிறது.
  • இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  • ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால் புற்றுநோய், இதய நோய் போன்றவற்றுக்கு நல்லது.
  • மாதவிடாய் நின்ற பெண்களின் உடலை வலிமைப்படுத்துகிறது.
  • மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுகிறது.

வெள்ளை எள் நன்மைகள்:

  • கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் எலும்புகள் வலுவடையும்.
  • முடிக்கு பலம் தரும், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • கசப்புத்தன்மை குறைவாக இருப்பதால் விரும்பி சாப்பிடலாம்.

Disclaimer: This information is not intended to be a substitute for professional medical advice. Please consult with a healthcare professional before making any decisions about your health.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry