என்னதான் அறிவியலில் நாம் முன்னேறி இருந்தாலும், நாகரீக வளர்ச்சியில் முன்னேறி இருந்தாலும், பூமியில் இருந்து மனிதன் செவ்வாய் கிரகத்துக்கு சென்று வந்தாலும், சில மூட நம்பிக்கையை நம்மால் மாற்றிக் கொள்ளவே முடியாது. அப்படி நம்மிடம் இருக்கும் மூடப்பழக்கங்களில் ஒன்றுதான் பூனை சகுனம்.
நாம் வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்து விட்டால் அதை அபசகுனம் என்று சொல்வார்கள். உடனடியாக நாம் வெளியே செல்லும் வேலையை நிறுத்தி விடுவோம். மீண்டும் வீட்டிற்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்து விட்டு, அதன் பின்பு மீண்டும் நம் வேலையை தொடர்வோம்.
Also Read : குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும்! ஏன் தெரியுமா? Cold Shower Benefits in Winter!
இந்த பழக்கம் எதனால் ஆரம்பித்தது என்ற ஒரு சுவாரசியமான பின்னணி கதையைத் தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அந்த காலத்தில் தெருவிளக்கு கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் மாட்டு வண்டியில் தான் பயணம் செய்ய வேண்டும். குதிரை வண்டியில் தான் பயணம் செய்ய வேண்டும்.
நீண்ட தூர பயணமாக இருந்தால் கட்டாயம் இரவு நேர பயணம் என்பது இருக்கும். இப்படி இருட்டு சமயத்தில் குதிரை வண்டியிலோ மாட்டு வண்டியிலோ நாம் பயணம் செய்யும்போது எதிரே வரக்கூடிய பூனை, வண்டியை ஓட்டி செல்பவர்களுடைய கண்களுக்கு தெரியாது.
பூனையின் கண்கள் மட்டும் தான் இருட்டில் தனியாக தெரியும். அதாவது பொதுவாகவே பூனையின் கண்ணை இருட்டில் பார்க்கும் போது ஒரு ரேடியம் எஃபெக்டில் நமக்கு தெரியும். பூனையின் உருவம் இருட்டில் தெரியாது. ஆனால் லைட் போட்டு வைத்திருப்பது போல இரண்டு கண்களும் அப்படியே மின்னும்.
பூனைக்கு மட்டும் கண்கள் இப்படி இருக்காது. புலி, சிறுத்தை, சிங்கம் கருஞ்சிறுத்தை இப்படி எல்லா வகையான காட்டு விலங்குகளுக்கும் கண்கள் இப்படிதான் ரேடியம் மின்னுவது போல தெரியும். இப்படி பூனையின் கண்களை பார்த்து வண்டியில் பூட்டி வைத்திருக்கும் மாடு அல்லது குதிரை பயந்து மிரண்டு விட கூடாது.
அதாவது எதிரே வருவது பூனை என்று மாட்டிற்கும் குதிரைக்கும் தெரியாது. இருட்டில் பூனையின் கண்களை பார்த்து, காட்டு விலங்குகள் தான் எதிரே வருகின்றது என்ற அச்சத்தில் குதிரையும் மாடும் மிரண்டு பயந்து விடக்கூடாது என்பதற்காக இந்த வண்டியை ஓட்டுபவர்கள், பூனை எதிரே வந்தால், சிறிது நேரம் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, குதிரைக்கும் மாட்டிற்கு தண்ணீர் காட்டி விட்டு, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்வார்களாம்.
இதே சமயத்தில் குதிரையை ஓட்டி செல்பவர்களும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, தண்ணீர் பருகிவிட்டு அதன் பின்பு தங்களுடைய பயணத்தை தொடர்வார்கலாம். இந்தப் பழக்கம் தான் காலப்போக்கில் மாறி மாறி பூனை குறுக்கே வந்தால் அபசகுனம். தண்ணீர் குடித்துவிட்டு, ஓய்வு எடுத்து விட்டு செல்ல வேண்டும் என்று மாறிவிட்டது.
இனி பூனை குறுக்கே வந்தால் அது அபசகுணம் என்று நினைத்து தேவையில்லாமல் உங்கள் மனதைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் குழப்பமாக செய்யும்போது அதில் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். பூனை குறுக்கே வந்தாலும் சரி, பூனை குறுக்கே வரவில்லை என்றாலும் சரி, மனத் திருப்தியோடு செய்யக்கூடிய காரியங்கள் வெற்றியில் முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
Courtesy : Dheiveegam
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry