
மனிதர்களின் உதடுகள், கண்கள், புருவங்கள் மற்றும் முக வடிவம் போன்றவை ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். இவை மனிதர்களின் ஆளுமைத் தன்மைகளை வெளிப்படுத்தும். மனிதர்களின் கண் இமைகளின் அமைப்புகள் அவர்களின் குணாதிசயங்களையும், ஆளுமைப் பண்புகளையும் வெளிப்படுத்துகின்றன.
மனிதர்களுக்கு புருவங்கள் பலவித வடிவங்களில் இருக்கும். அடர்த்தியான, மெல்லிதான, நீளமான மற்றும் குறுகியதாக இருக்கும். அதைப் போலவே கண் இமைகளும் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். மெல்லிய கண் இமைகள், அடர்த்தியான கண் இமைகள், நீண்ட கண்ணிமைகள், குறுகிய கண் இமைகள், பூனை வடிவக் கண் இமைகள் என்று பலவிதமான வடிவங்களில் இருக்கின்றன ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான குணாதிசயங்கள் உண்டு.
Also Read : பலவீனமாக, சோர்வாக உணர்கிறீர்களா? இதுவும் காரணமாகவும் இருக்கலாம்..!

மெல்லிய கண் இமைகள்
மெல்லிய கண் இமைகள் இருப்பவர்கள் தன்னுடைய தோற்றத்தில் அவ்வளவாக கவனம் செலுத்தாதவர்களாக இருப்பார்கள். பிறருடன் நெருங்கிப் பழக யோசிப்பார்கள். ஆனால் இவர்களுடன் நெருங்கி நன்றாக பழகுபவர்கள் இவர்களை விட்டு பிரிய மாட்டார்கள்.
விசுவாசம் கொண்டவர்கள். பிறரைப் பற்றிய வதந்தியை பரப்புவதில் மகிழ்ச்சி காண்பார்கள். குறுகிய மனநிலையை கொண்டவர்கள். எளிதில் எரிச்சல் அடையும் இயல்புடையவர்கள். எதிலும் புதிய அனுபவங்களை தேடுவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். தன்னுடைய இலக்கை போராடி அடைவார்கள். சிக்கலை தீர்க்கும் மனப்பான்மையும், உறுதியுடன் சவால்களை சமாளிக்கும் குணமும் இருக்கும்.
அடர்த்தியான கண் இமைகள்
அடர்த்தியான கண் இமைகள் கொண்டவர்கள் பார்வைக்கு மிகவும் வசீகரமாக இருப்பார்கள். பிறரை மிக எளிதில் ஈர்த்து விடுவார்கள். சகிப்புத்தன்மை அதிகம் இருக்கும். பகுத்தறிவும், உணர்ச்சியில் சமநிலையும் கொண்டவர்கள். இரக்க குணம் மிக்கவர்களாகவும், பாசம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
இளகும் குணம் நிறைந்தவர்கள். அற்பமான வதந்திகள் போன்றவற்றிலிருந்து விலகி இருக்க விரும்புவார்கள். அமைதியான நடத்தை உள்ளவர்கள். பிறர் மேல் பச்சாதாபம் காட்டுவார்கள். பிறருடன் இணக்கமாக இருக்கவும் தாராள மனப்பான்மையுடனும் நடந்து கொள்வார்கள்.

நீளமான கண் இமைகள்
சிலருடைய கண் இமைகள் நீளமாக இருக்கும். இவர்கள் பெண்மை தன்மை நிறைந்தவர்களாகவும் கவர்ச்சிகரமான தோற்றத்துடனும் இருப்பார்கள். ஆரோக்கியமான உடல் வாகு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் வெளிப்படையாக எதையும் பேசும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். பிறரை எளிதில் அணுகக் கூடிய நபர்களாகவும், நட்பு, உறவு பேணும் மனப்பான்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
குறுகிய கண் இமைகள்
சிலருடைய கண் இமைகள் மிகக்குறுகிய அளவில் இருக்கும். இவர்கள் நடைமுறை வாழ்விற்கு ஒத்துவராத இயல்பைக் கொண்டிருப்பார்கள். எதிலும் அக்கறையில்லாமல் விட்டேத்தியான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறரிடம் அதிகம் ஒட்டுதல் இல்லாமல் இருப்பார்கள்.
பூனை வடிவ கண் இமைகள்
இந்த தனித்துவமான வடிவம் சிலருக்கு இருக்கும். பூனைக்கு இருப்பதைப் போன்று கண் இமைகள் நீளமாகவும் இருக்கும். இவர்கள் மர்மமான அல்லது புதிரான ஆளுமைத் தன்மை கொண்டவர்கள். இவர்களுடைய உணர்வுகள் மற்றும் எண்ணங்களை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். இவர்களுடைய உணர்ச்சிகளை அவ்வளவு எளிதில் பிறரிடம் வெளிக்காட்டமாட்டார்கள்.
Image Source : Getty Image. Input Kalki
Disclaimer : The information provided in this article is for general informational purposes only and is not intended as medical, psychological, or professional advice. Interpretations of eyelid structure and personality traits are based on traditional beliefs and should not be considered scientifically proven.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry