
வெளிர் நிற ஆடைகள் அணியும் போது அழகாக இருக்கும் ஆனால் அவை மிக விரைவாக அழுக்காகிவிடும். அவற்றை ஒரு முறை அணிந்த பிறகு துவைப்பதே கடினம். குறிப்பாக சட்டையின் காலரில் அழுக்குகள் அதிகமாக இருக்கும். கறைகள் பட்டால் துவைப்பது சவாலானதாக இருக்கும், சுத்தம் செய்வது மிகவும் கடினம். இதற்கு டிடெர்ஜென்டுகள் இருந்தாலும் சில நேரம் கறைகள் நீங்காது. ஆடைகளில் உள்ள கறைகளை எளிதாக நீக்க உதவும் டிப்ஸை தெரிந்து கொள்வோம்.
ஹைட்ரஜன் பெராக்சைடு : ஆடைகளில் இருக்கும் கறைகளை அகற்ற ஹைட்ரஜன் பெராக்சைடு உதவுகிறது. சட்டை காலர்கள் மிகவும் அழுக்காக இருந்தால், ஹைட்ரஜன் பெராக்சைடில் துணிகளை ஊற வைக்கவும். பின்னர் 30 நிமிடங்களுக்கு கழித்து சோப்பை கொண்டு துவைத்தால் கறைகள் நீங்கி புதியது போல மாறிவிடும்.
எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா : ஆடைகளில் கறைகளை நீக்க எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா கலவை பயனுள்ளதாக இருக்கும். ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவில் ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளவும். இந்தக் கலவையை கறையின் மீது தடவி சில நிமிடங்கள் நன்றாக தேய்க்கவும். பிறகு, துணிகளை நீரில் அலசினால் கறை நீங்கிவிடும்.
Also Read : தினசரி எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? உங்களுக்கான ஸ்லீப்பிங் கால்குலேட்டர்!
ஆல்கஹால் : ஆடைகளில் உள்ள கறைகளை அகற்ற ஆல்கஹாலும் பயன்படுத்தலாம். துணிகளை துவைப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் ஆல்கஹாலை கறைகள் இருக்கும் இடத்தில் ஊற்றி நன்கு தேய்க்கவும். இதற்குப் பிறகு துணிகளைத் துவைத்தால் கறை போய்விடும்.
வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு: எலுமிச்சை மற்றும் வினிகரை அரை பக்கெட் தண்ணீரில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கறைப்படிந்த துணிகளை அந்தத் தண்ணீரில் ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து துவைக்கவும். இது கறைகளை போக்குவதோடு மட்டுமல்லாமல் துணிக்கு நல்ல நறுமணத்தையும் தருகிறது.
குளிர்ந்த நீர் : உங்கள் ஆடையில் கறைகள் பட்டால் உடனடியாக குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால், கறையானது போய்விடும். இந்த முறையைப் பயன்படுத்தினால், துணியின் தரம் குறையாமல் நீண்ட நாட்கள் இருப்பதோடு, கறையும் நீங்கிவிடும்.
Also Read : உடல் சூட்டை குறைப்பது எப்படி? How To Reduce Body Heat Naturally?
தேநீர் அல்லது காபி கறைகள்: கறை நீங்கும் வரை கொதிக்கும் நீரை அதன் மீது ஊற்றவும். ஏற்கனவே துணிகளில் கறை நன்றாக பிடித்துக்கொண்டிருந்தால், போராக்ஸ் பவுடருடன் தண்ணீர் கலந்து பேஸ்ட் பதத்தில் கறையின் மீது நன்றாக தேய்த்து, உடனடியாக ஆடையை துவைக்கவும். அல்லது, கறை பட்ட இடத்தை சூடான பால் கொண்டு தேய்த்தால் கறை போய்விடும்.
புல் கறைகள்: லிக்விட் சோப்பு கொண்டு கறையுள்ள இடத்தில் தேய்க்கலாம், அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடுடன் தண்ணீரை சம அளவு கலந்து தேய்த்தால் கறை நீங்கிவிடும்.
மண் கறைகள்: கறைகளை நன்றாக காயவிட்டு துவைத்துப் பார்க்கலாம். கறை போகவில்லை என்றால், போராக்ஸ் பவுடருடன் தண்ணீர் கலந்து பேஸ்ட் பதத்தில் கறையின் மீது நன்றாக தேய்த்து உடனடியாக அலசவும்.
கிரீஸ் மற்றும் எண்ணெய் கறைகள்: உலர்ந்த பேக்கிங் சோடா பவுடரை கறை மீது பூசவும். இது எண்ணெய் அல்லது கிரீஸை அகற்ற உதவுகிறது. பின்னர், வெள்ளை வினிகரில் 15 நிமிடங்கள் கறைபட்ட துணியை ஊறவைத்து, லிக்விட் சோப்பில் துவைத்து அலசவும்.
இங்க் கறை: ஆல்கஹால், ஹேர் ஸ்ப்ரே அல்லது ஹேண்ட் சானிடைசரை பருத்தி துணியில் தொட்டு கறைபட்ட இடத்தில் தடவி 1 முதல் 3 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு காகிதத்தால் கறைபட்ட இடத்தில் துடைத்துப் பார்க்கவும். கறை நீங்கல்லை என்றால் ஏற்கனவே செய்தது போல மீண்டும் செய்யவும்.

தக்காளி சார்ந்த கறைகள்: கறைபட்ட பகுதியை வெள்ளை வினிகர் கொண்டு தேய்த்து உடனடியாக அலசவும்.
மங்கலான வெள்ளை அல்லது அண்டர்ஆர்ம் டியோடரன்ட் கறைகள்: ஹைட்ரஜன் பெராக்சைடுடன் அதே அளவு தண்ணீரைக் கலந்து துணியை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் அதனுடன் ஒரு கப் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்கவும். கடினமான மஞ்சள் கறைகளுக்கு, 3 சதவீத ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் பேக்கிங் சோடாவை பேஸ்ட் செய்து கறையில் தேய்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து துணியை அலசவும்.
வாழைக் கறை: குளிர்ந்த நீரில் கறை பட்ட இடத்தை நன்றாக அலசவும். சோப்பு அல்லது டிஷ் சோப்பைப் பயன்படுத்தி கறைபட்ட இடத்தை மெதுவாக தேய்த்து, 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும். துவைப்பதற்கு முன்பாக சம அளவு வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீர் கலவையில் ஊற வைத்து கசக்கிய பிறகு சூடான நீரில் ஆடையை அலசவும். அழுத்தமான கறைகளுக்கு பேக்கிங் சோடா பேஸ்டைப் பயன்படுத்தவும்.
உணவு உண்ணும் போது உங்கள் ஆடையில் உணவுத்துளிகள் விழுந்தால், முதலில் துணியின் கறை படிந்த இடத்தில் டால்கம் பவுடரை தடவவும். இப்படி செய்தால் உணவில் இருக்கும் எண்ணெய்க் கரை நீங்கிவிடும். இதற்குப் பிறகு, தண்ணீர் மற்றும் வினிகர் கலவையை கறை படிந்த இடத்தில் தடவி பின்னர் துவைத்தால் கறைகள் நீங்கிவிடும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry