நோயாளி வைத்திருந்த பணம் கொள்ளை! தனியார் மருத்துவமனை மெத்தனம்! சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்!

0
59

காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் ஒருவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மேட்டு தெருவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான எலும்பு சிகிச்சை மருத்துவமனை உள்ளது. இங்கு ரம்யா என்ற இளம்பெண் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். கடந்த 03-ந் தேதி இரவு ரம்யா வைத்திருந்த கைப்பை காணாமல் போய்விட்டது. அந்த கைப்பையில் 50,000 ரூபாய் மற்றும் ரம்யாவின் வங்கி ஏடிஎம் கார்டு இருந்துள்ளது.

மருத்துவமனை சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர் அறையின் பின் பக்க கதவை திறந்து உள்ளே வந்து கைப்பையை களவாடிக்கொண்டு சென்றது தெரியவந்தது. பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மருத்துவமனையின் பின்புறம் திறந்த வெளியில் வங்கி ஏடிஎம் கார்டு உள்ளிட்டவைகளை தூக்கி வீசிவிட்டு அந்த நபர் தப்பியுள்ளார்.

ரம்யாவின் உறவினர் கலைச்செல்வன், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடனை தேடி வருகின்றனர். பாதுகாப்பு விஷயத்தில் மருத்துவமனை நிர்வாகம் மெத்தனமாக இருப்பதை அறிந்தே கொள்ளையன் தைரியமாக நோயாளியின் அறைக்குள் புகுந்து பணத்தை திருடிச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry