ஞாபக மறதியை அடியோடு மறக்கடிக்கனுமா? மறதிக்கு டஃப் கொடுக்கும் மூலிகைகள்!

0
92
Find out which herbs can help fight brain fog and enhance your memory and cognitive performance. Getty Image.

உடலின் இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளை, சரியாக இயங்கா விட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், உடலில் சோர்வு உண்டாகும். ஞாபக மறதி என்பது வயது தொடர்பான பிரச்சனையாக தோன்றலாம், ஆனால் சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை மூலம் அதை கட்டுப்படுத்தலாம்.

குறிப்பாக, சில சிறப்பு மூலிகைகள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும், மறதியைக் குறைக்கவும் உதவுகின்றன. இந்த மூலிகைகள் நரம்புகள் மற்றும் நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்து மூளை ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

Also Read : சுகர் பேஷன்ட்ஸ் இந்த பழங்களை சாப்பிடலாம்! இந்த பட்டியலை குறித்து வையுங்க!

வல்லாரை:

ஞாபக மறதி என்றவுடன் சித்த மருத்துவ மூலிகைகளில் மக்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது வல்லாரை கீரைதான். சரஸ்வதி மூலிகை எனப்படும் வல்லாரையில் உள்ள ஆசியாடிகோசைடு வகை வேதிப்பொருள் ஞாபகமறதியைக் குறைக்கும். வல்லாரையை கீரையாகவோ அல்லது மாத்திரையாகவோ சாப்பிடலாம்.

பிராமி:

இது மூளைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்வது நினைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து மன ஆற்றலை அதிகரிக்கிறது. இதை தினசரி மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளலாம். இந்த மூலிகை மூளைக்கான இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் மூளையில் உள்ள நரம்பு செல்களை பாதுகாக்கிறது.

சங்கு புஷ்பம்:

மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கு ஊட்டமளித்து மறதியை குறைக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதை காலையில் தேநீர் வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம். பல் வலி, தலைமுடி ஆரோக்கியம், அல்சர், தொண்டர் பிரச்சனை போன்றவற்றை குணமாக்க உதவும்.  மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் நரம்பு தளர்ச்சி, ஞாபகம் மறதி போன்றவற்றையும் குணமாக்கும் சக்தி சங்கு புஷ்பம் என்கிற இந்த விஷ்ணுகிராந்தி பூவிற்கு உள்ளது.

அமுக்கரா அல்லது அஸ்வகந்தா:

அஸ்வகந்தா மூலிகை மூளையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து நினைவாற்றலை மேம்படுத்துகிறது. இது மூளையில் உள்ள நரம்பு செல்களை பாதுகாக்கிறது. அல்சைமர் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, தூக்கமின்மையால் ஏற்படும் மறதியைக் கட்டுப்படுத்துகிறது. இது மாத்திரையாகவும், சூரணமாகவும் கிடைக்கிறது.

துளசி:

துளசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. அவை மூளையில் உள்ள நரம்பு செல்களைப் பாதுகாக்கின்றன. நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்துவதில் மூளை முக்கிய பங்கு வகிக்கிறது. துளசி இலையின் சாறு குடிப்பதால் மறதி குறையும். மாத்திரையாகவும், சூரணமாகவும் கிடைக்கிறது.

பாசில் மரம்:

ஜின்கோ பிலோபா எனப்படும் கிழக்காசியாவைச் சேர்ந்த பாசில் மர இலைகள்  சீன மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நினைவாற்றலை அதிகரிப்பதோடு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.

Also Read : காபி Vs டீ – எது பெஸ்ட்? ஒரு நாளைக்கு எத்தனை கப், எந்த நேரத்தில் குடிக்கலாம்?

கிரீன் டீ:

கிரீன் டீ உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. நினைவக செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

அக்கரகாரம்:

மூளையின் ஆற்றல் சீராக, அக்கரகார வல்லாரை மருந்து உறுதுணை புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வர, மூளையின் செயல்பாட்டை சீராக்கும் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படுத்தும். ஞாபக சக்தி மீண்டும் இயல்பாகும்.

அக்கரகாரம்

Summary :

  • பிரமி நெய் 5 மி.லி. வீதம் காலை, இரவு சாப்பிடலாம்,
  • வல்லாரை மாத்திரை 2 காலை, இரவு எடுக்க வேண்டும்.
  • அமுக்கரா லேகியம் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
  • நெல்லிக்காய் லேகியம் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும்.
  • சங்கு புஷ்ப மலர்களை டீ போட்டு குடிக்கலாம். இவை மூளை நரம்புகளுக்கு சிறந்த பலனைத் தரும்.
  • அக்கரகாரம் என்ற மூலிகை வேரிலிருந்து எடுக்கப்படும் `பைரித்ரின்’ நரம்புகளுக்கு உற்சாகத்தை தருகிறது. ஞாபகசக்தியை அதிகரிக்கிறது.

வெண்டைக்காய், நெல்லிக்காய், எலுமிச்சை, புதினா, கேரட், திராட்சை, ஆப்பிள், பேரீச்சை, முட்டை, பசலைக்கீரை, பாதாம் பருப்பு, வால்நட், முருங்கைக்காய் போன்றவைகளை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பெர்ரி வகைப் பழங்கள், பூசணி விதைகள், பாதாம், வால்நட், வேர்க்கடலை இவைகளில் உள்ள விட்டமின் ஈ, விட்டமின் டி, ஒமேகா-3, துத்தநாகம் போன்றவைகளும் ஞாபகசக்தியை அதிகப்படுத்துகின்றன. உடற்பயிற்சி, தியானம், பிரார்த்தனைகளும் நல்ல பயனைத் தரும்.

Disclaimer: This content is for informational purposes only and is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the guidance of a qualified healthcare provider with any questions you may have regarding a medical condition or before starting any herbal regimen.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry