சிறுநீரகம் ஹெல்த்தியா இருக்க என்ன செய்யனும்..? உடலில் இருந்து நச்சுகள் வெளியேறாவிட்டால்..!

0
87
Discover top natural tips for maintaining healthy kidneys. Learn about dietary changes, lifestyle habits, and natural remedies to support kidney function and overall well-being. | Human kidneys, computer illustration.

நமது உடலின் மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகம். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், சிறுநீர் வழியாக உடலில் இருந்து நச்சுகளை அகற்றுகிறது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டால், உடலில் பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

உடல் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய வேலையை செய்யும் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்தினாலே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திவிடலாம்.

Also Read : காலையில் டீ, காபியோடு பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? அச்சுறுத்தும் உண்மை..!

காலையில் எழுந்தவுடன் சில எளிய முறைகளைப் பின்பற்றுங்கள். இதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாகவும், மிகவும் சுறுசுறுப்பாகவும் மாற்றலாம். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் வி.கே. பாண்டே, சிறுநீரகத்தில் நச்சுக்கள் தேங்காமல் நீங்குவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளார். அவரின் இந்த டிப்ஸ் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும்.

இதன்படி, சிறுநீரகங்கள் ஆரோக்கியமான முறையில் செயல்பட, சில பணிகளை காலையில் செய்ய வேண்டும். இதைச் செய்வது பல ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதோடு பல நோய்களையும் தடுக்கிறது. சிறுநீரகங்களை நீண்ட நேரம் சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் வைத்திருக்க தண்ணீர் மிகவும் முக்கியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களை சுறுசுறுப்பாகவும் சிறப்பாகவும் செயல்பட வைக்கிறது.

Kidneys, illustration

நிறைய தண்ணீர் குடிப்பது சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது. ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உடற்பயிற்சியும் மிகவும் முக்கியம். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், மேலும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். சிறுநீரகம் போதுமான அளவு நச்சு நீக்கம் செய்யாவிட்டால், சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்படலாம். மேலும் அது சிறுநீரக செயலிழப்பையும் ஏற்படுத்தும்.

சிறுநீரகங்களில் நச்சு நீக்கம் செய்ய, தினமும் காலையில் குறைந்தது இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும், அதில் எலுமிச்சை சேர்த்துக் குடித்தால், அது அதிக நன்மை பயக்கும். இது நச்சுக்களை நீக்கி சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

Also Read : ரெடிமேட் மாவு வாங்கி இட்லி, தோசை செய்யறீங்களா? இந்த உண்மை தெரிஞ்சா இனி வாங்கவே மாட்டீங்க..!

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். நொறுக்குத் தீனிகள் மற்றும் ஜீரணிக்க நேரம் எடுக்கும் உணவுகளை குறைவாக சாப்பிடுவது நல்லது. இதனுடன், உணவில் உப்பையும் பெருமளவில் குறைக்க வேண்டும். அதிக உப்பு சாப்பிடுவது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும். ஆக்சலேட் கொண்ட உணவுகளையும் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். சிறுநீரகம் தொடர்பான எந்தவொரு பிரச்சினைக்கும், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.

நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். வெறுமனே அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதை விட, அதிக காய்கறி பழங்கள் இருக்குமாறு உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட ஆயுளுடன் இருக்க உதவும்.

Image Source : Getty Image.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry