Truecaller செயலியானது தற்போது அனைத்து மொபைல் பயன்பாட்டாளர்களும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு அப்ளிகேசனாக இருந்துவருகிறது. தங்களுடைய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் தொடர்ந்து பல அம்சங்களை ட்ரூகாலர் அறிமுகப்படுத்திவருகிறது.
அந்த வகையில் இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி மோசடி அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை ஃபில்டர் செய்யும் அம்சம், மெசெஞ்சர் ஐடி முதலிய பல அம்சங்களை தொடர்ந்து ட்ரூகாலர் செய்துவருகிறது. இத்துடன் கால் ரெக்கார்டிங் அம்சத்தை விரைவில் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக ட்ரூகாலர் அறிவித்துள்ளது.
கால் ரெக்கார்டிங் அம்சமானது ட்ரூகாலரில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவில்லை. இது தொடக்க காலத்தில் ஏற்கனவே இந்த செயலியால் வழங்கப்பட்டது. ஆனால் அப்போது கால் ரெக்கார்டிங் அம்சமானது API ஃபியூச்சரைப் பயன்படுத்தி செயல்பட்டதால் கூகுள் அதை முறியடித்தது. அதன் பிறகு அந்த அம்சத்தை வழங்குவதை ட்ரூகாலர் நிறுத்தியது.
Also Read : செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த ஆளுநர்! அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை!
தற்போது AI மூலம் செயல்படும் வகையில் புதிய கால் ரெக்கார்டிங் அம்சத்தை அறிமுகப்படுத்த ட்ரூகாலர் திட்டமிட்டுள்ளது. இது முதலில் அமெரிக்காவில் இருக்கும் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், விரைவில் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கும் வழங்கப்படும் என்று ட்ரூகாலர் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள ட்ரூகாலர் நிறுவனத்தின் பதிவில், “அமெரிக்காவில் உள்ள ஐபோன் பயன்பாட்டாளர்களே, புதிய அப்டேட் விருந்துக்கு தயாராகுங்கள். எங்களின் சமீபத்திய அப்டேட் மூலம் உங்கள் ரெக்கார்டிங் சூப்பர் ஹீரோவை பயன்படுத்துங்கள். ஆண்ட்ராய்டு பயனர்களே காத்திருங்கள். உங்கள் சாதனங்களுக்கும் அழைப்பு பதிவு விரைவில் வருகிறது. மேலும் பல நாடுகளுக்கும் இது கொண்டு சேர்க்கவிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளது.
Also Read : சுவையான நஞ்சா அஜினோமோட்டோ? அதென்ன ‘சைனீல் ரெஸ்டாரன்ட் சின்ட்ரோம்’? THE HARMFUL EFFECTS OF AJINOMOTO!
கால் ரெக்கார்டிங் அம்சமானது, ஒரு நபருக்கு கால் செய்யும் போது ‘Call the Recording Line’-ஐ கிளிக் செய்யவேண்டும். அதனை தொடர்ந்து ‘Add Call’ கொடுத்து எந்த நம்பருக்கு கால் செய்கிறோமோ, அதை டயல் செய்து, பின்னர் மெர்ஜ் கொடுக்க வேண்டும். தற்போது உங்களுடைய போன் கால், ரெக்கார்டு செய்யப்படும். பின்னர் அழைப்பு முடிந்ததும், உங்களுடைய ரெக்கார்டு தயாராக உள்ளதாக நோடிபிகேசனில் அறிவிப்பு வரும்.
ரெக்கார்டிங் செய்வதை தொடர்ந்து அதனை ட்ரூகாலரிலேயே பெயர் மாற்றம், எடிட், ஷேரிங் அனைத்தையும் உங்களால் செய்துகொள்ளக்கூடிய வகையில் இந்த அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதலில் இந்த ஃபியூச்சரானது பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் இந்தியாவில் உள்ள ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த ஃபியூச்சர் வழங்கப்படும் என்று ட்ரூகாலர் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry