தினசரி வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? சுகர் பேஷன்ட்டும் வாழைப்பழம் சாப்பிடலாமா?

0
125
Bananas are fresh, versatile, and relatively inexpensive fruits. They’re packed with essential nutrients and may benefit weight loss, digestion, and heart health.

அனைத்து சீசன்களிலும் நமக்கு எளிதாகக் கிடைப்பது வாழைப்பழம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடவும் செய்வார்கள். பிற பழங்களை ஒப்பிடும்போது விலையும் குறைவாக இருக்கும். பொதுவாக ஒவ்வொரு வகை வாழைப்பழமும் ஒவ்வோர் எடையில், சுவையில் இருக்கும்.

வாழைப்பழம் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வாழைப்பழம் அனைத்து காலநிலையிலும் எளிதில் கிடைக்கக் கூடிய பழம் ஆகும். வாழைப்பழம் உடலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும். நார்ச்சத்து, பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளதோடு, நுண்ணூட்டச் சத்துக்களான வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் சோடியம் ஆகியவற்றை வாழைப்பழம் வழங்குகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, செரிமான அமைப்பும் வலுவாக இருக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி ஏற்படாது. இது உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும்.

Also Read : மெடிக்கல் இன்ஷுரன்ஸ் உங்களுக்கு மட்டுமானதல்ல…! செல்லப் பிராணிகளுக்கும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியம்! Pet Insurance!

ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் தினசரி உட்கொள்ள வேண்டிய 11 ஊட்டச்சத்துகளில் 5 உள்ளது: இரும்பு, துத்தநாகம், வைட்டமின் A, செலினியம் மற்றும் புரதம். இது ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான மேலும் நான்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் வழங்குகிறது. தினசரி அளவில் தேவையான 11 சதவிகிதம் வைட்டமின் சி சத்தை ஒரு வாழைப்பழம் கொடுக்க முடியும். இது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்ய அவசியமானது.

உயர் ரத்த அழுத்தம், உயர் மன அழுத்தம் உள்பட தீவிரமான உடல் கோளாறு ஏற்பட பொட்டாசியம் குறைபாடு காரணமாகிறது. பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளான வாழைப்பழம் போன்றவற்றின் செயல்திறன், ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும், இருதய நோய்கள், பக்கவாதம் வராமல் தடுப்பதிலும் சிறப்பாக துணைநிற்பது அறிவியல் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் சில ஆய்வுகளில், பொட்டாசியம் நிறைந்த உணவு ரத்த ஓட்டத்தில் சோடியம் அளவை கட்டுப்படுத்துதல் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என காட்டுகின்றன. பொட்டாசியம் சத்தைப் பெறுவதற்கு வாழைப்பழம் ஓர் மிகச்சிறந்த இயற்கையான மூலம். ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழம் தினசரி உட்கொள்ள தேவையான பொட்டாசியத்தில் 12 சதவிகித அளவைக் கொண்டுள்ளது.

One banana a day can keep a doctor away. Bananas contain a fair amount of carbs, water, fiber, and antioxidants but little protein and no fat.

ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வாழைப்பழம் உதவுகிறது. வாழைப்பழத்தில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கலை நீக்குகிறது. வாயு, வலி மற்றும் வயிற்றில் உள்ள பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளையும் நீக்குகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் வயிறு ஆரோக்கியமாக இருக்கும். வாழைப்பழம் உடலை ஆரோக்கியமாக வைத்து, உடலில் உள்ள நீர்ச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. வயிற்றுப் போக்கு பிரச்சனைக்கு வாழைப்பழம் பேருதவியாக இருக்கும். ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் நம் உடலுக்கு தினசரி தேவையான நார்ச்சத்து 12 சதவிகிதம் உள்ளது.

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலின் எலும்புகள் வலுவடையும். வாழைப்பழத்தில் ஏராளமான கால்சியம் உள்ளது. இது எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் பலவீனத்தை நீக்குகிறது. வாழைப்பழத்தில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியா, உணவில் இருந்து கால்சியத்தை உறிஞ்சுகிறது. இதனால் உடல் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்கும்.

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மன அழுத்த பிரச்சனை நீங்கும், வாழைப்பழத்தில் டிரிப்டோபான் என்ற உறுப்பு உள்ளது, இது உடலில் செரோடோனின் உற்பத்தி செய்கிறது. செரோடோனின் மகிழ்ச்சி ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக, மகிழ்ச்சியான ஹார்மோன்கள் உடலில் வெளியாகி, மன அழுத்த பிரச்சனை நீங்கும்.

Also Read : பூசணி விதைகளில் மூழ்கிக் கிடக்கும் மருத்துவ மகிமை! ஆச்சரியம்… ஆனால் உண்மை..! வயாகரால்லாம் பக்கத்துலயே நிக்காது..!

வாழைப்பழத்தில் மெலடோனின் என்ற சத்து உள்ளது. இது தூக்கத்தை முறைப்படுத்த உதவுவதோடு, உடலின் இயற்கையான சுழற்சியை ஒழுங்குபடுத்தும். அதுபோலவே இதிலுள்ள இரும்பு சத்து மாதவிலக்கு நோய் அறிகுறி சார்ந்த பிரச்சனையை எதிர்க்க உதவும். பொட்டாசியம் குறைபாடு தசைப்பிடிப்பு ஏற்படுத்தலாம். கொஞ்சம் வாழைப்பழங்களை உண்பதால் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் அளவை திறன்பட சமன்செய்ய முடியும். பொட்டாசியம் உடலில் நீர் தங்கியிருக்கும் தன்மையை தடுக்கிறது, இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் B6 சிவப்பு ரத்த அணுக்களை தயாரிக்கிறது, இது மாதவிடாய் காலங்களில் உடலுக்கு மிகவும் நல்லது.

வாழைப்பழத்தில் ஏராளமான நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளது, இது உங்களை நீண்ட நேரம் பசியாக உணராமல் தடுக்கிறது. எடையைக் குறைக்க உதவுகிறது. காலை உணவு அல்லது மாலை நேர சிற்றுண்டியாக வாழைப்பழத்தை எளிதாக சாப்பிடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, விரைவில் உடல் எடையும் குறையும். தினமும் ஒரு வாழைப்பழம் உடலுக்கு நன்மை பயக்கும்.

Bananas are rich in soluble fiber. During digestion, soluble fiber dissolves in liquid to form a gel. This may also contribute to a banana’s sponge-like textureTrusted Source.

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து உட்கொள்வது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் பல பழங்களை சாப்பிட முடியாது. ஆனால் வாழைப்பழத்தை குறைந்த அளவில் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இருப்பினும் மருத்துவர் பரிந்துரை பேரில் மட்டுமே சாப்பிடுவது நல்லது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry