வெந்தயக் கீரை நம்மை விட வட இந்தியாவில் அதிகம் பயன்படுத்துவார்கள். சப்பாத்தி, தால், பராத்தா, கசூரி மேதி எனப்படும் காய்ந்த வெந்தய இலைகளை எல்லா குழம்பு வகைகளிலும் பயன்படுத்துவரகள். ரத்த சோகைக்கு அற்புத மருந்து இது. பித்தத்தையும் குறைக்கும். தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிடூவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். பார்வைக்கோளாறு சீராகும். காசநோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.
பொதுவாகவே கீரைகளில் அதிக இரும்புச் சத்து மற்றும் கால்சியம் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக்கூட்டி உடல் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில் நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
Also Read : பேரு என்னவோ ‘சின்ன’ வெங்காயம்! ஆனால் மருத்துவ பலனோ மிகப் பெரிது..!
உடலுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்கும் உணவாக வெந்தயக் கீரை இருக்கிறது. இது சற்று கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை பலரும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இதில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் தெரிந்தால் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வீர்கள்.
வெந்தயக் கீரையை சாப்பிடும் முறைகள்
வெந்தயக் கீரையை திறந்த படிதான் சமைக்க வேண்டும். மூடி வைத்தால் அதன் சத்துக்கள் அழிந்துவிடும். வெந்தயக் கீரையில் குழம்பு, சப்பாத்தி மாவுடன் கீரையை சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்யலாம். அல்லது தோசையின் மேல் வெந்தயகீரையை தூவி வெஜிடபிள் தோசை போல சாப்பிடலாம். இன்னும் சுலபமான முறை வெந்தயக் கீரையை நன்றாக கழுவி, காய வைத்து அதனை தினமும் செய்யும் குழம்பில் , பொறியலில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த மாதிரி தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
சர்க்கரை நோய்
வெந்தயக் கீரை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இதனால், ரத்தத்தில் சர்க்கரை சேரும் அளவு குறைகிறது. கீரையில் உள்ள அமினோ அமிலம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் எப்போதும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
மாதவிடாய் பாதிப்புகள்
மாதவிடாய் வலி, பிரச்சினைகளை வெந்தயக் கீரை போக்கும். 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதவிடாய் நின்ற பிறகு, அவர்களின் உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். மனதுக்கும் உடலுக்கும் சக்தியைத் தரும்.
கண்பார்வை
கண் பார்வைக் குறைவு நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். இப்போதெல்லாம் 40களிலேயே கண்புரை பாதிப்புகள் வருகின்றன. வெந்தயக் கீரையை வாரம் 3 நாட்களாவது சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை நோய்கள் வராது.
உடல் சூடு
உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.
நரம்பு தளர்ச்சி & வயிற்றுக் கோளாறு
வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர சீரிய முறையில் உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல் போன்ற வயிறு சார்ந்த கோளாறுகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவும். வயிற்றுப்புண் உள்ளவர்கள் அரை டீஸ்பூன் வெந்தயத்தை மோரில் ஊறவைத்து அருந்த விரைவில் குணமாகும்.
Also Read : வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி… எது பெஸ்ட்? நீரிழிவு நோயாளிகள் கருப்பட்டி எடுக்கலாமா?
ரத்த சோகை
இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்தச்சோகை வராமல் வெந்தயக் கீரை தடுக்கும். ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும். வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இதனால் பருவ கால நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
சிறுநீரக பாதிப்புகள்
சிறு நீரக பிரச்சனைகளை தடுக்கிறது. வெந்தயக் கீரை குளிர்ச்சியானது. சிறுநீர்ப் பெருக்கியாகச் செயல்படுவது. உடலில் சேரும் தேவையற்ற கனிமங்களை வெளியேற்றுகிறது. இதனல சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.
வயிற்று பாதிப்புகளுக்கு
ஒரு பிடி வெந்தயக் கீரையை எடுத்து நீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி கீரையை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேன் சேர்த்து தினமும் எடுத்து வருவதால், உடலில் உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்று வலி, காரத்தால் ஏற்படும் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
இடுப்பு வலி
வெந்தயக் கீரையை, முட்டையின் வெள்ளை கரு, தேங்காய் பால், சீரகம், மிளகு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.
கல்லீரல் நோய்களுக்கு
வெந்தயக் கீரையை அரைத்து, வெல்லம் சேர்த்து லேகியமாக தயார் செய்து சாப்பிட்டு வந்தால், கல்லீரல், மண்ணீரல் வீக்கங்கள் குணமாகும். கல்லீரலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும். கல்லீரல் ஆரோக்கியம் பெறும். கல்லீரல் சம்பந்தப் பட்ட நோய்கள் வராது.
உடல் சோர்வு & உயர் ரத்த அழுத்தம்
உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக உதவும். அதனால் மந்தமாக உணருபவர்கள் அல்லது உடல் சோர்வாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். வெந்தயக் கீரையின் தண்டை அரைத்து, மோருடன் குடித்துவர, வயிறு தொடர்பானப் பிரச்னைகள் தீரும். வெந்தயம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளைப் போக்கும்.
Also Read : முட்டைகோஸில் உள்ள மருத்துவ பயன்கள் என்னென்ன? Cabbage Benefits: How This Superfood Boosts Your Health!
தாய்ப்பால் சுரக்க & சரும பிரச்சனைகளுக்கு
கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் உணவில் வெந்தயக் கீரையை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இவை தாய்ப்பாலை அதிகம் சுரக்கத் தூண்டுகின்றன. முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் சுருக்கங்கள் இருந்தால், வெந்தயக் கீரைச் சாற்றைத் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவிவர முகம் பொலிவுபெறும். பருக்கள் நீங்கும்.
முடி உதிர்வதைத் தடுக்க
ஃப்ரெஷ்ஷான வெந்தயக் கீரையின் இலைகளை அரைத்து, பேஸ்ட் செய்து, உச்சந்தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவிவர, கூந்தல் நன்கு வளரும். முடி உதிரும் பிரச்னை குறையும்.
Source : Boldsky
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry