படுக்கையறை வாஸ்து..! படுக்கையறையில் வைக்க உகந்த செடிகள், வண்ணங்கள்!

0
26
Optimise your bedroom with Vastu principles. Explore ideal plants and colors that promote tranquility, relaxation, and restful sleep.

வாஸ்து சாஸ்திரத்தின் மூலம் நம் வாழ்க்கையையும், வாழும் இடத்தையும் மேம்படுத்தலாம், வாழ்க்கையில் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் நேர்மறை ஆற்றலைத் தக்க வைக்க வழிவகுக்கலாம் என்பதும் பலரது நம்பிக்கை.

வாஸ்து சாஸ்திர விதிகளை உறுதியாக நம்பாதவர்கள் கூட வாஸ்து சாஸ்திரத்தைப் பயன்படுத்தி கட்டப்படும் வீடு, அந்த இடம் முழுவதையும் சுற்றி ஏற்படும் நன்மைகளை புரிந்துகொண்ட பிறகு, வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்ற முனைகிறார்கள். வாஸ்து சாஸ்திரம் குடும்ப உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Also Read : கட்டில் வைக்கும் திசை முதல் படுக்கை அறை வரை..! பயனுள்ள வாஸ்து டிப்ஸ்!

  • மணி பிளான்ட்: மணி பிளான்ட் செடியை படுக்கையறையின் கூர்மையான மூலைகளில் வைக்க வேண்டும். இது நமது ஆராவை சுத்தப்படுத்தி மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கிறது. படுக்கையறைக்குள் இருந்தாலும் இந்தச் செடிக்கு மறைமுகமாக லேசான சூரிய வெளிச்சம் கிடைக்குமாறு வைக்க வேண்டும். வீட்டினுள் வளர்க்கப்படும் இந்தக் கொடியானது காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. எனவே, இது வாடிவிடாமல் தொடர்ந்து வளர்வதற்கு தேவையான பாதுகாப்பு அளிப்பது அவசியம்.
  • மூங்கில் செடி: வாஸ்து சாஸ்திரத்திலும், ஃபெங் சூயிலும் மூங்கில் செடியானது மிகவும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய செடியாக கருதப்படுகிறது. இந்தச் செடியை அறையின் எந்தப் பகுதியிலும் வைக்கலாம். இதற்கு ஓரளவு கண்காணிப்பு மட்டுமே போதுமானது. இருப்பினும் தென்கிழக்கு மூலை இந்தச் செடிக்கு மிகவும் ஏற்ற திசையாக கருதப்படுகிறது.
  • லில்லி செடி: மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக லில்லி செடி கருதப்படுகிறது. மேலும், லில்லி செடிகள் நேர்மறை ஆற்றலை தூண்டி கெட்ட கனவுகள் வராமல் தடுக்கின்றது.
  • லாவண்டர் செடி: அமைதியான மனநிலையை உணரும் விதமான மணம் கொண்ட லாவண்டர் செடியை வீட்டில் வளர்ப்பது மன அமைதியை ஊக்குவிக்கிறது. இச்செடியின் அருமையான நறுமணத்தை பெரும் விதமாக கட்டிலுக்கு அருகே உள்ள டேபிளில் வைக்கலாம்.

Also Read : வாஸ்துப்படி வீட்டில் டிவி, ஏசி, ஃப்ரிட்ஜ் வைப்பதற்கு சரியான திசை எது? Vasthu for Electronics Appliances!

படுக்கையறை வாஸ்துவில் தோஷங்களுக்கான பரிகாரங்கள்

வடகிழக்கு திசை நோக்கிய படுக்கையறையில், கடல் உப்பு நிறைந்த கிண்ணம் அல்லது கற்பூர வில்லைகளை வைக்க வேண்டும். கடல் உப்பு மற்றும் கற்பூர வில்லைகள் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சக்கூடிய தன்மை கொண்டது. அத்துடன், இது வாஸ்து குறைபாடுகளையும் போக்குகிறது. வடகிழக்கு திசை நோக்கிய படுக்கையறை சுவருக்கு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பெயின்ட் செய்வது சிறந்தது.

வடகிழக்கு திசையில் ஏதேனும் வாஸ்து தோஷங்கள் இருப்பின் அதனை நீக்க லாவண்டர் ரூம் ஸ்ப்ரே உதவுகிறது. வடமேற்கு திசை நோக்கிய படுக்கையறையில் வசிப்போருக்கு அடிக்கடி பண பிரச்சினைகளும் மன அழுத்தமும் ஏற்படும். வடமேற்கு மூலையில் சந்திர எந்திரத்தை வைப்பதன் மூலம் அங்குள்ள வாஸ்து தோஷங்களை நீக்க முடியும்.

வடமேற்குத் திசையில் படுக்கை அறை

வடமேற்கு படுக்கையறை பெரும்பாலும் அதன் குடியிருப்பாளர்களின் வாழ்க்கையில் செல்வ இழப்புகளையும் மன அழுத்தத்தையும் கொண்டுவருகிறது. சந்திர யந்திரத்தை வடமேற்கு மூலையில் வைப்பது வாஸ்து தோஷங்களை சரிசெய்ய உதவும்.

Also Read : வீட்டில் கண்ணாடியை எந்த திசையில் வைக்க வேண்டும்? பெட் ரூமில் வைத்தால்…! Mirror Vastu: Tips for placing mirrors at home and office!

தென்கிழக்குத் திசையில் படுக்கை அறை

தென்கிழக்குத் திசை அக்னி(தீ) குடியிருக்கும் திசையாகும். தென்கிழக்குத் திசையில் தூங்குவது, உயர் இரத்த அழுத்தம், மற்றும் நீரிழிவு போன்ற நோய்கள் உருவாகக் காரணமாகும். ஆகவே தூங்கும் போது வாஸ்து வழிகாட்டுதல்களை பின்பற்றி நடப்பது அவசியமாகும் மற்றும் தலைப்பகுதி கிழக்கு அல்லது தெற்குத் திசையில் வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு வாஸ்துப்படி தெற்கு திசையே சிறந்த திசையாகும். அதாவது கால் பகுதியானது வடக்கு திசையை நோக்கியபடி இருக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் அமைந்துள்ள ஒரு படுக்கை அறை திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டாக்கும். அதில் குடியிருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியப் பிரச்சினைகளையும் அது தோற்றுவிக்கும்.

Also Read : துளசி மாடத்தை எந்தத் திசையில் வைக்க வேண்டும்? பணம் பெருமளவில் சேர துளசிக்கு எப்படி தண்ணீர் ஊற்ற வேண்டும்? Vastu for Tulsi Plant!

வாஸ்துப்படி படுக்கையறைக்கு எந்த வண்ணம் சிறந்தது?

உங்களது படுக்கையறைக்கு ஆஃப் ஒயிட், பேபி பிங்க் அல்லது கிரீம் நிறங்களில் பெயின்ட் செய்யலாம். படுக்கையறை ஒழுங்காக சீராக அடுக்கப்பட்டு இருக்க வேண்டும். எப்போதும் சுத்தமாகவும் தேவையற்ற பொருட்கள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

Disclaimer: The information provided in this article regarding Vastu principles, plants, and colors is based on traditional beliefs and general guidelines. Vastu Shastra is a traditional Indian system of architecture and design, and its effectiveness is a matter of personal belief. 1 The recommendations provided are for informational purposes only and should not be considered a substitute for professional advice.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry