
தயிரில் நமது உடலுக்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. தயிர், இயற்கையிலேயே, அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள் ஆகும். கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி 12, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் தயிரில் மிக அதிகளவில் உள்ளன.
தயிர் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த வேலை செய்யும் நொதிகளை உடலுக்கு வழங்குகிறது. தினமும் 1 கப் தயிர் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. தயிர் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். தயிரில் உள்ள கால்சியம் நமது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு நன்மை பயக்கும். தயிர் உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க உதவுகிறது.
தயிரின் இந்த நல்ல குணாதிசயங்களை அறிந்த மனிதர்கள், தயிர் உடன் சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களை கலந்து சாப்பிட்டால், அது நம் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதை எளிதாக மறந்து விடுகின்றனர்.
Also Read : கோடை காலத்தில் தர்பூசணி பழம் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா? சுகர் பேஷன்ட் தர்பூசணி சாப்பிடலாமா?
தயிர் வெங்காயம் அல்லது ஆனியன் ரைத்தா மிகவும் பிடிக்கும் என்றால், நீங்கள் உங்கள் உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது. ஏனெனில், தயிர் என்பது இயற்கையிலேயே, நமது உடலுக்கு குளிர்ச்சித் தன்மையை அளிக்கும். வெங்காயம், நமது உடலுக்கு வெப்பத்தை அளிக்கவல்லது. தயிர் வெங்காயம் கலந்த கலவையை நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் பட்சத்தில், அது, தோல் அலர்ஜியை ஏற்படுத்தலாம். உடல் அரிப்பு, எக்ஸிமா, சோரியாசிஸ் போன்ற குறைபாடுகளை நமது உடலில் ஏற்படுத்தி விடும்.
ஒரு கோப்பை தயிர் உடன், மாம்பழ துண்டுகளை கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். ஆனால், வெங்காயத்தை போன்றே, மாம்பழமும், நமது உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். தயிர் உடன் மாம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள், உடலின் செயல்பாடுகள் தடைபடுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

தயிர் என்பது புரோட்டீன் அதிகம் உள்ள உணவுப்பொருள் ஆகும். இது மாடுகளில் இருந்து பெறப்படுவதால், இது விலங்கு புரத வகையை சேர்ந்தது ஆகும். அதேபோல், மீனில் அதிகளவில் புரதம் உள்ளது. இதுவும் விலங்கு வகை புரதம் ஆகும். எப்போதும் ஒரு விலங்கு வகை புரதத்துடன், இன்னொரு விலங்கு வகை புரதத்தையோ அல்லது தாவர வகை புரதத்துடன், இன்னொரு தாவர வகை புரதத்தையோ சேர்த்து சாப்பிடக் கூடாது. இது நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். தயிர் உடன் மீன் சேர்த்து சாப்பிட்டால், அஜீரணக் கோளாறு ஏற்படுவதுடன், வயிறு தொடர்பான உபாதைகளும் ஏற்படக் கூடும். மீனை போல் முட்டையிலும் அதிக புரதம் உள்ளது. அதனால் முட்டையையும் தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.
பால் மற்றும் தயிர் மாடுகளில் இருந்தே பெறப்படுவதால், இவை இரண்டும் விலங்கு வகை புரதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. பால் மற்றும் தயிரை சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு, உப்பிசம் மற்றும் வாய்வுக் கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்பட காரணமாக அமைந்து விடும்.
Also Read : இரவில் பல் துலக்கும் பழக்கம் இல்லையா..? இதை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்!
தயிர் உடன் உளுந்தம் பருப்பினால் செய்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது செரிமானத்தில் பிரச்சினையை உருவாக்கி இறுதியில், வயிற்று உப்பிசம், வாய்வுக் கோளாறு, வீக்கம், வயிற்றுப்போக்கு அல்லது பேதி போன்ற மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்.
தயிர் மற்றும் நெய் சேர்த்து சாப்பிடுவது ஆயுர்வேதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இரண்டும் பால் பொருட்களாக இருந்தாலும், அவற்றின் தன்மை வேறுபட்டது. தயிர் குளிர்ச்சியாக இருக்கும். அதே சமயம் நெய் உடலை சூடாக்கும். இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு நெய் பரோட்டாவை தயிருடன் சேர்த்து சாப்பிடும்போதெல்லாம் வயிற்று உப்புசம் அல்லது வாய்வு தொல்லை ஏற்படுவதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். வயிற்றில் இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக ஜீரணிப்பதில் சிக்கல் இருப்பதால் இது நிகழ்கிறது.

எண்ணெய் மிக்க உணவுகள் உடன் புரதம் நிறைந்த தயிர் சேர்த்து சாப்பிடும் போது, அது செரிமானத்தை தாமதப்படுத்துவது மட்டுமல்லாது, நம்மை விரைவில் சோர்வு அடைய செய்துவிடுகிறது. இதன் காரணமாகவே, எண்ணெய் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட்ட பிறகு, லஸ்ஸி போன்ற பானங்களை குடிக்கும்போது, வெகுவிரைவில் உறக்கம் நம்மை தழுவிக்கொள்வதற்கான காரணமும் இதுவே ஆகும்.
உப்பு இருந்தால் மட்டுமே பலர் தயிர் சாப்பிடுவார்கள், சிலர் தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால், ஆயுர்வேதத்தின்படி, தயிருடன் இந்த இரண்டையும் சேர்க்கக்கூடாது. ஏனென்றால் உப்பு மற்றும் சர்க்கரை இரண்டும் பதப்படுத்தப்படுகின்றன. இது தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை அழிக்கிறது. நீங்கள் விரும்பினால் கல் உப்பைப் பயன்படுத்துங்கள். இனிப்பு வேண்டுமென்றால், வெல்லத்துடன் கலந்து சாப்பிடலாம்.
Also Read : எப்பவும் கவலையா, பதற்றமாவே இருக்கா? இதை செஞ்சா மன அழுத்தத்துக்கும் குட் பை சொல்லலாம்..!
வெள்ளரிக்காயுடன் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள், காய்ச்சல் மற்றும் தோல் பிரச்சனைகளும் ஏற்படலாம். பலர் ரைத்தாவை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அதில் வெள்ளரிக்காய் மற்றும் வெங்காயம் சேர்க்கப்படுகின்றன. இதுவும் நல்லதல்ல. இது தடிப்புகள், அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சி போன்ற தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அதேப் போல் தயிருடன் சீஸ் சேர்த்தும் சாப்பிடக்கூடாது. தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். அதே சமயத்தில் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன், மீன், காடை, கவுதாரி என எந்தவொரு அசைவ உணவுடனும் தயிரை சாப்பிடகூடாது. மிக முக்கியமாக மீனையும் தயிரையும் ஒன்றாக சாப்பிட்டால் தோல் வியாதிகளான வெண் குஷ்டம் போன்றவை ஏற்படும்.
Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry