
முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்தவுடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடும். தண்ணீர் குடித்த பிறகுதான் நிற்கும். ஆனால், ‘சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது’ என்பது பலரின் அறிவுரை. இப்படி கூறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?
நமது உடல் ஆரோக்கியமாக இயங்குவதற்கு தண்ணீர் இன்றியமையாதது. பொதுவாக, ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் வறட்சி அடைவதை தடுக்கலாம் மற்றும் உடலின் பல செயல்பாடுகள் சீராக நடைபெறவும் உதவலாம்.
ஆயுர்வேதத்தின் படி, நாம் தண்ணீர் குடிக்கும் நேரம் கூட நமது ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். எல்லா நேரங்களிலும் தண்ணீர் குடிப்பது நல்லது என்ற பொதுவான கருத்தில் இருந்து ஆயுர்வேதம் சற்று மாறுபடுத்துகிறது. குறிப்பாக, உணவு உண்ணும் போதும், உணவு உண்ட உடனேயும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது ஆயுர்வேதம்.
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால், செரிமான சக்தி குறைகிறது. உணவை ஜீரணிக்கும் திறன் பலவீனமடைந்து உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வயிறு சரியில்லாதபோது, உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படும். ‘நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் (Hydrochloride and Dijestive Juices) சுரக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் (Dilute) போகும். அதன் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இது தொடர்ச்சியாக நிகழும்போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

வயிற்றின் அளவை தண்ணீர் பெரிதாக்கும். இது உணவுக்குழாயில் அழுத்தத்தை ஏற்படுத்தி, அமில ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால், உணவு விரைவாக வயிற்றில் சென்று இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தலாம். இதனால் உடல் எடை அதிகரிக்கும் என்று மருத்துவ சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், வயிற்றின் pH மற்றும் செரிமானத் திறன் மாறலாம். இதனால், சில ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் தடைகள் ஏற்படலாம்.
உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிக்கும்போது, வயிற்றில் உணவை செரிக்க உதவும் ‘இரைப்பை நெருப்பு’ எனப்படும் சக்தி குறைகிறது. இந்த நெருப்பு செரிமானத்திற்கு மட்டுமல்லாமல், குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவுகிறது. உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போனால், அது வயிற்றில் தங்கி அழுகிப்போய் வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.
Also Read : இரவில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழங்கள்! சாப்பிட்டால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா?
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால், வயிறு நிரம்பியது போன்ற உணர்வு தற்காலிகமாகத்தான் இருக்கும். இதனால் பசி நிறையாது. எனவே, அதிகமாக சாப்பிட வேண்டும் என்பது போன்ற பசியுணர்வு ஏற்படலாம். இதன் காரணமாகவே, உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அல்லது உணவு உண்ட பின் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. உணவு மிகவும் காரமாக இருந்தால், ஒரு சில வாய் தண்ணீர் குடிக்கலாம். மேலும் உணவை நன்றாக மென்று சாப்பிடுவதும் செரிமானத்திற்கு நல்லது.
சுருக்கமாகச் சொன்னால், தண்ணீர் உடலுக்கு மிகவும் முக்கியம் என்றாலும், அதை சரியான நேரத்தில், சரியான முறையில் குடிப்பது அவசியம். ஆயுர்வேதத்தின் படி, சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை பேணவும் உதவும்.

தண்ணீரை வேகமாக உறிஞ்சி குடிப்பது வீக்கம், அசௌகரியம் போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். மேலும், இது எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை சீர்குலைக்கும். மேலும் உடல் மிகவும் திறம்பட உறிஞ்சுவதற்கு அனுமதிக்க மெதுவாக தண்ணீரை உறிஞ்சுவது அவசியமாகிறது. மேலும், உணவுக்குப் பின் மிகவும் குளிர்ந்த நீரை உட்கொள்வது செரிமான நொதிகளை மெதுவாக்குகிறது. மேலும் இது வயிற்றுப் பிடிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு அறை வெப்பநிலை அல்லது வெதுவெதுப்பான நீரைத் தேர்ந்தெடுப்பது செரிமான அமைப்பை மேம்படுத்தும்.
எந்த விலங்கும் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காது. இயற்கையின் நியதியே அதுதான். ‘விக்கல் ஏற்படுகிறது, அடைத்துக்கொள்கிறது. அதனால்தான் குடிக்கிறோம்’ என்று சிலர் காரணம் சொல்வார்கள். இதற்கு, உடலுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம் அல்ல. நாம் சாப்பிடும் முறை தவறு என்றுதான் அர்த்தம். சாப்பிடும்போது நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் விக்கல் எடுக்காது. தண்ணீர் குடிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. அதையும் மீறி விக்கல் வந்தால் கொஞ்சம் குடித்துக்கொள்ளலாம்.
Also Read : மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இந்த ஹார்மோன் பற்றி தெரியுமா? அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். உடலில் தண்ணீர் வற்றி, தொண்டை வறண்டு, தாகம் எடுக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கக் கூடாது. அப்படி உடலை வறட்சியாகவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக்கல் உருவாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
‘தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்’ ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு. தாகம் எடுக்கும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்க வேண்டும், அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இன்று நாம் வேலை பார்க்கும் குளிரூட்டப்பட்ட அறைகளில் தாகம் எடுப்பதே இல்லை. அதற்காக தாகம் எடுக்கும்போதுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.

ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடித்ததால் யாருக்கும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதில்லை. ஆனால், குறைவாகக் குடிப்பதால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தண்ணீர் நம் உடலின் செல்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி, செல்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள உதவும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கழிவுகள் அப்படியே தங்கி, அவைதான் சிறுநீரகக் கற்களாக உருவாகின்றன. சிறுநீரகம் செயலிழந்தவர்கள், மூளையில் நீர் கோர்ப்பு (Hydrocephalus) போன்ற பிரச்னை உள்ளவர்கள், இதய பாதிப்புள்ளவர்கள் மட்டும் மருத்துவர்களின் அறிவுரையோடு குடிக்க வேண்டும்.’’
Summary :- உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது, வயிற்று அமிலம் மற்றும் செரிமான நொதிகளை நீர்த்துப்போகச் செய்கிறது. இதனால், செரிமானம் மெதுவாகும். சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பது, உணவின் இயற்கையான செரிமானத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். இதனால் வயிறு உப்பசம் ஏற்படும், அசௌகரியமாக இருக்கும். உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அல்லது உணவுக்கு 30 நிமிடங்களுக்குப் பின், ஒன்று அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீர் அருந்துவது நன்மை பயக்கும் என ஆய்வுகளில் கூறப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry