குடிநீர் மூலம் பரவும் நோய்கள்: குழாய் நீர், ஆர்.ஓ. நீர், கிணற்று நீர் – எது சிறந்தது? 💧

0
83
Is your drinking water safe? Tap, well, or RO – know what’s healthy and what's harmful. Expert guide with BIS standards and health tips. This image was created using DALL·E AI.

நாம் தினமும் பருகும் குழாய் நீர், கிணற்று நீர், ஆழ்துளை கிணறு, ஆர்.ஓ. சுத்திகரிப்பு நீர் ஆகியவற்றில் எது பாதுகாப்பானது? எது தூய்மையானது? எதில் ஊட்டச்சத்துகள் உள்ளன? என்ற சந்தேகங்கள் எழுவது இயல்பாகும். இந்தக் கட்டுரையில் இதற்கான தெளிவான பதில்களைக் காணலாம்.

Also Read : ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கணும்? உடலுக்கு தண்ணீர் தேவையை எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா?

💧 தண்ணீரின் அடிப்படை

தண்ணீர் என்பது H₂O எனும் மூலக்கூறால் ஆனது. பூமியின் 71% பகுதி தண்ணீரால் ஆனது என்றாலும், மனிதர்களுக்குப் பயன்படும் தண்ணீர் 1% மட்டுமே. நம் உடலில் 60-70% தண்ணீர் உள்ளதால், தினமும் குடிக்கும் நீரின் தரம் மிக முக்கியமானது.

🧪 குடிநீரின் தரத்தைக் கண்டறியும் முறை

தேசிய தர நிர்ணய அமைப்பான Bureau of Indian Standards – IS 10500:2012 படி, குடிநீர் 60 வகை சோதனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அவற்றில் முக்கியமானவை:

  • pH அளவு: 6.5 – 8.5
  • மொத்த கரைந்த திடப்பொருட்கள் (TDS): 100 – 500 mg/L
  • 100 mg/L க்கு குறைவான TDS: உப்புகள் குறைவு
  • 500 mg/L க்கு அதிகமான TDS: கடின நீர்

ஒரு லிட்டர் தண்ணீரில் இருக்க வேண்டிய முக்கிய உப்புகள்:

          உப்புகள்

              அளவு (mg/L)

பைகார்பனேட்

200

கால்சியம்

200

மெக்னீசியம்

30

நைட்ரேட்

45

ஆர்சனிக்

0.01

செம்பு

0.05

குளோரைடு

250

சல்ஃபேட்

200

ஃபுளோரைடு

200

இரும்பு

0.3

பாதரசம்

0.01

துத்தநாகம்

5

 

⚠️ அதிக உப்புகள் உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள்:

  • ஃபுளோரைடு அதிகம்பல் பாதிப்பு (Fluorosis)
  • சோடியம் அதிகம்இரத்த அழுத்தம்
  • நைட்ரேட் அதிகம்சிறுநீரக பிரச்சனை, ‘புளூ பேபிசிண்ட்ரோம்
  • ஆர்சனிக் அதிகம்தோல் வெண்புள்ளிகள்
  • கால்சியம் குறைவுஎலும்பு மெலிவு
  • TDS மிகக் குறைவுநரம்பு பாதிப்பு
A shocking disease outbreak raises serious concerns about our daily drinking water. Should you trust tap, well, or RO water? Find out which one is safest. This image was created using DALL·E AI.

💦 நீர் வகைகள் – சாதக பாதகங்கள்

✅ குழாய் நீர்

  • சாதகம்: குளோரின்/ஓசோன் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது.
  • பாதகம்: குழாய்கள் கசிவால் மாசுபட வாய்ப்பு. அனைத்து பாக்டீரியாவும் அழிக்கப்படாது.

✅ கிணறு/ஆழ்துளை கிணறு நீர்

  • சாதகம்: இயற்கை நீர்.
  • பாதகம்: நிலத்தடி உப்புகள், கழிவுநீர் கலப்பு. கொதிக்க வைக்க வேண்டும்.

✅ கொதிக்க வைத்த நீர்

  • சாதகம்: பாக்டீரியா பெரும்பாலானவை அழிக்கப்படும்.
  • பாதகம்: சில வைரஸ்கள் உயிர்வாழ வாய்ப்பு உள்ளது.

✅ ஆர்.ஓ. நீர்

  • சாதகம்: பாக்டீரியா, நச்சுகள் அகற்றம்.
  • பாதகம்: உப்புகள், தாதுக்கள் அகற்றப்படுவதால் உடலுக்கு தேவையான சத்துகள் குறைவாகலாம். TDS குறைவால் மிதமான தலைசுற்றல், உணர்வின்மை ஏற்படலாம்.

✅ பாட்டிலில் கிடைக்கும் நீர்

  • சாதகம்: RO மற்றும் பிற முறைகள். சிலவற்றில் தாதுக்கள் சேர்க்கப்படுகின்றன.
  • பாதகம்: உற்பத்தி தேதி, பாட்டிலின் தரம், காலாவதி தேதி கவனிக்கப்பட வேண்டும்.

✅ காய்ச்சி வடிகட்டிய நீர்

  • சாதகம்: மிகத் தூய்மை நீர்.
  • பாதகம்: ஊட்டச்சத்துகள் இல்லாத நீர். ஆய்வகங்களில் மட்டுமே பயன்படுகிறது.

👨‍⚕️ மருத்துவர் பரிந்துரை

மருத்துவர் அவினாஷ் கூற்றுப்படி, தற்போது எந்த சுத்திகரிப்பு முறையாலும் நீர் முழுமையாக பாதுகாப்பாக மாறிவிடாது. எனவே, நீரை முதலில் காய்ச்சி, பிறகு ஒரு நல்ல தரமான வடிகட்டியில் வடிகட்டி குடிப்பதே சிறந்தது.

🔍 குடிநீரின் தரத்தை தெரிந்து கொள்வது எப்படி?

1. சுவை மாறுபட்டிருந்தால் கவனிக்கவும்.
2. நிறம், தெளிவுத்தன்மை பரிசோதிக்கவும்.
3. குழாய்களில் கறைகள் ஏற்பட்டால் கவனிக்கவும்.
4. வாடை (அழுகிய வாசனை) இருந்தால் உடனே பரிசோதிக்கவும்.

✅ முடிவு

உங்கள் குடிநீர் உங்கள் ஆரோக்கியத்தின் முதற்கட்ட பாதுகாப்பு. நீர் என்பது வாழ்க்கையின் அடிப்படை. தினமும் நம் உடலில் செரிமானம் முதல் நரம்பியல் செயல்பாடுகள் வரை நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, பாதுகாப்பான மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ள நீரைத் தேர்வு செய்து பருகுங்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry