உங்க இதயம் ஆரோக்கியமாக இருக்குதா? வீட்டிலேயே இந்த சோதனைகளை செய்து பாருங்க!

0
297
Heart disease is the leading cause of death for both men and women. Take steps today to lower your risk of heart disease. Heart, illustration.

‘Use Heart for Action’ என்ற கருப்பொருளுடன், இந்த ஆண்டு உலக இதய தினம்(World Heart Day 2024) இன்று கொண்டாடப்படுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது. ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் திசுக்களில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றும் வேலைகளை செய்வதன் மூலம் உடலில் உள்ள மற்ற அனைத்து திசுக்களையும் இதயம் பாதுகாக்கிறது.

வாழ்வியல் மற்றும் உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சமீப காலமாக மாரடைப்பு, இதய வால்வு சுருக்கம் உள்ளிட்ட பல்வேறு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக சைலன்ட் அட்டாக் எனும் மாரடைப்பு வயது வரம்பின்றி மனித உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்தியாவில் மொத்த உயிரிழப்புகளில் 28.1% பேர் மாரடைப்பால் மரணமடைவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கருவறை தொடங்கி ஓய்வின்றி உழைக்கும் ஓர் உறுப்பு இதயம். இதய ஆரோக்கியத்தை வைத்து தான் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியம் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான முக்கிய அம்சம், இதய ஆரோக்கியத்தின் அடிப்படையில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதாகும். உடல் பரிசோதனை அல்லது இதய மருத்துவரைப் பார்ப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தின் நிலையைப் பெறுவதற்கான மிக உறுதியான வழியாகும். ஆனால் மருத்துவரை பார்க்கும் முன் இதய ஆரோக்கியத்தைப் பற்றிய ஆரம்பநிலையைத் தெரிந்து கொள்வதற்கான வழிகளும் உள்ளன.

Human heart cross section, cardiovascular system diagram isolated on white.

இதய ஆரோக்கியத்தை சோதிக்கும் பல கருவிகளை நாம் எளிதில் இப்போது வாங்கலாம். ஸ்மார்ட் வாட்ச்சுகளே நம்முடைய இதயத் துடிப்பு முதல் இதயம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது. ஆனால் இதுபோன்ற கருவிகள் எதுவுமே இன்றி இதய ஆரோக்கியத்தை வீட்டிலேயே சோதிக்கும் பல வழிகள் உள்ளது.

படிக்கட்டு சோதனை

படிக்கட்டு சோதனை மூலம் இதய ஆரோக்கியம், உடல் ஸ்டாமினா பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடியும். சீரான வேகத்தில் படிக்கட்டுகளில் ஏறி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பார்ப்பதுதான் படிக்கட்டு சோதனை. நல்ல இதய ஆரோக்கியம் கொண்ட ஒரு நபர் தனது இதயத் துடிப்பு சற்று உயர்ந்ததாக உணரலாம். ஆனால் மூச்சுத் திணறல், மார்பு வலி அல்லது இலக்கை எட்டி முடிப்பதில் சிரமம் ஏற்பட்டால் இதயத்தில் சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்.

Also Read : தினமும் நாக்கை சுத்தம் செய்வது அவசியமா? நாக்கை க்ளீன் பண்ணுவதால இவ்வளவு நன்மைகளா? Boost oral health by cleaning tongue!

இதயத் துடிப்பைச் சரிபார்த்தல்

ஓய்வில் இருக்கும் போது இதயம் நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஆக்சிமீட்டர் அல்லது ஸ்மார்ட்வாட்ச் போன்ற தொழில்நுட்ப சாதனத்தின் மூலம் இதயத் துடிப்பைப் பெறலாம். ஆனால் விரல்களால் தமனியைத் தட்டுவதன் மூலமும் இதைச் செய்யலாம். துடிப்பை தொட்டு உணர்வதற்கான சில சிறந்த இடங்களில் கழுத்தில் உள்ள கரோடிட் தமனி மற்றும் மணிக்கட்டில் உள்ள ரேடியல் தமனி ஆகியவை அடங்கும்.

Illustration of the blood verticalessels of the neck.

செயலற்ற நிலையில் இருக்கும்போது அல்லது மன அழுத்தம் இல்லாத நேரத்திலோ துல்லியமான ஓய்வெடுக்கும் இதயத் துடிப்பை கண்டறியலாம். சாதனங்கள் மூலமாகவோ அல்லது நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்பதை எண்ணி தெரிந்துகொள்ளலாம். ஓய்வெடுக்கும் நேரத்தில் நல்ல இதய ஆரோக்கியம் கொண்ட நபருக்கு, ஒரு நிமிடத்திற்கு 60-100 துடிப்புகள் வரை இருக்க வேண்டும்.

உடற்பயிற்சியின் போது இதயத் துடிப்பு

இதய ஆரோக்கியத்தை சோதிக்க நீங்கள் செய்யக்கூடிய மற்றொரு விஷயம், உடற்பயிற்சியின் போது இதயத் துடிப்பை சோதிப்பதாகும். உடற்பயிற்சியின் போது உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, உடல் இயற்கையாகவே உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும். மோசமான இதய ஆரோக்கியம் கொண்ட ஒரு நபர், அதே வயது மற்றும் நல்ல இருதய ஆரோக்கியத்துடன் உள்ள ஒருவருடன் ஒப்பிடும்போது, லேசான உடற்பயிற்சியின் போதே அதிகபட்ச இதயத் துடிப்பை அனுபவிக்கலாம்.

Also Read : சீஸன் மாறுவதால் சளி, காய்ச்சலா? சுக்கு மல்லி காபி குடிங்க..! Recipe & Health benefits of Sukku Coffee!

இதய ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால், உங்கள் இரத்த ஓட்டமும் நன்றாக இருக்கும், அதாவது இரத்தம் கடினமாக உழைக்கத் தேவையில்லை. இதய ஆரோக்கியம் மோசமாக இருந்தால், இரத்தத்தில் உள் எதிர்ப்பு அதிகமாக இருக்கலாம், இதற்கு ஈடுசெய்ய இதயம் வேகமாக வேலை செய்ய வேண்டும்.

உடற்பயிற்சியின் போது அதிகபட்ச இதயத் துடிப்பு வயது, பாலினம், தீவிரம், உடல்நிலை மற்றும் எடை போன்ற காரணிகளின் அடிப்படையில் மாறுபடும். இதயம் அல்லது இதய அமைப்பு தொடர்பான பிரச்சனை இருக்கலாம் என நினைத்தால், உடனடியாக இதய சிகிச்சை நிபுணரின் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம். இன்றைய காலகட்டத்தில் இதயம் சார்ந்த நலனில் அக்கறை கொள்ள வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் எண்ணெய்களை விட நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் நாம் உண்ணும் உணவில் பூண்டு, வால்நட், பாதாம் பருப்பு, அவகேடா, சிவப்பு திராட்சை, தக்காளி, ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி போன்ற பெரி பழங்கள் மற்றும் டார்க் சாக்லேட் , மீன் வகைகள், குறிப்பாக சால்மன் மீன், மத்தி மீன், கானாங்கெளுத்தி போன்ற உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது இதய ஆரோக்கியம் மேம்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அது மட்டுமல்லாமல் மன அழுத்தம் என்பது இதய நோய் ஏற்படுவதற்கான மற்றொரு முக்கிய காரணியாக உள்ளது எனக்கூறும் மருத்துவ ஆய்வாளர்கள், மனம் சார்ந்த பிரச்சனைகள் தீர நல்ல தூக்கம், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மனதுக்குப் பிடித்த பாடல்கள் கேட்பது, உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செயல்களில் ஈடுபடுவது போன்று அவ்வப்போது உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலமும் இதய நோய் வருவது தடுக்கப்படும் எனவும் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதய ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்த  சில உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்வதும் சில உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதும் அவசியமானது. அந்த வகையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய்  பதார்த்தங்கள், மைதா உணவுகள் ,கேஸ் நிரப்பப்பட்ட குளிர்பானங்கள், உப்பு நிறைந்த உணவுகள் போன்றவற்றை போதிய வரையில் தவிர்ப்பது நல்லது . இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவற்றை முற்றிலும் தவிர்ப்பதே சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Image Source : Getty Image

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry