எக்ஸ் தளத்தில் இருந்து விலகும் பயனர்கள்! ப்ளூஸ்கை, த்ரெட்ஸ் தளத்தில் லட்சக்கணக்கில் இணைகின்றனர்!

0
46
On the day after the election, Nov. 6, X experienced its largest user exodus since Elon Musk bought the platform in 2022. And now, users are flooding to alternative text-based social media apps like Bluesky and Instagram’s Threads.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள் நிலையில், அவரது நண்பர் எலான் மஸ்குக்கு சொந்தமான ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் இருந்து பயனர்கள் விலகுவது அதிகரித்துள்ளது. அவர்கள் ப்ளூஸ்கை மற்றும் த்ரெட்ஸ் போன்ற தளங்களில் இணைந்து வருகின்றனர்.

இதனை சமூக வலைதள நிறுவனங்களான ப்ளூஸ்கை மற்றும் த்ரெட்ஸ் உறுதி செய்துள்ளன. கடந்த ஒரு வார காலத்தில் ப்ளூஸ்கை தளத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் பயனர்கள் புதிதாக இணைந்துள்ளனர். அதே போல நவம்பர் மாத முற்பாதியில் மட்டும் சுமார் 275 மில்லியன் ஆக்டிவ் பயனர்களை த்ரெட்ஸ் கொண்டுள்ளது.

அதிபராக தேர்வாகி உள்ள  குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். டிரம்ப் வெற்றிக்கு பெரிய அளவில் செலவு செய்த எலான் மஸ்க் தீவிரமாக பணியாற்றினார். டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து மஸ்க்குக்கு அரசு செயல்திறன் மேம்பாட்டு துறை தலைமை பதவியை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : பைக் ஓட்டுவதால் முதுகு வலி வந்து அவதிப்படுறீங்களா? இந்த ட்ரிக்ஸை மறக்காம ஃபாலோ செய்தால் வலி பறந்துபோகும்!

இந்நிலையில் அதிபர் தேர்தலில் மஸ்க்கின் செல்வாக்கை பயன்படுத்தியதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறுகின்றனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவறான தகவல் மற்றும் வெறுப்பு பேச்சு போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி பயனர்கள் எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர். டிஜிட்டல் நுண்ணறிவு தளமான சிமிலர்வெப் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘தேர்தலுக்கு அடுத்த நாள் முதல் எக்ஸ் தளத்தை வலைதளம் மூலமாக பயன்படுத்தும் 1.15 லட்சம் பேர் தங்களின் கணக்கை செயலிழக்க செய்துள்ளனர். இதில், மொபைல் செயலி மூலம் எக்ஸ் பயன்படுத்தி செயலிழக்க செய்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Threads

அதன் தொடர்ச்சியாக 200 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி கார்டியன்’ ஆங்கில செய்தி நிறுவனம் ‘எக்ஸ்’ தளத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. ‘எக்ஸ் என்பது ஒரு நச்சு ஊடக தளம்’ என ’தி கார்டியன்’ முன்வைத்திருக்கும் விமர்சனத்தை வரவேற்றும், கண்டித்தும் கருத்துகளை பதிவிடும் நெட்டிசன்களுக்கு மத்தியில் மோதல் வலுத்துள்ளது! இந்த நாளிதழுக்கு ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் 80 கணக்குகள் உள்ளன. இவற்றை 27 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

BATH, UNITED KINGDOM – NOVEMBER 12: Copies of the print edition of The Guardian newspaper are displayed in a newspaper stand on November 12, 2024 in Bath, England. Following the US election the left leaning Guardian has announced it will no longer post any content on the US online social media and social networking site ‘X’ (formerly known as Twitter). (Photo by Anna Barclay/Getty Images)

எக்ஸ் நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க், கடந்த 2022ம் ஆண்டு வாங்கிய பிறகு அதிகளவிலான பயனர்கள் வெளியேறியது இதுவே முதல்முறையாகும். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டண வசூல் வரையில் அதை சொல்லலாம். ட்விட்டரின் பெயரையும் எக்ஸ் என அவர் மாற்றினார். இருப்பினும் இன்னும் உலக அளவில் செய்திகள், அரசியல் நிகழ்வுகள், பிரபலங்களின் அறிவிப்புகளை அறிய இன்னும் எக்ஸ் தளம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry