
சர்க்கரை வியாதியுடன் அவதிப்படுபவர்கள் என்ன மாதிரியான உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு மருத்துவர்களும் அறிவுரை கூறி வருகின்றனர். அந்த வகையில் இனிப்பாகவே இருந்தாலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், 5 உணவுகள் குறித்து கோயம்புத்தூரைச் சேர்ந்த டாக்டர் அருண் கார்த்திக் கூறியுள்ளார்.
பொதுவாக இனிப்பாக இருக்கும் பொருட்கள் உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இது அனைத்தும் உண்மை இல்லை. ஒருசில உணவுப் பொருட்கள் இனிப்பாக இருந்தாலுமே, உடலில் சர்ககரையின் அளவை உயர்த்தாது. மாறாக அதிக சர்ககரையை குறைக்கும் தன்மையுடன் இருக்கின்றன.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரை இருந்தாலும், இதில் மிகவும் குறைவான கலோரிகளே இருக்கின்றன. இதில் ஃபைபர் கண்டன்ட் அதாவது நார்ச்சத்து அதிகம். இது குடலில் இருக்கும் நுன்னுயிரிகளுக்கு பயன்படுகிறது. அதிக பசியை தாங்கக்கூடிய சக்தி சர்க்கரைவள்ளி கிழங்கிற்கு உண்டு. இதில் மெக்னீசியம், வைட்டமின் ஏ இருக்கிறது. இந்தை கிழங்கை இட்லி மாதிரி ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. மாறாக தண்ணீரில் வேகவைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிடும்போது அதில் இருக்கும் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாக வாய்ப்புள்ளது. அதேபோல் இதனை தோலோடு சாப்பிடும்போது அதில் இருக்கும் மெக்னீசியம் என்ற தாதுப்பொருள் நன்மையை கொடுக்கிறது.
சிகப்பு பூசணிக்காய் அல்லது பரங்கிக்காய்
பூசணிக்காய் சாம்பார், அல்லது பொரியல் செய்தால் அதில் இனிப்பு இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் இருக்கும் இனிப்பு உடலில் சர்க்கரையின் அளவை ஏற்றாது. 100 கிராம் சிகப்பு பூசணிக்காயில் 30-50 கலோரிகள் தான் இருக்கிறது. சர்க்கரை அளவை அதிகரிக்கும் தன்மை 50-60 என அதிகமாக இருந்தாலும் கூட, அதன் கிளைசீமிக் லோடு 5 தான். இதில் 90 சதவீதம் நீர்ச்சத்தும், 5 சதவீதம் நார்ச்சத்தும் குறைவான மாவுச்சத்தும் இருப்பதால், இது சர்க்கரையின் அளவை அதிகரிக்காது. 100 கிராம் பூசனி சாப்பிட்டால் 2 நாளைக்கு தேவையான வைட்டமின்கள் கிடைத்துவிடும்.
கேரட்
நம் அனைவருக்கும் தெரியும் கேரட் ஒரு இனிப்பு பொருள். ஆனால் இதில் மிக மிக குறைவான 3-4 கிளைசீமிக் லோடு தான் இருக்கிறது. 100 கிராம் கேரட்டில் 30 கலோரிகள் தான் இருக்கிறது. இது வைட்டமின் ஏ நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் ஜூஸாக எடுத்துக்கொள்ளக்கூடிய உணவுகளில் கேரட்டும் ஒன்று. இது கண்களுக்கும் மிகவும் நல்லது.
ஆரஞ்சு பழம்
நீரிழிவு நோயாளிகள் ஆரஞ்சு பழம் சாப்பிடலாம். 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 50 கலோரிகள் தான் வரும். இதில் ஃபைபர் கண்டென்ட் நிறைய உள்ளது. குறிப்பாக பெக்டின் என்ற ஒரு ஃபைபர் இருக்கிறது. இது கேன்சரை கட்டுப்படுத்தும் தன்மை உடையதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆரஞ்ச் பழத்தை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். குறிப்பாக காலை நேரங்களில் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அப்படியே சாப்பிடுவது நல்லது. ஜூஸாக சாப்பிட கூடாது.
ஆப்பிள்
ஆப்பில் பழத்திலும் குறைவான கலோரிகள் தான் இருக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். இதில் இருக்கும் 3 கிராம் நார்ச்சத்து, குடல்வாழ் பாக்டீரியாவுக்கு ரொம்வும் நல்லது. உடலில் இன்ப்ளமேஷனை குறைத்து இன்சுலின் எதிர்ப்பு நிலையை குறைக்கக் கூடியது.
Courtesy : Dr. Arun Karthik Youtube Channel.
சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் எந்த விதமான உணவுகளை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு உணவிலும் குறிப்பிட்ட அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் இருக்கும். இது 55 என்ற அளவிற்கு குறைவாக இருந்தால், அந்த பொருட்களை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், 55-ஐ தாண்டி இருந்தால் அத்தகைய உணவுகளை தவிர்த்து விட வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்துகிறார்.
அந்த வகையில் வீட்டில் பயன்படுத்தக் கூடிய வெள்ளை சர்க்கரை, வெள்ளை அரிசி, மைதா, உருளைக் கிழங்கு, வெண் பூசணி, வாழை, சோடா, தேன் மற்றும் துரித உணவுகள் போன்றவற்றை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாது. இந்த அனைத்து உணவு பொருட்களிலும் கிளைசெமிக் இண்டெக்ஸின் அளவு சராசரியாக 75 முதல் 90 வரை இருக்கும்.
கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு குறைவாக இருக்கும், பருப்பு வகைகள், சுண்டல், பீன்ஸ், கோதுமை, பால், தயிர், வெண்ணெய் மற்றும் தேங்காய் போன்ற உணவு பொருட்களை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம். மேலும், பீட்ரூட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி, கீரை, மஷ்ரூம் போன்ற பொருட்களையும் சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
Courtesy : Dr. Karthikeyan Youtube Channel.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry