மும்பையைச் சேர்ந்த GTL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் செல்ஃபோன் டவர் அமைத்துள்ளது. 600க்கும் மேற்பட்ட செல்ஃபோன் டவர்களை காணவில்லை என அந்நிறுவனம் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
GTL Infrastructure Limited நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 26 ஆயிரம் செல்ஃபோன் டவர்களை நிறுவியுள்ளது. செல்ஃபோன் டவர்களை ஜிடில் நிறுவனம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்துக்குச் சொந்தமாக தமிழ்நாட்டிலும் சுமார் 6000 ஆயிரம் செல்ஃபோன் டவர்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 30 லட்சம் முதல் 40 லட்சம் ரூபாய் வரை மதிப்பு கொண்டவையாகும்.
இந்நிலையில், இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் 600-க்கும் அதிகாமன செல்போன் டவர்கள் திருடுபோயுள்ளதாக பல்வேறு ஊர்களில் புகார் அளித்துள்ளது. பெருநஷ்டம் காரணமாக தனியார் செல்போன் நிறுவனம் 2018ம் ஆண்டு தனது சேவையை நிறுத்தியது. இந்த 600 செல்போன் டவர்களும் அந்த நிறுவனம் பயன்படுத்தியவை ஆகும்.
பயன்பாட்டில் இல்லாதது மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக ஜிடிஎல் நிறுவனம் இந்த டவர்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. அண்மையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரை பராமரிப்பதற்காக, ஜிடிஎல் நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 2 வாரங்களுக்கு முன்பு சென்றுள்ளனர். ஆனால், அங்கு செல்போன் டவரை காணவில்லை. தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்ததில் 600க்கும் அதிகாமன டவர்கள் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இந்த நூதன கொள்ளை குறித்து டவர் நிறுவப்பட்டிருந்த ஊர்களில் காவல்நிலையத்தில் ஜிடிஎல் நிறுவனம் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த நிறுவனத்தை சார்ந்த எஸ்.கே.கோசல்குமார், சென்னிமலை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், பள்ளக்காட்டு தோட்டத்தில் 40 மீட்டர் உயர கோபுரம் தவிர, டீசல் ஜெனரேட்டர், மின் உற்பத்தி நிலையம், ஸ்டெபிலைசர்கள், பேட்டரி பேங்க், ஏர் கண்டிஷனர் ஆகியவை காணவில்லை, அவற்றை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று கூறியுள்ளார். பணிநிறுத்தம் காலத்தை ஒரு கும்பல் பயன்படுத்திக் கொண்டு பயன்பாட்டில் இல்லாத டவர்களை திருடிச் சென்றதாக நிறுவன அதிகாரிகள் கருதுகின்றனர்.
கண்காணிப்பு இல்லாததால் மொபைல்போன் டவர்கள் திருடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறுகின்றனர். அதேபோல் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஒரு கும்பல் செல்போன் டவர்களை திருடிச் சென்றிருப்பதாக ஜிடிஎல் நிறுவனம் கருதுகிறது. திருடுபோயுள்ள செல்போன் டவர்களின் மதிப்பு தோராயமாக ரூ.180 கோடி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry