இந்திய அரசு சார்பில் திரையுலகினரை கெளரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 1954 முதல் ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படம் எவை என நடுவர்களால் தேர்வுசெய்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், நடிகர் மாதவன் எழுதி, இயக்கி, நடித்திருந்த ராக்கெட்டரி படத்திற்கு, சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை சரிதத்தையொட்டி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கும் சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேசிய திரைப்பட விருதுகள் முழுப்பட்டியல்
விருதுகள்
சிறந்த நடிகர் – அல்லு அர்ஜூன் (புஷ்பா)
சிறந்த நடிகை – ஆலியா பட் (கங்குபாய் கத்யாவாடி)
சிறந்த படம் – ‘ராக்கெட்ரி; தி நம்பி எஃபெக்ட்’ (ஆர். மாதவன்)
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் – ஆர்.ஆர்.ஆர். (ராஜமெளலி)
சிறந்த நடனம் : ஆர்ஆர்ஆர்( பிரேம் ரஷித்)
சிறந்த சண்டை பயிற்சி: ஆர்ஆர்ஆர் ( கிங் சாலமன்)
சிறந்த தொழில் நுட்பம் : ஆர்ஆர்ஆர் ( ஸ்ரீனிவாஸ்)
சிறந்த துணை நடிகர் – பங்கஜ் திரிபாதி – (‘மிமி Mimi (இந்தி)’)
சிறந்த துணை நடிகை – பல்லவி ஜோஷி -( தி காஷ்மீர் பைல்ஸ் (இந்தி))
தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது – தி காஷ்மீர் பைல்ஸ்
சிறந்த குழந்தைகள் திரைப்படம் – காந்தி&கோ (குஜராத்தி)
சிறப்பு ஜூரி விருது – ‘Shershaah’ (இயக்குநர் விஷ்ணுவர்தன்)
சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது – மேப்பாடியான்
Feature Flims
ஸ்பெஷல் மென்ஷன்
நல்லாண்டி- கடைசி விவசாயி (தமிழ்)
இந்திரன்ஸ் – ‘Home’ (மலையாளம்)
சிறந்த ரீஜனல் திரைப்படங்கள்
சிறந்த தமிழ் திரைப்படம் – கடைசி விவசாயி (மணிகன்டன்)
சிறந்த குஜராத்தித் திரைப்படம் – Last Film Show (சல்லோ ஷோ)
சிறந்த கன்னட திரைப்படம் – ‘777 சார்லி’
சிறந்த மலையாள திரைப்படம் – ‘Home’ (ரோஜின் பி.தாமஸ்)
சிறந்த இந்தி திரைப்படம் – ‘சர்தார் உதம்’ (சுஜித் சிர்கார்)
டெக்னிகல் விருதுகள்
சிறந்த பாடல் இசைக்கான விருது – தேவிஶ்ரீ பிரசாத் ( ‘புஷ்பா’ )
சிறந்த பின்னணி இசை – கீரவாணி (ஆர்.ஆர்.ஆர்)
சிறந்த பின்னணி பாடகி – ஸ்ரேயா கோஷல் (இரவின் நிழல்- மாயவா சாயவா)
சிறந்த ஒளிப்பதிவு – அவிக் முகோபாத்யாய் (சர்தார் உதம்)
சிறந்த படத்தொகுப்பு – சஞ்சய் லீலா பன்சாலி (கங்குபாய் கத்யாவாடி)
Non – Feature Flims
சிறந்த கல்வித் திரைப்படம் – ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ (இயக்குநர் லெனின்)
சிறந்த இசையமைப்பாளர் – ஸ்ரீகாந்த் தேவா (’கருவறை’ – குறும்படம்)
தேசிய விருது பெற்ற முதல் தெலுங்கு ஹீரோ என்ற வரலாற்று சாதனையை அல்லு அர்ஜூன் பெற்றுள்ளார். 68 ஆண்டுகளில் இதுவரை எந்த தெலுங்கு ஹீரோவும் தேசிய விருதை பெறாத நிலையில் அல்லு அர்ஜூன் இந்த சாதனையை பெற்றிருக்கிறார். புஷ்பா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அல்லு அர்ஜூன் வென்ற நிலையில், இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் தேசிய விருதுகளை வென்றுள்ளனர். இதன் மூலம் புஷ்பா படம் 3 தேசிய விருதுகளை குவித்துள்ளது. ஏக்காகவுன் திரைப்படத்திற்காக பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry