மலக்குடல் புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு! மருத்துவ உலகில் புதிய மைல் கல்!

0
357

மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோஸ்டார்லிமாப் எனும் புதிய மருந்தை தொடர்ந்து ஆறு மாதம் எடுத்துக் கொண்ட பிறகு முற்றிலுமாக குணமடைந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறும்போது, “மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 நோயாளிகள் இந்தப் பரிசோதனைக்காக எடுத்து கொள்ளப்பட்டனர். இவர்கள் இதற்கு முன்னர் புற்றுநோயை குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொண்டவர்கள். அதன் பின்னரே அவர்களுக்கு இந்த மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இதன் முடிவில் ஆச்சரியம் காத்திருந்தது. இந்த சிகிச்சையிலேயே அவர்கள் முழுமையாக குணமாகினர். அவர்களுக்கு மேற்கொண்டு சிகிச்சை தேவையில்லை. அனைத்து நோயாளிகளுக்கு புற்றுநோய் முழுமையாக குணமாகியுள்ளது.

மோனோக்ளோனல் ஆன்டிபாடியான தோஸ்டார்லிமாப் எடுத்துக்கொண்ட 18 நோயாளிகளுக்கும் 6 மாதங்களுக்குப் பிறகு, MRI ஸ்கேன், PET ஸ்கேன், பயாப்ஸி, எண்டோஸ்கோபிக் பரிசோதனைகள் மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 18 பேரும் மலக்குடல் புற்றுநோயில் இருந்து பூரண குணமடைந்தது தெரியவந்தது.

நியூயார்க்கின் மெமோரியல் ஸ்லோன் கெட்டரிங் கேன்சர் சென்டரில் நடத்தப்பட்ட பரிசோதனையில்தான் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான ஆய்வறிக்கை American Society of Clinical Oncology -ன் வருடாந்திர கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. மேலும், The New England Journal of Medicine-ல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு Glaxo SmithKline என்ற மருந்து நிறுவனம் நிதியுதவி செய்துள்ளது.

Source : PD-1 Blockade in Mismatch Repair–Deficient, Locally Advanced Rectal Cancer

வரலாற்றில் முதல்முறையாக புற்றுநோய் தீர்க்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது மகிழ்ச்சி என்றாலும், மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட உள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறு எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகள் மேற்கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய்க்கு இந்த மருந்து எந்தளவுக்கு தீர்வாக இருக்கும் என்பதை வரையறுக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

Sascha Roth, the first patient in the trial

இந்த மருந்து இன்னும் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகளுக்கு வழக்கப்பட்டு, தொடர் பரிசோதனைகள் நடத்தப்படும். அதன் பின்னரே பொதுவெளிக்கு வரும் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry