கோடை விடுமுறை முடிந்து பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் ஒருவாரத்திற்குப் பாடங்களுக்குப் பதிலாக புத்துணர்ச்சிப் பயிற்சிகள் வழங்கப்படும் என கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதனால் மாணவ, மாணவிகளும் பள்ளிக்குச் செல்ல ஏதுவாக உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை மீண்டும் தொடங்க உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று (ஜூன் 12)கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, விடுமுறை மற்றும் முகூர்த்த நாட்களில் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகள் உடன் கூடுதலாக 400 பேருந்துகள் கடந்த வாரம் இயக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நாளைய தினம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்க உள்ளதால், இன்றைய தினம் (12.06.2022) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு கூடுதலாக 1,450 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry