திருவள்ளூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர், திருத்தணி தெக்கலூர் காலனியைச் சேர்ந்த விவசாயி பூசனம் – முருகம்மாள் தம்பதியின் 17 வயதான ஒரே மகள், திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில்(Sacred Heart Girls Hr. Sec.School) விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
Also Read : கள்ளக்குறிச்சி வன்முறை குறித்து சிபிஐ விசாரணை! அரசு தயங்குவது ஏன் என ஜெயக்குமார் கேள்வி?
விடுதியில், இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் அந்த மாணவி பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்தச் சென்று விட்ட நிலையில், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யப்ரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண், சிபிசிஐடி டிஎஸ்பி செல்வகுமார் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டதுடன், விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் முதல் கட்ட விசாரணை நடத்தியுள்ளனர்.
மாணவி இறந்தது குறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை, மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி மாணவியின் உறவினர்கள் தெக்கலூரில் பேருந்துகளைச் சிறைபிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தெக்கலூர் கிராமத்திலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், காவல்துறையினர் பள்ளியில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதுபோல் மாணவியின் சொந்த ஊரான தெக்கலூர் கிராமத்திலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தரப்பில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, கீழச்சேரி பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டிஐஜி சத்யபிரியா தகவல் தெரிவித்துள்ளார். மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கும் என்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி கல்யாண் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் கடந்த 13-ந் தேதி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், தற்போது திருவள்ளூர் மாணவி தற்கொலை செய்துகொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்கள், தற்கொலை எண்ணம் ஏற்படுவோர், SNEHA தற்கொலை தடுப்பு மையம் – 044 2464000, மாநில தற்கொலைத் தடுப்பு மையம் – 104ஐ தொடர்பு கொள்ளவும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry