நெற்பயிரை காப்பபற்ற கோவை வேளாண் பல்கலை. முக்கிய அட்வைஸ்! வேளாண் படிப்புகளுக்கு 10ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியீடு!

0
67

கோவையில், வேளாண் பல்கலைகழகத்தில், துணை வேந்தர் கீதாலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தென்மேற்கு பருவ மழையைப் பொறுத்தவரை தமிழகத்தில் 90% அதிகம் பதிவாகியுள்ளது. அதே சமயம் செங்கல்பட்டு, கள்ளகுறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை அளவு குறைந்துள்ளது.

இந்த மழையினால் நிலத்தடி நீர் ஓரளவு உயர்ந்துள்ளது. இந்த மாதம் மூன்றாவது வாரத்தில் ஒரு மழைப்பொழிவு இருக்கும். நீர்பாசனம் அதிகம் உள்ள இடங்களில் வடிகால் வசதி செய்ய வேண்டும். தக்காளி போன்ற செடிகள் மழை அதிகமாக வரும்போது செடியின் பாரம் தாளாமல் மண் மீது விழுந்து அழுகிவிடும். இதனால் மழைக்காலங்களில் தக்காளியின் விலை அதிகரிக்கும்.

13 பட்டப் படிப்புகளுக்கு 10ம் தேதி அன்று ரேங்க் லிஸ்ட் வெளியிட முடிவு செய்து உள்ளோம். கிட்டத்தட்ட 6500 இடங்களுக்கு சுமார் 38 ஆயிரம் விண்ணப்பித்து உள்ளனர். ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்பட்டு அக்டோபர் மாதம் வகுப்புகள் தொடங்கும். பட்டயப் படிப்புகளை(டிப்ளமோ) பொறுத்தவரை, அக்ரியில் 760 இடங்களும், ஹார்ட்டிகல்ச்சரில் 400 இடங்களும், வேளாண் பொறியியலில் 40 இடங்களும், தமிழ் வழி பட்டயப்படிப்பில் 80 இடங்களும் உள்ளன. TNAU இணையதளத்தில் இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Also Read : ஜாலியாக கைகோர்த்தபடி ‘கேட் வாக்’ செய்த வானதி சீனிவாசன்! ஆடை அலங்கார அணி வகுப்பில் உற்சாகம்!

செங்கல் சூளை வைத்து மூடபட்ட இடத்தில் விவசாயம் செய்து இயலுமா என்ற கேள்விக்கு, மேல் உள்ள மண் தான் வளமான மண், அதனை எடுத்து செங்கல் செய்து விட்டதால் கீழே உள்ள மண் வளமாக இருக்காது. எனவே தமிழக அரசு “waste land development” திட்டங்கள் மூலம் அங்கு மரங்கள் நட முயற்சி எடுத்து வருகிறது. நிலத்தடி நீர்மட்ட கணக்கெடுப்பை பொறுத்தவரை துல்லியமாக கணக்கெடுக்கும் அளவிற்கு நீரின் மட்டம் உயரவில்லை, ஆனால் நிலத்தடி நீர் உயர்ந்துதான் உள்ளது.” இவ்வாறு துணை வேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry